Header Logo

வணிகம்
இலங்கையில் திரிபோஷாவை ஊக்குவிக்க அரசாங்கத்துடன் இணைந்து WFP மற்றும் KOICA 10 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள 'விதைத்து வளர்த்தல்' திட்டத்தை அறிமுக

Mar 11, 2026 - 05:57 PM -

0

இலங்கையில் திரிபோஷாவை ஊக்குவிக்க அரசாங்கத்துடன் இணைந்து WFP மற்றும் KOICA 10 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள 'விதைத்து வளர்த்தல்' திட்டத்தை அறிமுக

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (KOICA) 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஐந்து ஆண்டு கால "Sow and Grow" திட்டத்தைத் ஆரம்பித்துள்ளது. 

உயர்தரமான உள்ளூர் சோள உற்பத்தியை அதிகரித்து அதனூடாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு திரிபோஷாவின் நம்பகமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக இலங்கையின் திரிபோஷா திட்டத்தை வலுப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். 

திரிபோஷா என்பது இலங்கையில் இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு செறிவூட்டப்பட்ட மிகைநிரப்பு உணவாகவும் நீண்டகால ஊட்டச்சத்து பாதுகாப்பு வழங்குவதாகவும் உள்ளது. Sow and Grow திட்டம் உள்ளூர் சோள உற்பத்தியை அதிகரித்து தரத்தை மேம்படுத்தி மற்றும் திரிபோஷாவின் நிலையான விநியோகத்திற்கான விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்யும். 

இந்த திட்டம் அனுராதபுரம் மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களில் 7,500 விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதுடன் அவர்களது உற்பத்தித்திறனை அதிகரித்து காலநிலை-சாதுர்யமான விவசாயத்தை ஊக்குவிக்கும் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்கும். இது விவசாயிகளை சேகரிப்பாளர்களுடனும் இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்துடனும் இணைத்து சந்தை அணுகலை மேம்படுத்தும். மேலும் உயர்தர சோளத்தின் நம்பகமான வழங்கலை உறுதி செய்து இறக்குமதி சார்பை குறைத்து காலநிலை சார்ந்த அபாயங்களைத் தணிக்கும் நாடு முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட 650,000க்கும் மேற்பட்ட குழந்தைகளும் 330,000க்கும் மேற்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களும் Sow and Grow திட்டத்தின் மூலம் மேம்பட்ட ஊட்டச்சத்தைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கிராமப்புற அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சு விவசாய அமைச்சு சுகாதார அமைச்சு வர்த்தகம் வணிகம் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதி அமைச்சு உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து உலக உணவுத் திட்டத்தால் Sow and Grow செயல்திட்டம் முன்னெடுக்கப்படும். 

இந்த ஒத்துழைப்பின் மூலம் உணவு முறைகளை வலுப்படுத்துதல் ஊட்டச்சத்து விளைவுகளை மேம்படுத்துதல் மற்றும் நிலையான கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான தேசிய முன்னுரிமைகளை இந்த முயற்சி ஆதரிக்கிறது. இலங்கை தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தைப் பாதுகாக்கும் நீண்டகால திரிபோஷா திட்டத்திற்கு பங்களிக்கும் அதே வேளையில் சோள மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்தும் Sow and Grow திட்டத்தை ஆதரிப்பதில் KOICA பெருமை கொள்கிறது. இலங்கை அரசாங்கம் மற்றும் உலக உணவுத் திட்டத்துடனான எங்கள் பங்காளித்துவம் மூலம் விவசாய சமூகங்கள் மற்றும் நாட்டின் ஊட்டச்சத்து பாதுகாப்பை ஆதரிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (KOICA) இலங்கை அலுவலகத்தின் வதிவிடப் பணிப்பாளர் திருமதி லீ யூ லி கூறினார். 

மக்காச்சோள விவசாயிகளும் பதப்படுத்துபவர்களும் காலநிலை அதிர்ச்சிகள் முதல் சந்தை கட்டுப்பாடுகள் வரை அதிகரித்து வரும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர் என்று உலக உணவுத் திட்டப் பிரதிநிதியும் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளருமான பிலிப் வோர்ட் தெரிவித்தார். அதனால் தான் ' Sow and Grow' என்பது மிகவும் சரியான நேரத்தில் தேவைப்படுகிறது. உணவு முறையை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கை முழுவதும் உள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு நம்பகமான உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் உயிர்நாடியாக திரிபோஷாவைப் பாதுகாக்கிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டார். 

இலங்கையில் WFP இன் நீண்டகால பங்காளியாக KOICA இருந்து வருகிறது விவசாயிகளுக்கான மீள்தன்மையை உருவாக்கும் திட்டங்களை ஆதரிக்கிறது. தேசிய பாதுகாப்பு வலையமைப்புகளை வலுப்படுத்துவதில் முதலீடு செய்வதன் மூலம் WFP மற்றும் KOICA இலங்கைக்கு மேலும் நிலைத்தன்மையுள்ள உணவுக் கண்காணிப்பு அமைப்பை உருவாக்க உதவி செய்கின்றன. இது பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை பாதுகாப்பதோடு நீண்டகால உணவுப் பாதுகாப்பையும் நிலையான கிராமப்புற வாழ்வாதாரத்தையும் முன்னேற்றுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title