Mar 1, 2026 - 09:19 AM -
0
இலங்கையின் ஆயுள் காப்புறுதிச் சந்தையின் முன்னணி நிறுவனமாகத் திகழும் செலிங்கோ லைஃப், 19வது குடும்ப சவாரி பாரிய ஊக்குவிப்புத் திட்டத்தின் குலுக்கல் சீட்டிழுப்பானது நிறைவு பெற்றதை அடுத்து இதன் மூலம், வெற்றி பெற்றவர்களுக்கு மறக்கமுடியாத வெளிநாட்டு விடுமுறை மற்றும் உள்ளூர் பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், ரன் போ சவாரி (Run for Savari) என்ற விளையாட்டின் மூலம் முதல் முறையாக வெற்றியாளர்களை தெரிவு செய்ததன் மூலம் இந்நிகழ்வு முக்கியமான ஓர் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது.
சீட்டிழுப்பில், ஐந்து காப்புறுதிதாரர் குடும்பங்களுக்கான (மொத்தம் 20 பேர்) பீஜிங் (Beijing) நகரிற்கான சுற்றுலாவின் முழு செலவுகளும் நிறுவனத்தின் பொறுப்பேற்கும் பரிசினை வென்றுள்ளனர். இந்த குடும்பங்கள் வென்னப்புவ, களனிய, கொடகவேலா, கம்புறுபிட்டிய மற்றும் ஹோமாகம ஆகிய செலிங்கோ லைஃப் கிளைகளைச் சேர்த்தவையகும். மேலும், 10 குடும்பங்கள் (மொத்தம் 40 பேர்) மலேசிய விடுமுறை அனுபவத்தைப் பெற தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் 283 குடும்பங்கள் (மொத்தம் 1,000 பேர்) பேர்ல் பே தீம் பூங்காவில் ஒரு நாள் தோறும் திருப்திகரமான, பொழுதுபோக்கான அனுபவத்தை வென்றனர்.
இந்த பெரிய சீட்டிழுப்பானது, ‘Run for Savari’ என்ற இணையதள விளையாட்டின் வெற்றியாளர்களை முதன்முறையாக தெரிவு செய்து புதிய மைல்கல்லை கடந்தது. இந்த விளையாட்டில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 100 தரத்திற்கு நுழைந்தவர்கள் குலுக்கல் அடிப்படையில் நான்கு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இலங்கையின் நட்சத்திர தரத்திலான ஓட்டல்களில் தங்கும் பரிசைப் பெற்றனர். இதற்கு முன்பு, 14 ஷவார வெற்றியாளர்கள்| ஒவ்வொருவருக்கும் ரூ. 10,000 மதிப்புள்ள சூப்பர் மார்க்கெட் வவுச்சர்கள் வழங்கப்பட்டிருந்தன.
‘Run for Savari’ விளையாட்டில் 7,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், அதிகூடிய மதிப்பெண்களை பெற்றவர் சீட்டிழுப்பின்போது அறிவிக்கப்பட்டார். வெள்ளவத்தையில் வசிக்கும் அந்த வெற்றியாளர் 109,458 மதிப்பெண்களைப் பெற்றதையடுத்து செலிங்கோ லைஃப் அவருக்கு மலேசிய விடுமுறையை பரிசாக வழங்கவுள்ளது.
சீட்டிழுப்பு முடிவடைந்தவுடன், வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கும் உள்ளூர் பயணத்திற்குமான ஏற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளன. மேலும் புதிய வெற்றியாளர் குழுவுக்கு குடும்ப சவாரி அனுபவம் முழுதாக வழங்கப்படும். செலிங்கோ லைஃப்பின் குடும்ப சவாரி ஊக்குவிப்புத் திட்டமானது 2007ஆம் ஆண்டு அறிமுகமானது முதல், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 11,000-க்கும் மேற்பட்ட காப்புறுதிதாரர் குடும்பங்களில் இருந்து 37,000க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்ட வாய்பினைப்பெற்றுள்ளனர். இதன் மூலம், இது நாட்டின் ஆயுள் காப்புறுதித் துறையில் முக்கியமான மற்றும் நீடித்த விசுவாசத்துடன் கூடிய விருதுகள் (loyalty-cum-rewards) திட்டமாக தனது இடத்தைப் பதிவு செய்துள்ளது.
செலிங்கோ லைஃப் நிறுவனம், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தொடர்ந்து 21 ஆண்டுகளாக சந்தை முன்னணியில் இருந்து வருகிறது. காப்புறுதி பெற்றவர்களின் இலக்குகள் மற்றும் கனவுகளை பாதுகாக்கவும், அபாயங்களை குறைக்கவும் உதவும் புத்தாக்கமான காப்புறுதித் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டில், Brand Finance அமைப்பின் மதிப்பீட்டின்படி,செலிங்கோ லைஃப் நிறுவனம் இலங்கையின் மிக உயர்ந்த மதிப்புள்ள காப்புறுதி வர்த்தகநாமமாகவும், 22-வது மிக பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டது. அதே ஆண்டில், தொடர்ந்து 19-வது தடவையாக ஆண்டின் மக்களுக்கான ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர (“People’s Life Insurance Service Provider of the Year”) விருதைப் பெற்றதன் மூலம், மில்லியன் கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரியவர்த்தகநாமம் என்ற தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியது.மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கையின் ஆண்டுக்கான வர்த்தகநாமம் என்ற விருதினை பெற்றுள்ள இந்த நிறுவனம், இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) மற்றும் முகாமைத்துவ கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனம் (CIMA) ஆகிய அமைப்புகளால் இலங்கையின் மிகவும் பாராட்டப்பட்ட 10 நிறுவனங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

