Header Logo

வணிகம்
கொமர்ஷல் வங்கி நவீன வங்கிச் சேவைகளை களுவாஞ்சிகுடிக்கு விஸ்தரிப்பு

Mar 11, 2026 - 06:58 PM -

0

கொமர்ஷல் வங்கி நவீன வங்கிச் சேவைகளை களுவாஞ்சிகுடிக்கு விஸ்தரிப்பு

கொமர்ஷல் வங்கியானது அனைவருக்கும் வசதியான வங்கிச் சேவைகளை வழங்கும் உறுதிப்பாட்டுடன், தனது சேவை வலயத்தை கிழக்கு மாகாணத்தில் உள்ள களுவாஞ்சிகுடி நகரத்திற்கு விரிவுபடுத்தியுள்ளது. மட்டக்களப்பு நகரத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த அழகிய கடற்கரை நகரத்தில் வங்கியின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. 

இந்த கிளை திறப்பு விழாவில், கொமர்ஷல் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எஸ்.பிரபாகர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் பெருநிறுவன வங்கிப் பிரிவின் பிரதிப்பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க தனிநபர் வங்கிப் பிரிவின் பிரதிப்பொது முகாமையாளர் எஸ். கணேசன் மற்றும் தனிநபர் வங்கிப் பிரிவின் உதவிப் பொதுமுகாமையாளர் ஆர். சிவஞானம் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

களுவாஞ்சிகுடி நகரில் இலக்கம். 300, பிரதான வீதியில் அமைந்துள்ள இந்த புதிய கிளை, வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு முழுவதும் 365 நாள்கள், 24 மணி நேர வங்கிச் சேவைகளைப் பெறும் வசதியை வழங்கும் வகையில் ATM மற்றும் CRM இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. படத்தில், கொமர்ஷல் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எஸ். பிரபாகர் வங்கியின் முகாமைத்துவ பிரதிநிதிகளுடன் இணைந்து புதிய கிளையை திறந்து வைக்கிறார். மேலும், இந்த கிளையின் முகாமையாளராக பணியாற்றவுள்ள ரி. சுகந்தன் அவர்களும் காணப்படுகிறார்.

MOST READ

காணொளி
அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

title