Header Logo

வணிகம்
MasterChef Sri Lanka இன் உத்தியோகபூர்வ கோழி இறைச்சி விநியோகத்தராக New Anthoneys Farms இணைவு

Mar 16, 2026 - 06:33 PM -

0

MasterChef Sri Lanka இன் உத்தியோகபூர்வ கோழி இறைச்சி விநியோகத்தராக New Anthoneys Farms இணைவு

MasterChef Sri Lanka தனது அறிமுக பருவத்திற்கு உத்தியோகபூர்வ கோழி இறைச்சி விநியோகப் பங்காளரை தேட ஆரம்பித்த போது, அது கடினமான காரியமாக அமைந்திருக்கவில்லை. உற்பத்தியின் எந்தவொரு கட்டத்திலும் அன்ரிபயோட்டிக்களை பயன்படுத்தாது கோழிகளை வளர்க்கும் நாட்டின் ஒரேயொரு நிறுவனமான New Anthoneys Farms, இந்தப் போட்டிக்கு ஒரு இயல்பான தெரிவாக அமைந்தது. ஏனெனில், தட்டில் பரிமாறப்படும் உணவின் தரம் மற்றும் நேர்மையை உறுதிப்படுத்துவது இந்த சமையல் போட்டியின் அடிப்படை நோக்கமாக அமைந்திருந்தது. 

இந்தப் பங்காண்மை, பல்வேறு மட்டங்களில் மிகவும் அர்த்தமுள்ள ஒன்றாக அமைகின்றது. இலங்கையின் மிகச்சிறந்த சமையல் கலைகளைக் கொண்டாடும் ஒரு தளமாக MasterChef Sri Lanka திகழ்கிறது. அத்துடன், மிகச்சிறந்த சமையல் என்பது தரமான மூலப்பொருட்களிலிருந்து ஆரம்பிக்கின்றது என்பதையும், அது அன்ரிபயோட்டிக் அற்ற, எவ்வித குறுக்கு வழிகளும் இல்லாத, மற்றும் குஞ்சு பொரிப்பகத்திலிருந்து இல்லங்கள் வரை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் வளர்க்கப்படும் கோழிகளைக் குறிக்கின்றது என்பதையும் உறுதி செய்யும் வகையில் New Anthoneys Farms கடந்த 40 வருடங்களாக அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது. 

போட்டியாளர்கள் சமையலறையில் தமது புத்தாக்கத் திறனை வெளிப்படுத்துவதுடன், சுயாதீனமான முறையில் தரச் சான்று பெற்ற மிக உயர்ந்த தரத்திலான கோழி இறைச்சி உற்பத்திகளைப் பயன்படுத்துவார்கள். 2026 ஜனவரியில், பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் கையெழுத்திடப்பட்ட ஐந்து வருட கால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக New Anthoneys Farms அந்த அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியது. இலங்கை குடும்பங்களுக்கு மிகவும் பாதுகாப்பான கோழி இறைச்சியை வழங்க வேண்டும் எனும் நிறுவனத்தின் ஸ்தாபக கொள்கையாக எப்போதும் உள்ளது. 

உடன்படிக்கையின் கீழ், கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பீடத்தின் ISO/IEC 17025-சான்று பெற்ற உணவு பாதுகாப்பு மற்றும் தர உறுதிப்படுத்தல் ஆய்வுகூடம், ப்ரொய்லர் கோழி உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்தையும் பரிசோதித்து, தனது தரக் கோரிக்கைகளைத் தொடர்ச்சியான, சுயாதீனமான மற்றும் அறிவியல் பூர்வமான சான்றுகளுடன் உறுதிப்படுத்தும் இலங்கையின் முதலாவதும் ஒரேயொரு கோழி இறைச்சி உற்பத்தியாளராக New Anthoneys Farms திகழ்வதை உறுதி செய்கிறது. 

New Anthoneys Farms இன் நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் வியாபார அபிவிருத்தி முகாமையாளர் எரங்க குருகுலாரச்சி கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையானது உலகம் இன்னும் கண்டிராத சமையல் திறமைகள் நிறைந்த ஒரு நாடு என்பதை நாம் எப்போதும் நம்பி வருகின்றோம். அந்தத் திறமைகளுக்குப் பொருத்தமான ஒரு தளமாகவே MasterChef Sri Lanka திகழ்கிறது. எமக்கும் இதில் ஒரு அங்கமாக இருப்பது என்பது வெறும் ஒரு அனுசரணை (Sponsorship) மாத்திரமல்ல; மாறாக, சரியான தரமான மூலப்பொருட்களைப் பயன்படுத்தினால் இலங்கையின் உணவு கலாசாரம் எத்தகைய உயர் நிலையை அடைய முடியும் என்பதற்கான ஒரு வெளிப்பாடாகும்.” என்றார். 

இந்தத் தருணம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றது. தவிசாளர் எமில் ஸ்டான்லி மற்றும் பணிப்பாளர் எஸ்.எம்.டி. மேரி சீதா லக்ஷ்மி ஆகியோரினால் 1986 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட New Anthoneys Farms, தற்போது தனது 40 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. உள்ளூர் குடும்பங்களுக்குச் சிறந்த கோழி இறைச்சியை வழங்க வேண்டும் எனும் ஒரு நேரடி நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று இலங்கையின் அதிக சான்றிதழ்களைப் பெற்ற கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. இது FSSC 22000, ISO 22000, HACCP, GMP மற்றும் உள்நாட்டு, சர்வதேச ஹலால் சான்றிதழ்களைக் கொண்டுள்ளதுடன், Control Union Netherlands இனால் வழங்கப்பட்ட ISO 14064-1:2018 இன் கீழ் கிரீன்ஹவுஸ் எரிவாயு சரிபார்ப்பு அறிக்கையைப் பெற்ற இலங்கையின் ஒரேயொரு கோழி இறைச்சி நிறுவனமாகவும் விளங்குகின்றது. மேலும், 26 ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில், பதப்படுத்தப்பட்ட உணவுப் பிரிவில் சிறந்த ஏற்றுமதியாளர் விருதையும் இந்நிறுவனம் வென்றுள்ளது. 

இந்த அளவில் பாரிய அனுசரணைத் திட்டத்தை முன்னெடுப்பதென்ற பிரதான வர்த்தக நாமத்தின் தீர்மானமானது, அதன் பொதுச் சுகாதார நோக்கம் குறித்த தொடர்பாடல் முறையில் ஏற்பட்டுள்ள ஒரு திட்டமிட்ட மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றது. New Anthoneys Farms அண்மைக்காலமாக இலங்கையில் நுண்ணுயிர் எதிர்ப்பு தொடர்பான உரையாடல்களில் முன்னின்று செயற்பட்டு வருகின்றது. MasterChef Sri Lanka நிகழ்ச்சி, பாதுகாப்பான மற்றும் தரமான உற்பத்திப் பொருட்கள் குறித்த செய்தியை இன்னும் பரந்தளவிலான பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதுடன், நாட்டின் அதிகமானோர் பார்வையிடும் ஒரு உணவு சார்ந்த நிகழ்ச்சியின் ஊடாக அந்தச் செய்தியை மக்களிடையே ஆழமாகப் பதிய வைக்கின்றது. 

இந்த MasterChef பங்காண்மையானது, தொழில்முறை சமையலறைத் துறையில் நிறுவனத்தின் மிக முக்கியமான விரிவாக்கத்துடன் இணைந்து வருகின்றது. 2025 நவம்பரில், New Anthoneys Farms நிறுவனம் HORECA (Hotel, Restaurant and Catering) துறைக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட எட்டுத் தயாரிப்புகளைக் கொண்ட Chicken Havens எனும் உயர்தரத் தெரிவுகளை அறிமுகப்படுத்தியது. சீரான அளவு, சமைப்பதற்குத் தயார் நிலையிலுள்ள பொதிகள் மற்றும் தலைமைச் சமையல் கலைஞர்கள் மற்றும் கேட்டரிங் சேவைகளுக்குத் தேவையான நெகிழ்வுத்தன்மை ஆகிய தொழில்முறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தத் தயாரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன், நிறுவனத்தின் அடையாளமாக விளங்கும் அன்ரிபயோட்டிக் அற்ற மற்றும் முழுமையான சான்றிதழ் பெற்ற தரநிலையும் இதில் பேணப்படுகின்றது. 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் திட்டமிடப்பட்டுள்ள பாரிய விரிவாக்கங்களின் ஊடாக, Chicken Havens தெரிவானது New Anthoneys Farms நிறுவனத்தை சில்லறை விற்பனைத் துறையில் மாத்திரமன்றி, இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் உணவு சேவைத் துறையிலும் ஒரு பலமான போட்டியாளராக திகழச் செய்யும். 

நிறுவனத்தின் விரிவான உற்பத்தித் தெரிவுகளில், இலங்கையின் முதலாவது முழுமையாக உரமாகக் கூடிய பொதியிடப்பட்ட, அன்ரிபயோட்டிக் அற்ற கோழி இறைச்சி வகையான HarithaHari பிரதானமானதாகும். அத்துடன் நாட்டின் முதலாவது சமைப்பதற்குத் தயாரான உறைந்த கிறிஸ்பி சிக்கன் வர்த்தக நாமம் Crizzpys, நிறுவனத்தின் சொகுசு இறைச்சி விற்பனை நிலையங்களின் வலையமைப்பான Meatlery மற்றும் நாடளாவிய ரீதியில் இலவசமாக இல்லங்களுக்கே விநியோகிக்கும் சேவையான Dorakadapaliya ஆகியவையும் இதில் அடங்குகின்றன. New Anthoneys Farms தனது ஐந்தாவது தசாப்தத்தில் கால் பதிக்கும் இவ்வேளையில், MasterChef Sri Lanka உடனான அதன் கூட்டாண்மையானது இந்த நிறுவனம் எத்தகைய உயரிய தரத்திற்காகக் காலம் காலமாகத் துணை நிற்கின்றது என்பதையும், இலங்கை குடும்பங்களுக்கும், இலங்கை சமையல் கலைஞர்களுக்கும் மிகச்சிறந்ததைத் தவிர வேறு எதுவுமே தேவையில்லை என்பதையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

Comments
0

MOST READ

காணொளி
ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

title