Mar 16, 2026 - 06:40 PM -
0
டிஜிட்டல் கொடுப்பனவுகளில் சர்வதேச அளவில் முன்னிலை வகித்து வருகின்ற வீசா, அங்குரார்ப்பண MasterChef Sri Lanka தொடருக்கான உத்தியோகபூர்வ கொடுப்பனவுக் கூட்டாளராக இணைந்துள்ளமை குறித்து தனது அறிவிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. உலகில் மிகவும் பிரபலமாகத் திகழும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் ஒன்றை முதல்முறையாக கண்டுகளிக்கும் வாய்ப்பு இலங்கையில் தொலைக்காட்சி நேயர்களுக்கு இதன் மூலமாக கிட்டியுள்ளது.
உலகில் மிகவும் வெற்றிகரமான சமையற்கலை தொலைக்காட்சிப் போட்டி நிகழ்வாக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ள MasterChef நிகழ்வானது, சர்வதேசரீதியாக 70 க்கும் மேற்பட்ட பல்வகைப்பட்ட வடிவங்களுக்கு நீண்டுள்ளதுடன், சர்வதேச அளவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில், 10,000 க்கும் மேற்பட்ட அத்தியாயங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இலங்கையில் இதன் வருகை தீர்க்கமான சாதனை மைற்கல்லாக மாறியுள்ளதுடன், இந்நாட்டின் செழுமையான சமையற்கலை மரபு மற்றும் வளர்ந்துவரும் திறமைசாலிகளை சர்வதேச மேடையில் இடம்பெறச் செய்யவுள்ளது.
இலங்கையில் உணவு விருந்து அனுபவத்தை வழங்குவதில் வீசா தொடர்ந்தும் பெரும் ஆர்வத்துடன் செயற்பட்டு வருவதுடன், விசேடமாக வடிவமைக்கப்பட்ட அனுபவங்கள் மற்றும் பிரத்தியேகமான வரப்பிரசாதங்கள் மூலமாக நுகர்வோர் எவ்வாறு உணவுகளை ஆராய்ந்த, அனுபவித்து, அதற்கான கொடுப்பனவுகளை மேற்கொள்கின்றனர் என்பதை மேம்படுத்துவதில் அதன் தற்போதைய முயற்சிகளை சிறப்பாகப் பிரதிபலிக்கின்றது. இந்த அர்ப்பணிப்பை அத்திவாரமாகக் கொண்டு, உலகளாவிய பொழுதுபோக்கு அம்சத்தையும், உள்நாட்டு சமையற்கலைத் திறமையையும் ஒன்றாகக் கலந்து, இலங்கையின் செழுமையான உணவுக் கலாச்சாரத்தைப் போற்றிக் கொண்டாடும் அதேசமயம், டிஜிட்டல் புத்தாக்கத்தினூடாக சமூகங்களுக்கு வலுவூட்டி, சுற்றுலாத்துறை மற்றும் சிறு தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்து, இதற்கான அணுகலை விரிவுபடுத்தும் முயற்சியாக MasterChef Sri Lanka உடனான கூட்டாண்மை மாறியுள்ளது.
வீசா நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான முகாமையாளர் அவாந்தி கொலம்பகே அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “நாட்டின் வலிமைமிக்க சமையற்கலை பாரம்பரியம் மற்றும் சர்வதேச அரங்கில் வளர்ச்சி கண்டு வரும் அதன் செல்வாக்கு ஆகியவற்றின் வலிமைமிக்க அங்கீகாரமாக இலங்கையில் MasterChef நிகழ்வின் வருகை அமைந்துள்ளது. இலங்கையின் அசல் சுவை வடிவங்களைப் போற்றிக் கொண்டாடுவதற்கான மேடையை இது வழங்கும் அதேசமயம், எமது உணவுக் கலாச்சாரத்தினுள் புத்தாக்கத்தை ஆராய்வதற்கு அடுத்த தலைமுறைக்கு உத்வேகமளிக்கின்றது. வீசா மற்றும் MasterChef ஆகிய இரண்டின் பொதுவான சிறப்பம்சங்களான புத்தாக்கத்தின் வலிமை மற்றும் அனைவரையும் அரவணைக்கும் விழுமியங்கள் மீதான எமது நம்பிக்கையை இக்கூட்டாண்மை பிரதிபலிக்கின்றது. இலங்கையின் சமையற்கலை திறமைசாலிகளை வெளிக்கொண்டு வந்து, நாடெங்கிலுமுள்ள உணவு மற்றும் சுற்றுலாத்துறை பிரிவுகள் மத்தியில் சிறு தொழில் முயற்சிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய வாய்ப்புக்களுக்கு உத்வேகமளிப்பதே எமது நோக்கம். MasterChef Sri Lanka நிகழ்வுக்கு வீசா அனுசரணையளிக்க முன்வந்துள்ள இத்தருணத்தில், இந்நாட்டின் மிகச் சிறந்த சமையற்கலை தனித்துவத்தைப் போற்றிக் கொண்டாடுகின்ற பயணத்தில் அங்கம் வகிப்பதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், இலங்கை மீது நாம் கொண்டுள்ள நீண்ட கால அர்ப்பணிப்பை இதன் மூலமாக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம்.”
Reality TV Productions Pvt Ltd நிறுவனத்தின் தலைவர் அஜித் கம்லத் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “Master Chef Sri Lanka நிகழ்வின் முதலாவது தொடருக்கு உத்தியோகபூர்வ கொடுப்பனவுக் கூட்டாளராக வீசா போன்ற சர்வதேச வர்த்தகநாமத்துடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். Master Chef நிகழ்ச்சி தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்புச் செய்யப்பட்டு வருவதுடன், இந்த நிகழ்ச்சிக்கான உரிமையைப் பெற்று, உள்நாட்டுக்கு ஏற்றவாறு வழங்குவதற்கான அனுமதியைப் பெற்றுள்ள 72 வது நாடாக இலங்கை மாறியுள்ளதுடன், சமையற்கலை மகத்துவம், திறமைசாலிகள் மற்றும் பேரார்வம் ஆகியவற்றைக் காண்பிக்கும் உலகளாவிய நிகழ்வில் நாமும் இணைவதற்கு வாய்ப்பளித்துள்ளது. இலங்கையில் Master Chef நிகழ்வின் பிரத்தியேக வணிக உரிமை மற்றும் தயாரிப்பாளர் என்ற ரீதியில், இலங்கையின் சமையற்கலை மகத்துவம், எமது பாரம்பரியம், மற்றும் பல்வகைப்பட்ட உணவு வகைகளை வெளி உலகிற்கு காண்பிப்பதே எமது நோக்கமாகவுள்ளது. இந்த பயணத்தில் வீசா நிறுவனத்தை எமது பங்காளராகக் கொண்டிருப்பது எமக்கு பெரும் பலம் சேர்ப்பதுடன், அவர்களுடைய வருகையை நாம் மிகவும் மதிக்கின்றோம்.”
MasterChef நிகழ்ச்சி சர்வதேச மட்டத்தில் ஒவ்வொரு தொடரின் போதும் பல மில்லியன் கணக்கான நேயர்களை தொடர்ந்தும் ஈர்த்து வருவதுடன், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களில் இது தொடர்பில் பாரிய ஈடுபாடுகள் இடம்பெற்று வருகின்றமை உலகில் மிகவும் அதிகமானவர்களை ஈர்த்துள்ள சமையற்கலை போட்டி நிகழ்வுகளில் ஒன்றாக அதன் ஸ்தானத்தை வலுவாக நிலைநிறுத்தியுள்ளது. சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசையில் இது ஒளிபரப்புச் செய்யப்படுவது உணவு என்ற சர்வதேச மொழியினூடாக உலகிலுள்ள நேயர்களை ஈர்ப்பதற்கு இலங்கை தயாராகவுள்ளதை இது எடுத்துக் காட்டுகின்றது.
வீசா நிறுவனம் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் நிலைபெற்றுள்ளதுடன், MasterChef Sri Lanka உடனான அதன் கூட்டாண்மை, குறிப்பாக உணவு, விருந்து, மற்றும் பகிரப்படும் தருணங்களில் நுகர்வோரின் அன்றாட அனுபவங்களை அர்த்தமுள்ளதாக மாற்றும் அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றது.
வீசா (Visa Inc.) குறித்த விபரங்கள்
டிஜிட்டல் கொடுப்பனவுகளில் உலகளாவில் முன்னிலை வகித்து வருகின்ற Visa (NYSE: V), 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நுகர்வோர், வணிகர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரச ஸ்தாபனங்கள் ஆகியவற்றுக்கிடையில் கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்கு அனுசரணையளித்து வருகின்றது. தனிநபர்களும், வணிகங்களும், மற்றும் பொருளாதாரங்களும் வளம் காண்பதற்கு இடமளிக்கின்ற புத்தாக்கம்மிக்க, சௌகரியமான, நம்பகமான, மற்றும் பாதுகாப்பான கொடுப்பனவுகள் வலையமைப்பினூடாக உலகினை ஒன்றிணைப்பதே எமது நோக்கம். எங்கும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரங்கள், எங்கும் அனைவரையும் மேம்படுத்தும் என்றும், பண இயக்கத்தின் எதிர்காலத்திற்கு அணுகலை அத்திவாரமாகக் காண்பிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். மேலும் தகவல் விபரங்களுக்கு Visa.com.
தொடர்புகளுக்கு:
சந்தீபனி ரத்நாயக்க
sandeepani@hardtalk.lk
