Header Logo

வணிகம்
சுகாதாரம் மற்றும் அழகுப் பராமரிப்பு e-commerce வணிகத்தில் இணக்கப்பாடு குறித்த விழிப்புணர்வு மூலம் நுகர்வோர் நம்பிக்கையை Daraz Sri Lanka வலுப்படுத்துகி

Mar 5, 2026 - 11:20 AM -

0

சுகாதாரம் மற்றும் அழகுப் பராமரிப்பு e-commerce வணிகத்தில் இணக்கப்பாடு குறித்த விழிப்புணர்வு மூலம் நுகர்வோர் நம்பிக்கையை Daraz Sri Lanka வலுப்படுத்துகி

மேம்பட்ட விற்பனையாளர் வழிகாட்டுதல், இணக்க நடைமுறைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை மூலம் சுகாதாரம் மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கான பாதுகாப்பான ஒன்லைன் அணுகலை இந்த முயற்சி வலுப்படுத்துகிறது நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வுமிக்க விற்பனைத் தராதரங்களை வலுப்படுத்த Daraz Sri Lanka நிறுவனம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளின் ஒரு பகுதியாக, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையுடன் இணைந்து குறித்த ஒரு நோக்கம் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் உள்வாரி திறன் மேம்பாட்டுச் செயலமர்வு நிகழ்வொன்றை Daraz நடத்தியுள்ளது. இது சுகாதாரம், அழகு பராமரிப்பு மற்றும் அழகுசாதனப் பொருட்களின் ஒன்லைன் விற்பனையில் ஒழுங்குமுறை குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Daraz தலைமையில் பெப்ரவரியில் நடைபெற்ற இந்த அமர்வு, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அதிகாரிகளை விற்பனையாளர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் Daraz அணிகளுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வழிவகுத்துள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டம் மற்றும் இலங்கையில் மருந்துகள், மருத்துவ சாதனங்கள், மருத்துவ எல்லைக்குட்பட்ட தயாரிப்புகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை நிர்வகிக்கும் ஒழுங்குமுறை கட்டமைப்பில் இந்த செயலமர்வின் போது கவனம் செலுத்தப்பட்டது. ஒழுங்குமுறை துறையில் தெளிவான வழிகாட்டுதலுடன் உள்வாரி தளம் மற்றும் விற்பனையாளர் எதிர்கொள்ளும் அணிகளை சிறப்பாக தயார்படுத்துவதன் மூலம், விற்பனையாளர் ஆதரவின் தரத்தை மேம்படுத்துவதையும் ஒழுங்குமுறைக்குட்படுத்தப்பட்ட தயாரிப்பு வகைகளில் மிகவும் நிலையான இணக்க நடைமுறைகளை செயல்படுத்துவதையும் Daraz தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. 

மூன்று முக்கிய விளைவுகளை மையமாகக் கொண்டு இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டது: விற்பனையாளர்களுடன் ஈடுபடும் Daraz அணிகளிடையே ஒழுங்குமுறை தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துதல், ஒன்லைன் வழியான சுகாதாரம் மற்றும் அழகு பராமரிப்புப் பொருட்கள் விற்பனை முழுமையாக இணக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் கலாச்சாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறைக்குட்படுத்தப்பட்ட தயாரிப்புகளுக்கான இணைய வழி வணிக (e- commerce) மார்க்கங்களில் நுகர்வோர் மத்தியில் நம்பிக்கையை வலுப்படுத்துதல். இந்த அமர்வின் போது, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அதிகாரிகள் வளவாளர்களாக சேவையாற்றி, இணைய வழியாக விற்கப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரத்தை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்து நடைமுறை வழிகாட்டுதலை வழங்கினர். மருந்துகள், மருத்துவ சாதனங்கள், மருத்துவ எல்லைக்குட்பட்ட தயாரிப்புகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பங்கையும் அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர். பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் விநியோக முறைமை முழுவதன் மீதான மேற்பார்வையும் அதில் அடங்கியுள்ளது. 

Daraz Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ருக்ஷான் சேவியர் அவர்கள் இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவிக்கும் போது, “Daraz நிறுவனத்தைப் பொறுத்தவரை இணைய வழி வணிகத்தின் நம்பிக்கையை வளர்ப்பது என்பது எங்கள் தளத்தில் பாதுகாப்பு மற்றும் இணக்கம் எவ்வாறு நிலைநிறுத்தப்படுகிறது என்பதற்கான பொறுப்பை எடுத்துக்கொள்வதாகும். இந்த செயலமர்வானது எமது அணிகளின் திறன்கள் மீது முதலீடு செய்வதற்கான எங்கள் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும். இதன் மூலமாக அவர்கள் விற்பனையாளர்களை மிகவும் திறம்பட வழிநடத்தவும், பொறுப்புணர்வுடன் விற்பனை செய்வதற்கான தெளிவான எதிர்பார்ப்புகளை முன்வைக்கவும், வாடிக்கையாளர்கள் அதிக நம்பிக்கையுடன் ஒழுங்குமுறைக்குட்படுத்தப்பட்ட தயாரிப்புகளை வாங்கலாம் என்பதை உறுதிப்படுத்தவும் முடியும். தனது நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கும், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தேவைப்பாடுகள் குறித்த தொழில்துறை விழிப்புணர்வை வலுப்படுத்த உதவுகின்றமைக்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.” 

நாட்டின் ஒழுங்குமுறை எதிர்பார்ப்புகள் மற்றும் பொதுச் சுகாதார முன்னுரிமைகளுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டு, இலங்கையில் சுகாதாரம் மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கான பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான டிஜிட்டல் கட்டமைப்பை ஆதரிக்க அறிவூட்டல், ஈடுபாடு மற்றும் வலுவான சந்தை தராதரங்களில் Daraz Sri Lanka தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொள்ளும்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title