Mar 6, 2026 - 01:48 PM -
0
இலங்கையிலிருந்து வெளியாகும் அபிமானம் பெற்ற திரைப்படங்கள் மற்றும் கதைப்படைப்புக்களை எங்கிருந்தும் தமது கையடக்க தொலைபேசிகள் மூலமாக பார்த்து மகிழ்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், Roopa Hala என்ற பிரபல நேரலை ஒளிபரப்புத்தளத்தை Evoke Digital Australia ன் ஒத்துழைப்புடன் ஹட்ச் ஆரம்பித்துள்ளது. இலங்கையின் பிரபலமான பொழுதுபோக்கு சார்ந்த அம்சங்களை வீட்டில், செல்லுமிடத்தில், அல்லது வீட்டுக்கு வெளியில் என எங்கிருந்தும் உடனடியாக பார்த்து மகிழ வாய்ப்பளிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சிங்கள திரைப்படங்கள், தொடர்கள், மற்றும் பிரத்தியேகமான முதல்நாள் திரையிடல் என அனைத்தையும் ஒரே தளத்தில் பார்த்து மகிழ்வதற்கு Roopa Hala வாய்ப்பளிக்கின்றது. இலங்கை மற்றும் பிராந்திய பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை இலங்கையில் மாத்திரமன்றி, உலகில் எங்கிருந்தும் பார்க்கும் வாய்ப்பு Roopa Hala மூலமாகக் கிடைக்கின்றது.
500 க்கும் மேற்பட்ட சிங்கள திரைப்படங்கள், காலத்தால் அழியாத காவியங்கள், சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், இணையத் தொடர்கள், மற்றும் பிரத்தியேகமான திரைப்பட முதல்நாள் திரையிடல் அடங்கலாக, 1000 மணி நேரத்திற்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைக் கொண்ட விரிவான தெரிவுகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரசிகர்களுக்காக Roopa Hala வழங்குகின்றது.
இலங்கையிலிருந்து வெளிவந்துள்ள பொழுதுபோக்கு உள்ளடக்கம் மீது கவனம் செலுத்தி, இலங்கையில் வசிக்கின்ற, மற்றும் திரைப்படங்கள் மூலமாக உள்நாட்டு கலாச்சாரத்துடன் தொடர்ந்தும் இணைப்பைப் பேண ஆவலாக உள்ளக இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கின்ற மக்கள் பார்த்து மகிழ்வதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் வசிக்கின்ற, வெளிநாடுகளுக்கு பிரயாணம் செய்கின்ற, அல்லது நீண்ட காலமாக வெளிநாடுகளில் வசிக்கின்ற ஹட்ச் வாடிக்கையாளர்கள் தமது mobile app ல் App Store மற்றும் Google Play Store மூலமாகவோ, அல்லது https://roopahala.com.au/ மூலமாகவோ Roopa Hala தளத்தின் சந்தாதாரராக இணைந்து, பலவகைப்பட்ட சாதனங்கள் மூலமாக தங்குதடையின்றி பொழுதுபோக்கு அனுபவங்களைப் பெற்று மகிழ முடியும். இவற்றுக்குப் புறம்பாக, அனைத்து வகையான பிரபலமான smart TV க்கள் மூலமாக மிக இலகுவாகப் பார்த்து மகிழும் வகையில் Roopa Hala Smart TV app ம் கிடைக்கப்பெறுகின்றது.
பிரபலமான பொழுதுபோக்கு சார்ந்த அம்சங்களை பார்த்து மகிழ்வதற்கான மிகச் சிறப்பான வழிமுறையை Roopa Hala வழங்குவதுடன், வீட்டில் இருந்து கொண்டோ அல்லது நீங்கள் வேறு எங்கிருந்தும் பார்த்து மகிழ்வதற்கு இனிமையான திரைப்படங்களை உங்களுக்கு கொண்டு வருகின்றது. வாழ்வுகளை மேம்படும் வகையில் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் சேவைகளை இலங்கை மக்களுக்கு வழங்கி அவர்களுக்கு வலுவூட்டுவதில் ஹட்ச் தற்போது மேற்கொண்டு வருகின்ற தொடர் முயற்சிகளின் மற்றுமொரு படியாக Evoke Digital Australia உடன் இணைந்து ஹட்ச் அறிமுகப்படுத்தியுள்ள Roopa Hala காணப்படுகின்றது.