வணிகம்
சுதந்திர சதுக்க பகுதியில் இலங்கையின் முதலாவது முழுமையான மின்சார வாகன சார்ஜிங் மையத்தை அறிமுகம் செய்யும் Synogen

Mar 1, 2026 - 09:31 AM -

0

சுதந்திர சதுக்க பகுதியில் இலங்கையின் முதலாவது முழுமையான மின்சார வாகன சார்ஜிங் மையத்தை அறிமுகம் செய்யும் Synogen

இலங்கையின் பசுமை போக்குவரத்து மாற்றத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமான வகையில், Synogen நிறுவனம் இன்று (25) ‘Synogen Evo’ எனும் நாட்டின் முதலாவது விரிவான மின்சார வாகன சார்ஜிங் நிலையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நான்கு சக்கர வாகனங்கள், முச்சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் (மோட்டார் சைக்கிள்கள்) என அனைத்திற்கும் ஒரே இடத்தில் சார்ஜ் செய்யும் வசதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு சுதந்திர சதுக்க பகுதியில் உள்ள Independence Arcade (இண்டிபென்டன்ஸ் ஆர்கேட்) இல் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள இந்த முதன்மையான நிலையம், நாடு முழுவதும் அணுகக்கூடிய, அளவிடக்கூடிய மற்றும் புத்திசாலித்தனமான EV உட்கட்டமைப்பை உருவாக்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். 

இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகின்ற போதிலும், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் பெரும்பாலும் பின்தங்கியே உள்ளன. குறிப்பாக நாட்டின் போக்குவரத்தில் பெரும் பங்கு வகிக்கும் முச்சக்கர மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான வசதிகள் குறைவாகவே காணப்படுகின்றன. Synogen Evo இந்த இடைவெளியை பின்வரும் வசதிகளை வழங்குவதன் மூலம் நிரப்புகிறது. மின்சார கார்களுக்கான பிரத்தியேக சார்ஜிங் அமைவிடங்கள் (AC மற்றும் விரைவான DC சார்ஜிங் தெரிவுகள்), மின்சார முச்சக்கர வாகனங்களுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சார்ஜர்கள், நகர்ப்புற வாகன செலுத்துனர்கள் மற்றும் விநியோக சேவையாளர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் சார்ஜிங் கட்டமைப்புகள், Synogen இன் சொந்த டிஜிட்டல் தளத்தின் மூலம் இயங்கும் புத்திசாலித்தனமான கண்காணிப்பு மற்றும் மின்சார சுமை முகாமைத்துவ (Load management) கட்டமைப்பு. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையானது, Synogen Evo மையத்தை ஒரு சாதாரண சார்ஜிங் நிலையமாக மட்டுமல்லாமல், இலங்கையின் அனைத்து வகை EV பயனர்களுக்கும் ஆதரவளிக்கும் ஒரு பல்வகை போக்குவரத்து மையமாக மாற்றுகிறது. இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் தூய வலுசக்தி பொறியியல் பங்காளியான Synogen, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி மற்றும் புத்திசாலித்தனமான உட்கட்டமைப்புகளில் ஏற்கனவே தனது நற்பெயரை நிலைநாட்டியுள்ளது. 

இந்நிறுவனத்தின் பரந்த வலுசக்தி திட்டத்தின் கீழ், இலத்திரனியல் வாகனங்களுக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதை Synogen Evo பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 

இந்த நிலையம் மேம்பட்ட கண்காணிப்பு, பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான அளவிடும் முறைமை ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது, இது நகர்ப்புற மற்றும் நகரங்களுக்கு இடையேயான வலையமைப்புகளில் விரிவாக்கத்தை அனுமதிக்கிறது. 

கொழும்பின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இண்டிபென்டன்ஸ் ஆர்கேடில் இந்த மையம் அமைந்துள்ளமையானது, அதன் அணுகல் தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், தூய்மையான நகர்ப்புற போக்குவரத்தின் எதிர்காலத்தை பறைசாற்றுகிறது. 

நாட்டின் முதலாவது விரிவான மின்சார வாகன மையத்தை இந்த முக்கியமான இடத்தில் அமைப்பதன் மூலம், நிலைபேறான போக்குவரத்து தீர்வுகளை விரைவுபடுத்துவதில் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய இரண்டையும் Synogen அடையாளப்படுத்துகிறது. 

இலங்கையின் வளர்ந்து வரும் மின்சார வாகனங்களுக்கு ஒரு கட்டமைக்கப்பட்ட, உயர்தர சார்ஜிங் முதுகெலும்பை உருவாக்குவதன் மூலம், வணிக மையங்கள், விருந்தோம்பல் துறைகள் மற்றும் போக்குவரத்து முனையங்கள் என மூலோபாய ரீதியாக நாடு முழுவதும் இந்த Evo வலையமைப்பை விரிவுபடுத்த Synogen திட்டமிட்டுள்ளது. சூழல் நிலைபேறான தன்மை மற்றும் மின்சார கிரிட் நிலைத்தன்மையை உறுதி செய்தவாறு, எதிர்காலத்தில் அமைக்கவுள்ள தளங்களில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்கள் மற்றும் அறிவார்ந்த வலுசக்தி முகாமைத்துவ கட்டமைப்புகளை ஒருங்கிணைப்பதையும் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

Synogen பற்றி 

Synogen ஆனது, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி, இலத்திரனியல் தீர்வுகள் மற்றும் புத்திசாலித்தனமான உட்கட்டமைப்புகளை வழங்கும் ஒரு இலங்கை நிறுவனமாகும். சூரிய சக்தி, செயற்பாடு மற்றும் பராமரிப்பு, டிஜிட்டல் கண்காணிப்பு தளங்கள் மற்றும் நிலைபேறான வலுசக்தி தொகுதிகளில் நிபுணத்துவம் பெற்ற Synogen நிறுவனம், நாட்டின் முன்னணி நிறுவனங்களுக்கு வலுசக்தி தீர்வுகளை வழங்கி வருகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05