Header Logo

வணிகம்
செலான் வங்கி தங்கக் கடன்கள் மற்றும் அடகுச் சேவைகளுக்கு இணையவழி வட்டி மற்றும் பகுதி கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்துகிறது

Mar 5, 2026 - 11:34 AM -

0

செலான் வங்கி தங்கக் கடன்கள் மற்றும் அடகுச் சேவைகளுக்கு இணையவழி வட்டி மற்றும் பகுதி கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்துகிறது

செலான் வங்கி அதன் தங்கக் கடன்கள் மற்றும் அடகுச் சேவைகளுக்கு இணையவழி வட்டி மற்றும் பகுதியளவு பணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வட்டி தொகைகளையும் பகுதி கட்டணங்களையும் எந்நேரத்திலும் எங்கிருந்தும் டிஜிட்டல் முறையில் வசதியாக செலுத்தலாம். இப் புதிய வசதி வாடிக்கையாளர்கள் கிளைக்குச் செல்லாமலும் வரிசையில் காத்திருக்காமலும் தங்கள் தங்கக் கடன் பொறுப்புக்களை நிறைவேற்ற உதவுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் நிதிகளை மேலும் இலகுவாக நிர்வகிக்க முடியும். அதே நேரத்தில், சௌகரியத்தையும் அணுகல் வசதியையும் செலான் வங்கி மேலும் வலுப்படுத்துகிறது. மேலும், இது வளர்ந்து வரும் டிஜிட்டல் வங்கி எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

செலான் தங்கக் கடன்கள் விரைவான சேவை, போட்டித்தன்மை வாய்ந்த முற்பணத் தொகைகள் மற்றும் கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள் ஆகியவற்றை தொடர்ந்து வழங்கி வருகிறது. இணையவழி வட்டி மற்றும் பகுதியளவு பணம் செலுத்தும் வசதி இணைக்கப்பட்டதன் மூலம் இக் கடன் சேவையின் மதிப்பு மேலும் உயர்கின்றது. அத்துடன் இது வாடிக்கையாளர்களுக்கு திருப்பிச் செலுத்துதலில் அதிக கட்டுப்பாட்டை வழங்குவதுடன் சேவையின் விரைவு மற்றும் நம்பகத்தன்மையை பராமரிக்கிறது. 

இந்த அறிமுகம் குறித்து செலான் வங்கியின் தனிநபர் வங்கியியல் பிரிவு பிரதிப் பொது முகாமையாளர் யூஜின் செனவிரத்ன கூறுகையில், எங்கள் வாடிக்கையாளர்களின் அன்றாட வங்கிச் சேவையை எளிதாக்குவதில் எமது கவனத்தை இந்த அறிமுகம் வெளிப்படுத்துகிறது. தங்கக் கடன்களுக்கான வட்டி மற்றும் பகுதியளவு கட்டணங்களை இணையவழி செயல்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப கடன்களை நிர்வகிக்கக் கூடியதாகவுள்ளது. மேலும் இது கிளைகளை சார்ந்திருக்க வேண்டிய தேவையை குறைக்கின்றது. என்றார். 

பணப்புழக்கங்களை நிர்வகிக்கும் வணிக உரிமையாளர்கள், வேலைப்பளு மிக்க ஊழியர்கள், வருமானத்தை மேம்படுத்தும் முதலீட்டாளர்கள் மற்றும் திருப்பிச் செலுத்துதல்களை கையாள எளிய மற்றும் நம்பகமான வழியை நாடும் குடும்பங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாடிக்கையாளர்களிற்கு உதவும் நோக்கத்தோடு இவ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனூடு தடையற்ற டிஜிட்டல் அனுபவத்துடன் வாடிக்கையாளர்கள் எளிதாகவும் மன அமைதியுடனும் சரியான நேரத்தில் பணம் செலுத்த முடியும். 

செலான் வங்கியின் டிஜிட்டல் சேனல்கள் ஊடாக வாடிக்கையாளர்கள் இணையவழி வட்டி மற்றும் பகுதி கட்டண வசதியை அணுகலாம். மேலதிக தகவலுக்கு, வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள செலான் வங்கிக் கிளையைப் பார்வையிடலாம் அல்லது 011 2 008 888 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம்.

Comments
0

MOST READ

காணொளி
இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

title