Header Logo

வணிகம்
ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் ஆரம்பித்துள்ள Vauxhall DSTRCT நிர்மாணச் செயற்திட்டம்: ஆரம்பிப்பது குறித்து அறிவிக்கப்பட்டவுடனேயே 100 க்கும் மேற்பட்ட அடுக்கு

Mar 13, 2026 - 01:19 PM -

0

ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் ஆரம்பித்துள்ள Vauxhall DSTRCT நிர்மாணச் செயற்திட்டம்: ஆரம்பிப்பது குறித்து அறிவிக்கப்பட்டவுடனேயே 100 க்கும் மேற்பட்ட அடுக்கு

இலங்கையின் முதன்மையான ஆதன நிர்மாண நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் (John Keells Properties - JKP), தனது மற்றுமொரு குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டத்தை ஆரம்பிக்கின்றமை குறித்து அறிவித்துள்ளது. Vauxhall DSTRCT என்ற பெயரில் அமையவுள்ள இச்செயற்திட்டமானது கொழும்பின் நகர மையத்தில் 60 மாடிகள் கொண்ட குடியிருப்புச் செயற்திட்டமாக நிர்மாணிக்கப்படவுள்ளது. 

இச்செயற்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே 100 க்கும் மேற்பட்ட அடுக்குமனைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமையானது இச்செயற்திட்டத்திற்கு சந்தையில் எந்தளவு கேள்வி உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. கொழும்பின் மையத்தின் சிறந்த இடத்தில் அமையும் இக்குடியிருப்புக்கு சிறந்த கேள்வி உள்ளமையை இது எடுத்துக்காட்டுகின்றது. 

கொழும்பு 02, வொக்சோல் வீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமையவுள்ள இச்செயற்திட்டமானது கொழும்பிலுள்ள அத்தனை வசதிகளையும் கொண்ட நகர்ப்புற அமைவிடங்களில் ஒன்றில் நிர்மாணிக்கப்படவுள்ளது. நகரின் அழகிய வான்பரப்பு மற்றும் பேர வாவி ஆகியவற்றின் ரம்மியமான காட்சிகள் மட்டுமல்லாது கொழும்பின் முக்கிய வணிக மாவட்டங்கள், விருந்தோம்பல் அமைவிடங்கள், முன்னணி பாடசாலைகள், சுப்பர்மார்க்கெட்டுக்கள், வாழ்க்கைமுறை மையங்கள், மற்றும் பிரதான போக்குவரத்து மார்க்கங்கள் போன்றவற்றுக்கு நேரடி இணைப்பையும் இது கொண்டுள்ளது. அதன் காரணமாக, நகரின் மையத்தில் வாழும் சௌகரியத்தை நாடுகின்ற தொழில் புரிகின்றவர்கள், குடும்பங்கள், மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்ததாக காணப்படுகின்றது. 

மிகக் கவனமாக சிந்தித்து வடிவமைக்கப்படுகின்ற ஒன்று, இரண்டு, மூன்று, மற்றும் நான்கு படுக்கை அறைகளைக் கொண்ட குடியிருப்புக்களை Vauxhall DSTRCT அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் நவீன நகர வாழ்வை மேம்படுத்துகின்ற பல்வகைப்பட்ட வாழ்க்கைமுறை வசதிகளையும் கொண்டுள்ளது. 

இதனை ஆரம்பிப்பது குறித்து ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஆதனங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கான தலைமை அதிகாரி நயன மாவில்மட அவர்கள் கருத்து தெரிவிக்கையில்: 

“மக்களின் வாழ்வு முறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு கொழும்பு முகங்கொடுத்து வருவதுடன், இந்நகரத்தின் இணைப்பு வசதிகள் மற்றும் வானளாவில் எழுகின்ற கட்டங்களின் நிர்மாணம் உத்வேகம் பெற்றுள்ள நிலையில், அடுக்குமனை வாழ்வும் தொடர்ந்து உத்வேகமடைந்து வருகின்றது. Vauxhall DSTRCT போன்ற செயற்திட்டங்கள் மேற்குறிப்பிட்ட பரிணமிப்பிற்கு நேரடி பதிலை வழங்குவதுடன், நகரின் மையத்தில் வாழும் அதேசமயம், நவீன நகர்ப்புற வாழ்க்கைமுறைகளுக்கு உதவுவதில் மிகவும் கவனமாகச் சிந்தித்து வடிவமைக்கப்பட்ட இட மற்றும் ஏனைய வசதிகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பினை குடியிருப்பாளர்களுக்கு வழங்குகின்றன.” 

TRI-ZEN போன்ற இதையொத்த செயற்திட்டங்களுக்கு, அண்மைக் காலங்களில் வலுவான வாடகைக் கேள்வி மற்றும் மூலதன மதிப்பு அதிகரிப்பு ஆகியன மத்திய அமைவிடத்தில் அமைந்துள்ள குடியிருப்பு ஆதனங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் முதலீட்டு ஈர்ப்பினை மேலும் வலுப்படுத்துகின்றன. 

மிகவும் கவர்ச்சியான அறிமுக விலையை வழங்கியவாறு Vauxhall DSTRCT செயற்திட்டம் சந்தையில் காலடியெடுத்து வைப்பதுடன், நாட்டில் மிகவும் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளது. மேலும் செயற்திட்ட நிர்மாண நிறுவனங்களில் ஒன்றிடமிருந்து கொழும்பின் நகர மையத்தில் அமையும் முக்கியத்துவம் வாய்ந்த நிர்மாணச் செயற்திட்டத்தில் குடியிருப்பொன்றை தமதாக்கிக் கொள்ளும் வாய்ப்பினை கொள்வனவாளர்களுக்கு வழங்குகின்றது. 

ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் நிறுவனம் தனது TRI-ZEN நிர்மாணச் செயற்திட்டத்தில் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, Vauxhall DSTRCT செயற்திட்டத்திலும் அதனை அறிமுகப்படுத்தவுள்ளது. ஸ்மார்ட் தொழில்நுட்பத்திற்கு இடமளிக்கின்ற அடுக்குமனைகளை இலங்கையில் முதன்முதலாக அறிமுகப்படுத்திய பெருமை JKP நிறுவனத்தையே சாரும் என்பதுடன், Vauxhall DSTRCT செயற்திட்டமும் ஸ்மார்ட் வாழ்வு என்ற கோட்பாட்டை மேலும் மேம்படுத்தும் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதுடன், குடியிருப்பாளர்களுக்கு இன்னும் சிறப்பான, தங்குதடையற்ற இணைப்பு வசதிகளைக் கொண்ட வாழ்க்கைமுறையை வழங்கும். 

Vauxhall DSTRCT செயற்திட்டத்தின் மூலமாக, முதன்மையான அமைவிடம், சமகாலத்திற்கு ஏற்ற வடிவமைப்பு, ஸ்மார்ட் தொழில்நுட்பம், மற்றும் முதலீட்டிற்கான நீண்டகால மதிப்பு ஆகியவற்றை ஒன்றிணைக்கின்றது. அதேசமயம், நகரில் பரிணமித்து வருகின்ற குடியிருப்புத் துறைக்கு பங்களிப்பாற்றிவாறு, கொழும்பின் அடுத்த கட்ட நகர்ப்புற வாழ்வை மேம்படுத்தும் தனது பயணத்தை ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் நிறுவனம் தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுக்கின்றது. 

கொழும்பின் வான்பரப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் திருப்புமுனை மிக்க வகிபாகத்தை ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் நிறுவனம் கடந்த இரு தசாப்காலத்திற்கும் மேலாக ஆற்றி வந்துள்ளது. Crescat City ல் அமைந்துள்ள Emperor மற்றும் Monarch, OnThree20, 7th Sense, TRI-ZEN, City of Dreams Sri Lanka - Cinnamon Life மற்றும் கண்டியிலுள்ள விக்டோரியா கோல்ஃப் உல்லாச விடுதி உள்ளிட்ட நாட்டின் மிகவும் புகழ்பூத்த செயற்திட்டங்கள் பலவற்றை வழங்கி, இலங்கையில் நவீன குடியிருப்புத் துறையை வளர்ப்பதில் இந்நிறுவனம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. மேற்குறிப்பிட்ட தனித்துவம் வாய்ந்த செயற்திட்டங்கள் மூலமாக வடிவமைப்பு, வாழ்க்கைமுறை ஒருங்கிணைப்பு, மற்றும் சமகாலத்துக்கு ஏற்ற நகர்ப்புற வாழ்வு ஆகியவற்றில் தொடர்ந்தும் புதிய தர ஒப்பீட்டு நியமங்களை நிலைநாட்டி, இலங்கையில் முதன்மையான குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டங்களின் தரத்தை இந்நிறுவனம் ஏற்படுத்தி வருகின்றது. 

Vauxhall DSTRCT நிர்மாணச் செயற்திட்டம் குறித்த மேலதிக தகவல் விபரங்களை அறிந்து கொள்வதற்கு www.johnkeellsproperties.com என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும் அல்லது +94 711 638 638 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும்.

Comments
0

MOST READ

காணொளி
70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

title