Header Logo

விளையாட்டு
ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த சூர்யவன்ஷி!

Feb 7, 2026 - 08:21 AM -

0

ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த சூர்யவன்ஷி!

சிம்பாப்வேயில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 6-வது முறையாக செம்பியன் பட்டம் வென்றது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான பீகாரை சேர்ந்த 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 15 பவுண்டரி, 15 சிக்சருடன் 175 ஓட்டங்கள் குவித்து பல்வேறு வியப்பூட்டும் சாதனைகளை படைத்துள்ளார். 

சூர்யவன்ஷியின் 175 ஓட்டங்கள், சீனியரோ அல்லது ஜூனியரோ ஒட்டுமொத்த ஐ.சி.சி. இறுதிப்போட்டிகளில் ஒரு வீரரின் அதிகபட்சமாக பதிவாகியிருக்கிறது. 

இளையோர் ஒரு நாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் (15 சிக்சர்) சொந்தக்காரர் ஆனார். 

இதற்கு முன்பும் இச்சாதனை சூர்யவன்ஷி வசமே (கடந்த டிசம்பரில் ஐக் கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 14 சிக்சர்) இருந்தது. 

இளையோர் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் சூர்யவன்ஷி 10-க்கு மேல் சிக்சர் அடிப்பது இது 5-வது முறையாகும். மற்ற துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சேர்ந்தே 3 முறை தான் இவ்வாறு அடித்திருக்கிறார்கள். 

சூர்யவன்ஷி 55 பந்துகளில் சதத்தை பெற்றார். இளையோர் உலகக் கிண்ணத்தில் ஒரு வீரரின் 2-வது அதிவேக சதம் இதுவாகும். 

இதே உலகக் கிண்ணத்தில் ஜப்பானுக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் வில் மலாஜ்சுக் 51 பந்தில் சதம் எடுத்ததே சாதனையாக உள்ளது. 

சூர்யவன்ஷி சிக்சர், பவுண்டரிகள் மூலம் மட்டுமே 150 ஓட்டங்களை திரட்டி விட்டார். இளையோர் போட்டியில் இதுவும் ஒரு சாதனையாகும்.

MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title