Header Logo

வணிகம்
SLARDAR இன் BETSS.COM Sri Lanka Super Series 2026 வாகன பந்தயத் தொடர் கோலாகலமாக ஆரம்பம்

Mar 13, 2026 - 05:38 PM -

0

SLARDAR இன் BETSS.COM Sri Lanka Super Series 2026 வாகன பந்தயத் தொடர் கோலாகலமாக ஆரம்பம்

Sri Lanka Association of Racing Drivers and Riders (SLARDAR) ஆனது, ‘BETSS.COM Sri Lanka Super Series 2026’ மோட்டார் வாகன பந்தயத் தொடர் தொடர்பான அறிவிப்பை கொழும்பிலுள்ள DIMO 800 கேட்போர் கூடத்தில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விழாவில் அனுசரணையாளர்கள், ஊடக பங்காளர்கள், போட்டியாளர்கள் மற்றும் மோட்டார் பந்தய இரசிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் பேரலையை ஏற்படுத்தவுள்ள வருடத்தின் மற்றுமொரு விறுவிறுப்பான மோட்டார் வாகன விளையாட்டுத் தொடரின் அறிமுகமாக இது அமைந்தது. 

SLARDAR அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படும் 9ஆவது ஸ்ரீ லங்கா சூப்பர் சீரிஸ் தொடர் இதுவாகும். நாட்டின் மிகவும் மதிப்பு கொண்ட மற்றும் பிரபலமான மோட்டார் வாகன பந்தய சம்பியன்ஷிப் தொடர்களில் ஒன்றாக இது மாறியுள்ளது. கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான தொழில்முறை ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு பந்தயங்களை உள்ளடக்கிய இத்தொடர், இலங்கையின் சிறந்த பந்தயத் திறமையாளர்களை வெளிக் கொண்டுவரவுள்ளது. இத்தொடர் முழுவதும் வாகன பந்தய வீரர்கள் பல்வேறு வகையில் வடிவமைக்கப்பட்ட நிகழ்வுகளிலும் தளங்களிலும் (Hill Climb, Gravel, Tarmac) போட்டியிடவுள்ளார்கள். இதன் முடிவில் நாட்டின் சிறந்த வாகன பந்தய வீரர் மற்றும் மோட்டார் சைக்கிள் வீரருக்கு மகுடம் சூட்டப்படவுள்ளது. 

இச்சம்பியன்ஷிப் தொடரின் முக்கியத்துவம் குறித்து SLARDAR அமைப்பின் தலைவர் பிரசான் விஜயநாயக்க தெரிவிக்கையில், “ஸ்ரீ லங்கா சூப்பர் சீரிஸ் ஆனது, தேசிய மோட்டார் விளையாட்டு நாட்காட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக மாறியுள்ளது. ஒவ்வொரு வருடமும் வாகன ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் குழுவினரின் அர்ப்பணிப்பை எம்மால் காணக் கூடியதாக உள்ளது. எமது அனுசரணையாளர்களின் ஆதரவுடன், 2026ஆம் ஆண்டு சம்பியன்ஷிப் தொடரானது மேலும் பல உயரங்களை எட்டும் என நாம் நம்புகிறோம்.” என்றார். 

1983ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட SLARDAR அமைப்பானது, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் மோட்டார் வாகன விளையாட்டை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. பல்வேறு சிறிய சிறிய பந்தயத் திடல்களை வடிவமைத்த பெருமையும் இவ்வமைப்பிற்கு உண்டு. ஒரு முக்கிய சாதனையாக, 2024ஆம் ஆண்டில் இலங்கையின் முதலாவது தனியாருக்குச் சொந்தமான பந்தய திடலான கிரியுல்லவில் உள்ள 'மஹமேருவ ரேசிங் அரீனா' (Mahameruwa Racing Arena) திறந்து வைக்கப்பட்டது. இது நாட்டின் மோட்டார் வாகன விளையாட்டு உட்கட்டமைப்பு வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். 

இந்த ஆண்டுக்கான சம்பியன்ஷிப் ஏற்கனவே பெப்ரவரி 07 மற்றும் 08 ஆகிய தினங்களில் கிரியுல்லவில் நடைபெற்ற ‘Mahameruwa Rally Cross (Race 1)’ உடன் ஆரம்பமானது. அந்த வகையில் எதிர்வரவிருக்கும் நிகழ்வுகளாக, ஏப்ரல் 05 - 06: ‘Single Tree Hill Climb’ - நுவரெலியா; மே 09 - 10: Colombo Supercross - வெலிசறை; ஜூன் 27 - 28: Cavalry Supercross - குருணாகல்; செப்டெம்பர் 05 - 06: Katukurunda Circuit Meet; ஒக்டோபர் 17 - 18: Mahameruwa Rally Cross (Race 2) - கிரியுல்ல ஆகியன உள்ளடங்குகின்றன. 

இந்த தொடரானது டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சூப்பர் சீரிஸ் 2026 விருது வழங்கும் நிகழ்வு மற்றும் இரவு விருந்துடன் கூடிய நடன நிகழ்வு ஆகியவற்றுடன் நிறைவடையும். ஒவ்வொரு நிகழ்வும் நாடு முழுவதிலுமிருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பிரிவுகளில் பங்குபற்ற ஆவல்கொண்ட வலுவான போட்டியாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தச் சம்பியன்ஷிப்பிற்கு பல முன்னணி நிறுவனங்கள் அனுசரணை வழங்குகின்றமையானது அதன் உயர் அந்தஸ்தை காண்பிக்கின்றது. BETSS.COM பிரதான அனுசரணையாளராகவும், BYD உத்தியோகபூர்வ வாகன பங்காளராகவும் செயற்படுகின்றன. ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் ஜெனரல் உத்தியோகபூர்வ காப்புறுதி பங்காளராகவும், PEO SPORTS உத்தியோகபூர்வ தொலைக்காட்சி பங்காளராகவும் உள்ளன. அனைத்து நிகழ்வுகளும் PEO Sports ஊடாக நேரலையாக ஒளிபரப்பப்படுவதுடன் YouTube மற்றும் ஏனைய சமூக ஊடக தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. 

மேலதிக பங்காளர்களாக Rough Clothing உத்தியோகபூர்வ ஆடை பங்காளராகவும், Ninehearts உத்தியோகபூர்வ புகைப்பட பங்காளராகவும், Orzone Mineral Water உத்தியோகபூர்வ மினரல் நீர் பங்காளராகவும், Nawaloka Hospitals உத்தியோகபூர்வ சுகாதார பராமரிப்பு பங்காளராகவும், Fazaal Ceramics உத்தியோகபூர்வ குளியலறை பங்காளராகவும், Landmark Automobiles இணை அனுசரணையாளராகவும் இணைந்துள்ளன. நான்கு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்துடன், SLARDAR இலங்கையின் மோட்டார் வாகன விளையாட்டின் வளர்ச்சியை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. 

BETSS.COM ஸ்ரீ லங்கா சூப்பர் சீரிஸ் 2026 தொடரானது மற்றுமொரு உணர்ச்சியூட்டும் தொடராக அமையவுள்ளதோடு, வேகம், திறமை, விளையாட்டின் விசேடத்துவம் மூலம் போட்டியாளர்கள், பங்காளர்கள், இரசிகர்கள் ஆகிய அனைவரையும் ஒன்றிணைக்கவுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

title