Header Logo

வணிகம்
Sun Siyam பாசிகுடா சர்வதேச மகளிர் தினத்தை விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த பெண்களுக்கான தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடியது

Mar 13, 2026 - 01:07 PM -

0

Sun Siyam பாசிகுடா சர்வதேச மகளிர் தினத்தை விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த பெண்களுக்கான தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடியது

2025ஆம் ஆண்டின் Tripadvisor Travelers’ Choice Best of the Best விருதையும், Homes & Gardens Design Awards 2025 இல் சிறந்த சர்வதேச ஹோட்டல் வடிவமைப்பு விருதையும் வென்ற, உயர்தர சொகுசு ஹோட்டலான Sun Siyam பாசிகுடா, 2026 மார்ச் 8 ஆம் திகதியன்று சர்வதேச மகளிர் தினத்தை விமரிசையாகக் கொண்டாடியது. ஒவ்வொரு பெண்ணும் உண்மையாக மதிக்கப்படுவதையும் கௌரவிக்கப்படுவதையும் உறுதிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக அனுபவங்களுடனான ஒரு முழுமையான நிகழ்ச்சித்திட்டத்துடன் இத்தினம் கொண்டாடப்பட்டது. 

“Eat, Pray & Love” எனும் தொனிப்பொருளின் கீழ், ஹோட்டலின் அடையாளத்தை வெளிப்படுத்தும் நிறங்களான வெள்ளை, இளமஞ்சள் (Beige) மற்றும் பொன்னிற ஆடை அலங்காரங்களுடன், காலை முதல் நள்ளிரவு வரை ஒரு தடையற்ற பயணமாக இத்தினம் அமைந்திருந்தது. காலை 10:00 மணிக்கு ஆரம்பமான ‘Queen’s Kitchen’ சமையல் செய்முறை விளக்கத்துடன் அதிதிகள் தமது அனுபவத்தைத் தொடங்கினர். இதில் ஹோட்டலின் தலைமைச் சமையல் கலைஞர், பாரம்பரிய இலங்கை உணவுகளை மிக நெருக்கமான மற்றும் நேரடிப் பயிற்சியுடன் தயாரித்துக் காண்பித்தார். இந்தத் தருணங்களை Instagram இல் பகிர்ந்துகொண்டவர்களுக்கு இலவச மொக்டெயில் பானம் வழங்கப்பட்டது. இந்தச் சிறிய கௌரவிப்பானது, அந்த தினத்தின் கனிவான மற்றும் உன்னதமான சூழலுக்கு ஒரு சிறந்த ஆரம்பமாக அமைந்தது. 

இந்த விசேட தினத்தை முன்னிட்டு, ஹோட்டலின் Beach Dinner மற்றும் Wine Cellar Dinner அனுபவங்களுக்கு 10% விலைக்கழிவு வழங்கப்பட்டது. இதன் மூலம் அதிதிகள் கடற்கரையில் அல்லது இலங்கை கிழக்குக் கரையின் மிகப்பெரிய வைன் நிலவறையான ‘The Cellar’ இன் இரம்மியமான சூழலில் இத்தினத்தைக் கொண்டாட வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும், Spa சிகிச்சைகளுக்கு 20% விலைக்கழிவும், அன்றைய தினம் பதிவு செய்யப்படும் Excursionகளுக்கு 10% விலைக்கழிவும் வழங்கப்பட்டமை சாகச விரும்பிகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. அன்றைய பொழுதானது, இரவு 9:00 மணிக்கு கடற்கரையில் ஆரம்பமான “Queens on Screen” எனும் வெளிப்புறத் திரைப்பட நிகழ்வுடன் இனிதே நிறைவடைந்தது. இதில் பெண்களின் பலம், நளினம் மற்றும் வலுவூட்டலை வெளிப்படுத்தும் கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. 

Sun Siyam பாசிகுடாவின் பொது முகாமையாளர் அர்ஷத் ரிபாய் கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் தினமானது வெறும் விலைக்கழிவுளை வழங்குவதற்காக அல்லது ஒரு நிகழ்வை நடத்துவதற்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. எம்முடன் தங்கியிருக்கும் அதிதிகள் அல்லது எம்முடன் பணியாற்றும் சக ஊழியர்கள் என ஒவ்வொரு பெண்ணும், இந்த இடம் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது என்பதை அவர்கள் உணரச் செய்வது எமது விருப்பமாகும். காலை முதல் இரவு வரை இயற்கையாகவே ஒன்றிணைந்த இந்த நிகழ்ச்சித்திட்டம், ஒவ்வொரு கட்டத்திலும் உண்மையான அர்த்தமுள்ள அனுபவங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, பெண்களுக்கு தொழில்முறை வாய்ப்புகள் இன்னும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள கிழக்கு மாகாண சமூகங்களிலிருந்து வருகை தந்துள்ள எமது பெண் ஊழியர்களைக் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம். அவர்கள் ஒவ்வொரு நாளும் இந்த ஹோட்டலுக்கு கொண்டு வரும் அந்த கனிவான உபசரிப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தமது பணியின் மீதான பெருமிதம் ஆகியவையே Sun Siyam பாசிகுடா ஹோட்டலை ஒரு தனித்துவமான அனுபவமாக மாற்றுகின்றன.” என்றார். 

அதிதிகளுக்கான கொண்டாட்டங்களுக்கு அப்பால், இந்நாளின் நோக்கம் உள்நோக்கியும் அமைந்திருந்தது. இலங்கையின் சனத்தொகையில் அரைப்பங்கிற்கும் அதிகமானோர் பெண்களாக இருந்தபோதிலும், நாட்டின் விருந்தோம்பல் துறையில் அவர்களின் பங்களிப்பு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. உலகளாவிய ரீதியில் இத்துறையில் பெண்களின் பங்களிப்பு அரைப்பங்கிற்கும் மேலாக இருக்கும் நிலையுடன் ஒப்பிடுகையில் மிகவும் பாரிய இடைவெளியாகும். Sun Siyam பாசிகுடா இந்த நிலையை சீர்செய்வதற்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகின்றது. கிழக்கு மாகாணத்தின் அண்மித்த சமூகங்களைச் சேர்ந்த பெண்களைப் பணியில் அமர்த்துவதுடன், அவர்களுக்கு முறையான பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றது. குறிப்பாக, பாதுகாப்பு மற்றும் தொழில்முறை வளர்ச்சி என்பவற்றில் எவ்வித விட்டுக்கொடுப்புகளும் இல்லாத ஒரு பணிச்சூழலை உருவாக்குவதில் ஹோட்டல் பெரிதும் கவனம் செலுத்துகிறது. 

உலகிலேயே முதன்முறையாக ஒரு பெண் பிரதமரைத் தெரிவுசெய்த பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நாடு இலங்கை. இந்த வரலாற்றுப் பின்னணியை, ஒரு உந்துசக்தியாகவும் பொறுப்பாகவும் கொண்டு Sun Siyam பாசிகுடா இயங்குகின்றது. ஊழியர் ஆட்சேர்ப்பு முதல் வழிகாட்டல் ஆலோசனைகள் வரை, ஹோட்டல் மட்டத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்துச் செயற்பாடுகளும் அந்தப் பாரம்பரியத்திற்கு வலுசேர்க்கும் ஒரு நிலையான மற்றும் நடைமுறை ரீதியான கௌரவிப்பாகும். 

Sun Siyam பாசிகுடாவின் மகளிர் தின கொண்டாட்டங்களினூடாக ஹோட்டலின் பரந்த தத்துவத்தின் ஒரு அங்கம் ஏற்படுத்தப்பட்டு, உண்மையான விருந்தோம்பல் என்பது அதனை வழங்கும் மக்களிடமிருந்து ஆரம்பிக்கின்றது என்பதில் இக்குழுமம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. இந்த ஹோட்டல், சர்வதேச ரீதியில் அங்கீகாரங்களைப் பெற்றுத் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதுடன், அந்த அங்கீகாரங்களைச் சாத்தியமாக்கிய உள்ளூர் சமூகங்கள் மீதான தமது பொறுப்புணர்வை மென்மேலும் வலுப்படுத்தி வருகின்றது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title