Header Logo

வணிகம்
அமானா டகாஃபுல் லைஃப் தங்க முதலீட்டு நிதியம் 2025 ஆம் ஆண்டில் 32.4% மாபெரும் உயர்ந்த வளர்ச்சியைப் பதிவு

Mar 3, 2026 - 01:57 PM -

0

அமானா டகாஃபுல் லைஃப் தங்க முதலீட்டு நிதியம் 2025 ஆம் ஆண்டில் 32.4% மாபெரும் உயர்ந்த வளர்ச்சியைப் பதிவு

அமானா டகாஃபுல் லைஃப் பிஎல்சி, ஆயுள் காப்புறுதிதாரர்களுக்கு சிறந்த முதலீட்டுத் தெரிவுகளை வழங்கியுள்ளதுடன், அதன் அலகு-இணைக்கப்பட்ட நிதியப் பிரிவில் 2025ஆம் ஆண்டில் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது. அதனூடாக, ஒழுக்கமான, மூலோபாய அடிப்படையில் மற்றும் முறையாக கட்டமைக்கப்பட்ட நிதி முகாமைத்துவத்தினூடாக, காப்புறுதிதாரர்களுக்கு உறுதியான வருமதிகளை ஏற்படுத்தியிருந்தது. 

2025 டிசம்பர் 31ஆம் திகதியன்று நிதியத்தின் செயற்திறனின் பிரகாரம், அமானா டகாஃபுல் லைஃப் நிறுவனத்தின் முன்னணி தங்க முதலீட்டு நிதியம் (GIF) அதியுயர் வருடாந்த வருமதியான 32.4% ஐ பதிவு செய்திருந்தது. அதனூடாக, தளம்பல்கள் நிறைந்த சந்தை நிலைமைகளிலும் அதிகம் நாடப்படும் சொத்துப் பிரிவாக தங்கத்தின் நிலையை மீள உறுதி செய்திருந்தது. குறிப்பாக, தங்க முதலீட்டு நிதியத்தை வழங்கும் ஒரே ஆயுள் காப்புறுதி தீர்வுகள் வழங்குனராக அமானா டகாஃபுல் லைஃப் திகழ்வதுடன். தங்கத்தை பின்புலமாகக் கொண்ட முதலீடுகளினூடாக காப்புறுதிதாரர்களுக்கு தமது சொத்துகளை மேம்படுத்திக் கொள்வதுடன், ஆயுள் காப்புறுதியை அனுபவிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. 

பங்குகளில் கவனம் செலுத்திய நிதியங்களும் உறுதியான வளர்ச்சியை எய்தியிருந்தன. குறிப்பாக Growth Multiple Fund (GMF) மற்றும் Volatile Multiple Fund (VMF) ஆகியன முறையே 23.5%மற்றும் 23.6%வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தன. இந்த பெறுபேறுகளினூடாக, காப்புறுதிதாரர்களுக்கு சிறந்த முதலீட்டு தெரிவுகளை வழங்கும் ஆயுள் காப்புறுதிதாரராக அமானா டகாஃபுல் லைஃப் மீள உறுதி செய்துள்ளது. அதேவேளை, Protected Multiple Fund (PMF) மற்றும் Stable Multiple Fund (SMF) ஆகியன உறுதியான மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியை பதிவு செய்ததுடன், சமநிலையான மற்றும் குறைந்த இடர் முதலீட்டு தெரிவுகளில் கவனம் செலுத்தும் காப்புறுதிதாரர்களின் உகந்த தெரிவாக அமைந்திருந்தது. 

பாதுகாப்பு, ஓய்வூதிய திட்டமிடல் மற்றும் சிறுவர் கல்வி போன்ற பிரிவுகளுக்கான சிறந்த ஆயுள் காப்புறுதித் தீர்வு தெரிவுகளை அமானா டகாஃபுல் லைஃப் வழங்குகிறது. காப்புறுதிதாரர்களுக்கு தமது வருமதிகளை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் சிறப்பாக செயலாற்றும் முதலீட்டு-இணைக்கப்பட்ட நிதியங்களையும் வழங்குகிறது. மாறுபட்ட நிதி இலக்குகள் மற்றும் இடர் தெரிவுகளுக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டங்களினூடாக, வெவ்வேறு சொத்துப் பிரிவுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நிதியத் தெரிவுகளை அணுகும் வாய்ப்பை வழங்கி, கவனமாக நிர்வகிக்கப்படும் முதலீட்டு திர்வுகளினூடாக, வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால செல்வ கட்டியெழுப்பும் வசதியை வழங்குகிறது. 

மேலும் பெறுமதி சேர்க்கும் வகையில், காப்புறுதிதாரர்கள் காப்புறுதி தவணை முழுவதிலும் ஒற்றை முதலீட்டு தெரிவில் தங்கியிருக்க வேண்டியதில்லை. தமது இடர் தெரிவு, சந்தை நிலைவரம் மற்றும் அதிகரித்துச் செல்லும் நிதி இலக்குகள் போன்றவற்றின் அடிப்படையில் காணப்படும் நிதியங்களினுள் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதனூடாக, சிறந்த நெகிழ்ச்சித் தன்மை, கட்டுப்பாடு மற்றும் நம்பிக்கை ஆகியன நீண்ட கால நிதித் திட்டமிடலுக்கு வழங்கப்படுகின்றன. 

இந்த வினைத்திறன் தொடர்பில் அமானா டகாஃபுல் பிஎல்சியின் விற்பனை உதவி பொது முகாமையாளர் புவிராஜ் கருத்துத் தெரிவிக்கையில், 

“இந்த பெறுபேறுகளினூடாக அமானா டகாஃபுல் லைஃப் முன்னெடுக்கும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய பிரிவு வடிவமைப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளது. இதில், பாதுகாப்பு என்பதை வருமதிகளை பரந்தளவு நிதியங்கள் மற்றும் சொத்துப் பிரிவுகள் ஆகியவற்றினூடாக மேம்படுத்திக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. அதற்காக பரந்தளவு நிதியங்கள் மற்றும் சொத்துப் பிரிவுகளையும் கொண்டுள்ளது. மாற்றமடையும் சந்தை சூழலில், எமது காப்புறுதிதாரர்களுக்கு நிலைபேறான மற்றும் நீண்ட கால அடிப்படையிலான பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் நாம் கவனம் செலுத்துவதுடன், அவர்களின் மாறிவரும் நிதி இலக்குகள் மற்றும் இடர் தெரிவுகளுக்கு பொருந்தும் வகையில் பரந்தளவு முதலீட்டு தெரிவுகளையும் வழங்குகிறோம்.” என்றார்.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title