Header Logo

வணிகம்
சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாத்து, தேசிய சுற்றுலாத் துறையைப் பலப்படுத்தும் வகையில் அட்வெஞ்சர் பிளஸ் காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஸ்ரீலங்கா இன

Mar 3, 2026 - 05:47 PM -

0

சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாத்து, தேசிய சுற்றுலாத் துறையைப் பலப்படுத்தும் வகையில் அட்வெஞ்சர் பிளஸ் காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஸ்ரீலங்கா இன

இலங்கையில் மிகவும் நம்பிக்கையைப் பெற்ற முதல்தர ஜெனரல் காப்புறுதி வழங்குனரான ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட முதலாவது தனிப்பட்ட விபத்துக் காப்புறுதித் திட்டமான அட்வெஞ்சர் பிளஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் சுற்றுலாத்துறையை வலுப்படுத்துவதுடன், பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பதாகவும் அமைகின்றது. 

மலையேறுதல், சைக்கிளோட்டம், நீர் விளையாட்டு மற்றும் காடுகளில் மேற்கொள்ளும் செயற்பாடுகள் போன்ற ஆபத்தான நடவடிக்கைகளின் போதான மருத்துவக் காப்பீடு, விபத்துப் பாதுகாப்பு மற்றும் அவசரமான வெளியேற்றம் போன்றவற்றிலிருந்து சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்கும் தனித்துவம் திட்டமே அட்வெஞ்சர் பிளஸ் காப்புறுதித் திட்டமாகும். சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே பெற்றுள்ள காப்புறுதிதார்களினால் அணுக முடியாத திட்டங்களை இது கொண்டுள்ளது. தற்பொழுது காணப்படும் பயணக் கொள்கைகளை மாற்றியமைக்காம், அதில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்யும் வகையில் அட்வெஞ்சர் பிளஸ் காப்புறுதித் திட்டம் காணப்படும். 

இலங்கையின் சுற்றுலாத்துறையானது பல்வகைமையுடன் வளர்ச்சியடைந்திருப்பதுடன், காரையோர நீர் வளங்கள், வனவிலங்குப் பாதுகாப்பு வனப்பகுதிகள் மற்றும் சாகசம் நிறைந்த சுற்றலாத் தளங்கள் எனப் பல அம்சங்களில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றது. அத்துடன், இது சுற்றுலாச் செயற்பாட்டாளர்கள், முகவர்கள் மற்றும் பயணிகள் என அனைவருக்கும் தங்களுடைய பாதுகாப்பை எளிமையாகவும் மலிவான முறையிலும் விரிவுபடுத்திக்கொள்ள ஒரு நேரடியான வழியை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. தேசிய காப்புறுதிதாரர் என்ற ரீதியில் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் தேசிய முன்னுரிமைகள், சமூகங்களைப் பாதுகாப்பது மற்றும் இலங்கையின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் புத்தாக்கமான தயாரிப்பபுக்களைத் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கூட்டாண்மையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் நம்பிக்கை, செலவுச் சிக்கனமான மற்றும் சாகசம் நிறைந்த சுற்றுலாவுக்கான தளமாக இலங்கையை நிலைநிறுத்துவதை ஊக்குவிக்கும். தலா ஒரு நபருக்கு 30 நாட்களுக்கு 8 அமெரிக்க டொலராக அட்வெஞ்சர் பிளஸ் காப்புறுதி விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதுடன, இது பொதுவாகப் பயணக் காப்புறுதித் திட்டங்களில் உள்ளடக்கப்படாத சாகச விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளுக்கான மருத்துவக் காப்பீடு, விபத்துப் பாதுகாப்பு மற்றும் அவசரமான வெளியேற்றம் போன்ற சேவைகளை வழங்குகின்றது. 

மலையேறுதல், சைக்கிளோட்டம் மற்றும் நீர்விளையாட்டுப் போன்ற ஆபத்து நிறைந்த செயற்பாடுகளின் போது விருந்தினர்களுக்குப் பாதுகாப்பை வழங்கி இலங்கையின் பன்முகத் தன்மையை உறுதிப்பாட்டுடன் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பை உறுதிசெய்கிறது. இந்தத் திட்டத்தை விமான நிலையங்களில் உள்ள இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் காரியாலயங்களின் ஊடாகப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து இறங்கியது முதல் இந்தக் காப்புறுதித் திட்டம் தொடர்பான தகவல்களை அறிவதற்கான பிரசார நடவடிக்கைகளை விமான நிலையத்திலுள்ள கருமபீடங்களின் ஊடாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாகப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி சமீர தர்மசேன கருத்துத் தெரிவிக்கையில், “மலை உச்சிகள் முதல் கரையோரங்கள் வரையிலும், காடுகள் முதல் அலைச் சறுக்கல்கள் வரை தனித்துவமான அனுபவங்களை இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகின்றது. ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றால் அதற்கான பாதுகாப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் சிறந்த அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். ‘திகில் உங்களுடையது, பாதுகாப்பு எம்முடையது’ என்ற தொனிப் பொருளின் கீழ் இதனை நாம் வழங்குகின்றோம். தேசிய காப்புறுதிதாரர் என்ற ரீதியில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவது எமது பெர்றுப்பாகும். அட்வெஞ்சர் பிளஸ் இது விடயத்தில் நேரடியான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது” என்றார். 

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் இது பற்றிக் குறிப்பிடுகையில், “உலகின் சிறந்த சாகச சுற்றுலா இடங்களுடன் போட்டியிடத் தேவையான இயற்கை நிலப்பரப்புகள், கலாச்சாரம் மற்றும் அனுபவங்கள் அனைத்தும் இலங்கைக்கு எப்போதும் இருந்து வந்துள்ளன. இதற்குப் பொருத்தமான உட்கட்டமைப்பே எமக்கு அவசியமானது. அட்வெஞ்சர் பிளஸ் என்பது இலங்கையை பொறுப்பானதும் சுற்றுலாப் பயணிகளுக்கு முழுமையாகத் தயாரான இடமாக நிலைநிறுத்தும் நோக்கில் எடுத்துவைக்கப்பட்ட முக்கியமான படியாகும். இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் உண்மையாகவே பாதுகாப்பாக இருப்பதாக உணரக்கூடிய சூழலை இது உருவாக்குகிறது. தேசிய சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான கூட்டாண்மையை ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது” என்றார். 

செலவுச் சிக்கனமான கட்டணமும் தனிச்சிறப்பு பாதுகாப்பும் கொண்ட அட்வெஞ்சர் பிளஸ் காப்புறுதித் திடடம், சுற்றுலாத்துறைக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். அத்துடன், இது மொத்த எழுதப்பட்ட பிரீமியத்திற்கு நேர்மறையான பங்களிப்பைச் செய்வதுடன், இலங்கையை பொறுப்பான சாகச சுற்றுலா மையமாகக் குறிப்பிடும் புகழை உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அட்வெஞ்சர் பிளஸ் காப்புறுதித் திட்டத்தை https://slicgeneral.lk/ ஊடாக ஒன்லைன் மூலம் கொள்வனவு செய்ய முடியும்.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title