Header Logo
SLIC
Rhythams of Lanka
விளையாட்டு
இந்திய இளையோர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

Feb 5, 2026 - 07:27 AM

இந்திய இளையோர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி
Mobitel inner

19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் சிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. 

சிம்பாப்வேயின் ஹராரேவில் இன்று இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 2-வது அரையிறுதி போட்டி நடைபெற்றது. 

இதில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ஓட்டங்களை குவித்தது. அந்த அணியின் பைசல் ஷினோசடா 93 பந்தில் 110 ஓட்டங்கள் விளாசினார். 

மற்றொரு வீரர் உஜைருல்லா நியாஜாய் ஆட்டமிழக்காமல் 86 பந்தில் 101 ஓட்டங்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் தீபேஷ் தேவேந்திரன், கனிஷ்க் சவுகான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

பின்னர் 311 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஆரோன் ஜார்ஜ்- வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 

சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 33 பந்தில் 68 ஓட்டங்களை சேர்த்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவரில் 90 ஓட்டங்களை சேர்த்தது. 

அடுத்து கேப்டன் ஆயுஷ் மாத்ரே களம் இறங்கினார். இவர் 59 பந்தில் 62 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் விளையாடிய ஆரோன் ஜார்ஜ் அபாரமாக விளையாடி 95 பந்தில் சதம் விளாசினார். 

தொடர்ந்து விளையாடிய அவர் 104 பந்தில் 115 ஓட்டங்கள் சேர்த்தார். விஹான் மல்ஹோத்ரா 47 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 41.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

இறுதிப் போட்டியில் எதி்ர்வரும் 6-ஆம் திகதி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியும் ஹாராரேயில் நடக்கிறது.


MOST READ

காணொளி
கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

Mobitel Upahara