Header Logo

வணிகம்
ACCA விருதுகளில் நிலைபெறுதன்மை அறிக்கையிடலில் முன்னணி நிறுவனமாக கொமர்ஷல் வங்கி கௌரவிக்கப்பட்டது

Mar 16, 2026 - 06:49 PM -

0

ACCA விருதுகளில் நிலைபெறுதன்மை அறிக்கையிடலில் முன்னணி நிறுவனமாக கொமர்ஷல் வங்கி கௌரவிக்கப்பட்டது

கொமர்ஷல் வங்கியானது நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான தனது உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் மூலோபாய கவனம் காரணமாக, வங்கித்துறையில் நிலைபெறுதன்மையை வங்கி மூலோபாயத்திலும் செயல்பாடுகளிலும் ஒருங்கிணைப்பதில் முன்னணி வகிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், ACCA Sri Lanka Sustainability Reporting Awards 2025 நிகழ்வில் வங்கித் துறைக்கான தங்க விருதையும், அனைத்து பிரிவுகளிலும் ஒட்டுமொத்த Runner Up விருதையும் பெற்றுள்ளது. 

இந்த சாதனையைப் பற்றி கொமர்ஷல் வங்கியின் பிரதம நிதி அதிகாரி திரு. பிரசன்ன இந்திரஜித் தெரிவிக்கையில் இந்த விருதுகள் வங்கியின் நிலைபெறுதன்மை அணுகுமுறை ஒழுங்குபடுத்தப்பட்டதையும் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்டதையும் பிரதிபலிக்கின்றன. இந்த அங்கீகாரங்கள் கொமர்ஷல் வங்கியில் நிலைபெறுதன்மை என்பது புறநிலை முயற்சி அல்ல மாறாக, இடர்களை நிர்வகிப்பது, நிறுவனத்தை வழிநடத்துவது, மற்றும் கடன் மற்றும் முதலீட்டு முடிவுகளை மேற்கொள்வது ஆகியவற்றின் அடிப்படைப் பகுதியாக இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. இந்த ஒருங்கிணைப்பு மூலம் வாடிக்கையாளர்களுக்கான வலுவான சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதுகாப்புகளையும், மேலும் பொறுப்பான நிதி தீர்வுகளையும் வழங்க முடிகிறது அதே சமயம் வங்கிக்கு நீண்டகால இடர் வெளிப்பாட்டையும் குறைக்கிறது, என்றார். 

கொமர்ஷல் வங்கியானது வங்கித் துறைக்கான தங்க விருதினை வென்றமை கடுமையான ஒழுங்குமுறை மற்றும் அதிக இடர் உள்ள துறையில் செயல்படும் வங்கிகளுக்கிடையில் நிலைபெறுதன்மை செயல்திறனில் முன்னணி வகிப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த வங்கித்துறையானது ஒழுங்குமுறை அமைப்புகள், முதலீட்டாளர்கள் மற்றும் உலகளாவிய பங்குதாரர்களால் நெருக்கமாக கண்காணிக்கப்படுகிறது.இந்த விருது, நிலைபெறுதன்மையை நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நடவடிக்கைகளுக்குள் மட்டுப்படுத்தாமல், கடன் வழங்கல், இடர் முகாமைத்துவம், நிர்வாகம் மற்றும் அன்றாட வங்கி செயல்பாடுகளுக்குள் ஒருங்கிணைக்கும் வங்கியின் திறனை பிரதிபலிக்கிறது. 

அனைத்து தொழில்துறைகளிலும் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த Runner Up அங்கீகாரம், இந்த சாதனையின் பரப்பளவை மேலும் வலியுறுத்துகிறது. இது, நிலைபெறுதன்மை முன்னேற்றம் பாரம்பரியமாக அதிகமாகவும் முதலீட்டு மூலதனம் அதிகமாகவும் உள்ள சக்தி, உற்பத்தி, தொலைத்தொடர்பு மற்றும் பல்துறை கூட்டுத்தாபனங்கள் போன்ற துறைகளில் செயல்படும் நிறுவனங்களை விட கொமர்ஷல் வங்கி முன்னிலையில் இருப்பதை வெளிப்படுத்துகிறது.இந்த சிறப்பு அங்கீகாரம், நிதி சேவைத் துறையைத் தாண்டி, கொமர்ஷல் வங்கியை இலங்கையில் மிகவும் நிலைபெறுதன்மை கொண்ட நிறுவனங்களில் ஒன்றாக நிலைநிறுத்துகிறது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 272 தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. 

மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.


MOST READ

காணொளி
அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

title