Header Logo

வணிகம்
கொமர்ஷல் வங்கி ஹஸ்ரத் முனசிங்கவை நிறைவேற்றுப்பணிப்பாளர் மற்றும் பிரதம செயற்பாட்டு அதிகாரியாக நியமித்துள்ளது

Mar 5, 2026 - 11:38 AM -

0

கொமர்ஷல் வங்கி ஹஸ்ரத் முனசிங்கவை நிறைவேற்றுப்பணிப்பாளர் மற்றும் பிரதம செயற்பாட்டு அதிகாரியாக நியமித்துள்ளது

கொமர்ஷல் வங்கியின் பணிப்பாளர் குழு, திரு ஹஸ்ரத் முனசிங்க அவர்களை 27 ஏப்ரல் 2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பிரதம செயற்பாட்டு அதிகாரியாகவும் நியமித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. 

கொமர்ஷல் வங்கியில் 30 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை நிறைவு செய்த நிலையில், நான்கு ஆண்டுகள் பிரதம செயற்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய திரு. எஸ். பிரபாகர், ஏப்ரல் 26, 2026 அன்று ஓய்வு பெறவுள்ளதையடுத்து அவருக்குப் பதிலாக திரு ஹஸ்ரத் முனசிங்க இந்தப் பதவியை பொறுப்பேற்கவுள்ளார். 

திரு முனசிங்க தற்போது கொமர்ஷல் வங்கியில் பெருநிறுவன வங்கிப் பிரிவின் பிரதிப் பொதுமுகாமையாளராகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு அவர் சில்லறை வங்கிப் பிரிவு மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளுக்கான பிரதிப் பொதுமுகாமையாளராகவும் செயல்பட்டுள்ளார். 

வங்கியில் தனது பணிக்காலம் முழுவதும், அவர் பெருநிறுவன வங்கிப் பிரிவு, சில்லறை வங்கிப் பிரிவு, டிஜிட்டல் வங்கிப் பிரிவு, சந்தைப்படுத்தல், அட்டை வர்த்தகம், பணப்பரிமாற்றங்கள், வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் நிலைபெறுதன்மை ஆகிய முக்கிய பிரிவுகளை மேற்பார்வையிட்டு, அவற்றை நிலையான வளர்ச்சி மற்றும் வலுவான செயல்திறன் முடிவுகளைப் பெற வழி நடத்தியுள்ளார். மேலும், திரு முனசிங்க கொமர்ஷல் வங்கியின் CSR Trust அறக்கட்டளையின் பொறுப்பாளர் ஆகவும் பணியாற்றுகிறார். 

வங்கி, தொலைத்தொடர்பு, வேகமாக விற்பனையாகும் நுகர்வுப்பொருள்கள் (FMCG) மற்றும் ஊடகம் உள்ளிட்ட துறைகளில் 31 ஆண்டுகளுக்கும் மேலான பல்துறை அனுபவம் கொண்ட ஒரு நிறுவன நிர்வாகியாக திரு முனசிங்க திகழ்கிறார். அவர் தனது புதிய பொறுப்பிற்கு 20 ஆண்டுகளுக்கும் மேலான சிரேஷ்ட முகாமைத்துவ அனுபவத்தை கொண்டு வருகிறார் இதில் கொமர்ஷல் வங்கியில் 15 ஆண்டுகள் பெருநிறுவன முகாமைத்துவ அனுபவமும் அடங்கும். திரு முனசிங்க கொமர்ஷல் வங்கியில் தனது பணிக்காலம் முழுவதும், வர்த்தக விரிவாக்கத்தை நீண்டகால மதிப்புச்சேர்க்கையுடன் இணைக்கும் முன்னேற்றமான மூலோபாயங்களை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். மூலோபாய அபிவிருத்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி துறைகளில் அவரது நிபுணத்துவத்திற்காக அறியப்படும் அவர், முதலீட்டு தொகுப்பு விரிவாக்கத்தை முன்னெடுத்து, சொத்து தரத்தை வலுப்படுத்தி, வாடிக்கையாளர் அடிப்படை பெறுமதியை உயர்த்துவதன் மூலம் அளவிடத்தக்க தாக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வந்துள்ளார்.முக்கிய வங்கி பிரிவுகளின் பல்துறை பெரிய அணிகளை வழிநடத்தி, கடுமையான போட்டி நிலவும் சந்தை சூழலில் நிலையான வளர்ச்சி, மேம்பட்ட இலாபத்திறன் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட செயலாக்கத்தை உறுதிசெய்துள்ளார். அதே நேரத்தில், மாறிவரும் ஒழுங்குமுறை, தொழில்நுட்ப மற்றும் சந்தை மாற்றங்களின் சூழலில் செயல்பாடுகளை திறம்பட வழிநடத்தியுள்ளார். 

கல்வி ரீதியாக சிறந்து விளங்கும் தொழில்முறை நிபுணரான திரு முனசிங்க, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞான முதுகலை பட்டமும், அவுஸ்திரேலியாவின் Southern Queensland பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாக முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். அவர், CIMA நிறுவனத்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர் (ACMA, CGMA) ஆவார். மேலும், Chartered Management Institute நிறுவனத்தின் உயர்நிலை உறுப்பினர் (FCMI) ஆகவும், UK, Chartered Institute of Marketing நிறுவனத்தின் பட்டய சந்தைப்படுத்தனராகவும் திகழ்கிறார். 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 272 தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. 

மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Comments
0

MOST READ

காணொளி
இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

title