Feb 8, 2026 - 05:09 PM -
0
இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் உள்ளே கொண்டு செல்வதற்கான பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் விசிலை கொண்டு செல்வதற்கு ரசிகர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீரர்கள் மீது தூக்கி எறியும் அபாயம் உள்ளதாக தெரிவித்து, ஏற்கனவே தண்ணீர் போத்தல், பவர் பேங்க், பேக், குடை போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், விசிலும் அந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் தமிழகத்தில் சட்ட சபைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமைத் தாங்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் கிடைத்துள்ளது.
இவ்வாறான சூழலில் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமை அரசியல் காரணமாக இருக்கலாம் என சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து வௌியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

