Mar 11, 2026 - 06:04 PM -
0
DIMO நிறுவனத்தின் தொழிற்கல்விப் பிரிவான DIMO Academy, ஜேர்மனியில் வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் தனது புதிய டிப்ளோமா பாடநெறியான German Diploma in Warehouse Operations, Logistics and Transportation (WOLT) இனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு ஜேர்மனியில் தொழில் வாய்ப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு, தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப சர்வதேசத் தரத்திலான தொழில்முறை தகுதிகளை உருவாக்குவதில் DIMO Academy எடுத்துள்ள மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக இப்பாடநெறியை குறிப்பிட முடியும்.
இந்த WOLT பாடநெறியை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு ஜேர்மனியில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்காக, ஜேர்மனியின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Mosecker GmbH & Co. KG உடன் DIMO Academy ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்தச் கூட்டாண்மையின் மூலம், ஜேர்மனியின் logistics மற்றும் Warehouse செயற்பாடுகளில் நிலவும் பணியாளர் வெற்றிடங்களுக்கு இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
WOLT பாடநெறியின் விசேடத்துவமானது, அது German Chamber of Industry & Commerce (AHK) பாடநெறி அமைப்பின் அடிப்படையில், முழுமையான நடைமுறைப் பயிற்சியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளமையாகும். பெரும்பாலான பாடநெறிகள் வெறுமனே தத்துவ ரீதியான மற்றும் முகாமைத்துவ அறிவை மத்திரம் வழங்கும் நிலையில், இப்பாடநெறியானது ஐரோப்பிய பணிச்சூழலுக்கு நேரடியாகத் தேவையான நடைமுறை பயிற்சியின் தொழில்முறைத் திறன்களை மாணவர்களுக்கு வழங்குகிறது. அத்துடன் பணியாற்றும் போதே உயர் கல்வியைத் தொடர்வதற்கான பல்வேறு வாய்ப்புகளையும் இது வழங்குகிறது.
இது குறித்து DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரதம மனிதவள அதிகாரியுமான தில்ருக்ஷி குருகுலசூரிய கருத்துத் தெரிவிக்கையில், இந்த டிப்ளோமாவின் தனித்துவமே இது நிறுவனங்களின் நேரடித் தேவைகளை மையமாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது என்பதாகும். மாணவர்கள் உண்மையான பணிச் சூழலில் கடமையாற்றுவதற்குத் தேவையான திறன்களால் இங்கு மெருகூட்டப்படுகின்றனர். ஜேர்மனிய நிறுவனங்களின் அங்கீகாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிப்பாடு என்பன பாரம்பரிய தொழிற்கல்வி பாடநெறிகளிலிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகின்றன. என்றார்.
இப்பாடநெறி Logistics and Supply Chain, Warehouse Operations, German Language, Logistics Processes Optimization, Procurement, Advanced Inventory Management, Strategic Supply Chain Management, Communication & Professional Conduct ஆகிய முக்கிய துறைகளை உள்ளடக்கியுள்ளது. அத்துடன், இப்பாடநெறியானது German Chamber of Industry & Commerce இனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், ஜேர்மனியின் Dual vocational education and training தரநிலைகளுடன் முழுமையாக ஒத்துப்போகின்றது. அத்துடன், இலங்கையின் Tertiary & Vocational Education Commission (TVEC) உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இப்பாடநெறியானது, திறன் அடிப்படையிலான (competency-based) முறைமையில் வழங்கப்படுவதுடன், நடைமுறை மதிப்பீடுகள், தரப்படுத்தப்பட்ட பயிற்சிச் செயன்முறைகள், தரக் கட்டுப்பாடு மற்றும் ஐரோப்பிய பணிச்சூழலுக்கு இணக்கமான வேலைவாய்ப்பு தயார்நிலை (job- readiness) தரநிலைகளின் அடிப்படையில் மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர்.
WOLT பாடநெறியின் முதலாம் தொகுதி மாணவர்களுக்கான வகுப்புகள் 2026 ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ளன. க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கணிதம், ஆங்கிலம் அல்லது விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் 3 'B' சித்திகள் அல்லது க.பொ.த. உயர்தரத்தில் ஏதேனும் ஒரு பாடத்துறையில் தகுதிகளைக் கொண்ட மாணவர்கள் இப்பாடநெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.
