Mar 17, 2026 - 03:08 PM -
0
“எனது மன அமைதிக்காக காளான் செய்கையை நான் ஆரம்பித்தேன், அது வியாபாரமாக மாறும் என நான் எதிர்பார்க்கவில்லை” என ஜா-எல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ஜோன் கீல்ஸ் பிரஜா சக்தி வாழ்வாதார திட்டத்தின் கீழ் காளான் செய்கையில் ஈடுபடும் இந்திகா லசந்தி தெரிவித்தார். “காளான் வளர்ப்பு அறை ஜோன் கீல்ஸ் மையம் எனக்கு ஆதரவளித்திருந்ததுடன், பயிற்சிகளையும் ஆரம்ப உதவிகளையும் வழங்கியிருந்தது. அவற்றைக் கொண்டு, எனது வியாபாரத்தை நான் கட்டியெழுப்பியதுடன், தற்போது கீல்ஸ் சுப்பர்மார்க்கெட்களுக்கு விளைச்சல்களை விநியோகித்து வருகிறேன். எனது சமூகத்தைச் சேர்ந்த ஏனைய பெண்களுக்கு இது ஊக்கமளிக்கும் செயற்பாடாக அமைந்திருந்தது.” என லசந்தி மேலும் குறிப்பிட்டார்.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் 2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, கூட்டாண்மை சமூகப் பொறுப்புச் செயற்பாட்டுப் பிரிவான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் நிலைபேறான செயற்பாடுகளினால் வலுவூட்டப்பட்ட பல நூற்றுக் கணக்கான பெண்களில் ஒருவராக இந்திகா லசந்தி திகழ்கிறார். பொருளாதார மீட்சி, கல்வி, ஆக்கத்திறன் மற்றும் நிபுணத்துவ வளர்ச்சி ஆகியவற்றில் தொடர்ந்தும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் “நாளைக்காக தேசத்திற்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்திற்கமைய இந்த செயற்பாடுகள் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் தொனிப்பொருள் “பகிர்வோம் பயன் பெறுவோம்” (‘Give To Gain’) என்பதாகும். பகிரும் குணம் மற்றும் இணைந்த செயற்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதை இலக்கக் கொண்ட இந்தத் திட்டம், பெண்களுக்கு வலுவூட்டுவதனூடாக, பகிரப்பட்ட சுபீட்சத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது. கல்வி, தலைமைத்துவம், தொழில்முயற்சி, அறிவியல், கலை மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் பெண்கள் வெற்றியடையும் போது, ஒட்டுமொத்த சமூகமும் பலமடைகின்றது.
கல்வியில் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் முதலீடுகளினூடாக பெண்களுக்கு தமது கல்விசார் இலக்குகளை சென்றடைவதற்கு ஆதரவளிக்கப்படுகிறது. பொருளாதார ரீதியில் சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள இளைஞர்களுக்கு தமது உயர் தரக் கல்வியையும், பல்கலைக்கழக கல்வியையும் தொடர்வதற்கு மாதாந்தம் கொடுப்பனவை வழங்கும் வகையில் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் உயர் கல்வி புலமைப்பரிசில் திட்டம் அமைந்துள்ளது. உயர் கல்வி புலமைப்பரிசிலைப் பெற்றுக் கொண்ட சுரனி ஹிமாயா கருத்துத் தெரிவிக்கையில், “எனது உயர் தர கல்வியை தொடர்கையில் வழங்கப்பட்ட மாதாந்தக் கொடுப்பனவினூடாக, எனது பிரத்தியேக வகுப்பு மற்றும் தங்குமிட செலவுகளை ஈடு செய்ய முடிந்திருந்தது. எனது குடும்பத்தின் மீதான அழுத்தத்தை குறைத்திருந்ததுடன், கற்றல் செயற்பாடுகளில் கவனம் செலுத்த என்னை ஊக்குவித்திருந்தது.” என்றார்.
ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையினால் கடந்த 32 வருடங்களாக அனுசரணை வழங்கி முன்னெடுக்கப்படும் திறந்தவெளி கலை சந்தையான கலா பொல 2026 நிகழ்வில் பங்கேற்றவர்களில் ஒருவரான யு.வி.ரூபிகா ஜயந்தி கருத்துத் தெரிவிக்கையில், “என்னை ஒரு கலைஞராக அடையாளப்படுத்த கலா பொல வலுவூட்டியிருந்தது. ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையினூடாக கிடைத்திருந்த ஆதரவினூடாக, எனது கலைப் படைப்புகளை கலா பொல 2026 இல் காட்சிப்படுத்த எனக்கு உந்துசக்தி கிடைத்திருந்தது. எனது படைப்புகளை தயார்ப்படுத்துவது முதல் வாடிக்கையாளர்களுடன் ஈடுபடுவது வரை, எனது சிறந்த திறமையை வெளிப்படுத்துவதற்கு ஊக்குவித்து, பெருமைக்குரிய அனுபவத்தை பெற ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்தது.” என்றார்.
மேலும், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் துணை நிறுவனமான Infomate (Pvt) Ltd உடன் இணைந்து முன்னெடுத்திருந்த மற்றுமொரு நீண்ட கால செயற்பாடான, கிராமிய BPO இனால் தொடர்ந்தும் நிபுணத்துவ வளர்ச்சிக்கான ஆரம்பநிலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. சீனிகம BPO இன் பணியாளரான அஷானி கவுந்திகா குறிப்பிடுகையில், “இந்த நிலையினூடாக, என்னால் திறன்களை வளர்த்துக் கொள்ள முடிந்தது மட்டுமன்றி, அலுவலகத்தில் பணியாற்றுவது என்ன என்பதை உணரவும், ஒரு தலைவராக என்னை வளர்த்துக் கொள்ளவும், Infomate அலுவலகத்துடன் ஒழுங்கிணைப்புகளை பேணவும் பயின்றேன். காலப்போக்கில் எனது திருமணத்தின் பின்னர், இந்த பணி, எனது குடும்பத்திற்கும் பாரிய ஆதரவாக அமைந்துள்ளது.” என்றார்.
கடுவெல பொலிஸ் பிரிவினருக்காக முன்னெடுக்கபட்ட பயிற்சியில் கலந்துகொண்ட தலங்கம பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் பெண் பிரதம பொலிஸ் பரிசோதகர் சுபாஷினி தெரிவிக்கையில், "பாலின அடிப்படையிலான வன்முறைகள், சிறுவர் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு ஆகிய விடயங்கள் குறித்து ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்பட்ட இந்த மூன்று நாள் பயிற்சித் திட்டம் இக்காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமானதாகவும், அவசியமானதாகவும் அமைந்துள்ளது. கலந்துரையாடல் மற்றும் செயற்பாடுகள் ஊடாக புதிய அதிகாரிகள் அதிக அறிவைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை வருங்காலத்திலும் இது போன்ற அறிவுப்பகிர்வு செயற்திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என நான் நம்புகிறேன்," என்றார்.
இது போன்ற பல வெற்றிகரமான கதைகளுடன், பெண்களுக்கான வலுவூட்டலை மேம்படுத்துவது மற்றும் இலங்கையில் திறன், உள்ளடக்கம் மற்றும் மீட்சியுடனான சமூகங்களை கட்டியெழுப்புவதிலும் தனது அர்ப்பணிப்பை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மீள உறுதி செய்துள்ளது.
கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதாரம், சமூக சுகாதாரம் மற்றும் ஒற்றுமை மற்றும் உயிரியல் பரம்பல் ஆகியவை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் நான்கு கவனம் செலுத்தும் பகுதிகளாகும் - இது ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்) இன் சமூக பொறுப்புணர்வு அமைப்பாகும். இது 7 மாறுபட்ட தொழில் துறைகளில் 80 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்கும் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ள மிகப்பெரிய நிறுவனமாகும். 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம், 18,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் கடந்த 20 ஆண்டுகளாக LMD சஞ்சிகையால் இலங்கையின் 'மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக' தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவின் 'கூட்டாண்மை அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை'யில் ஜேகேஎச் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐ.நா. உலகளாவிய ஒப்பந்தத்தின் பங்கேற்பாளராகவும் இருக்கும் அதே வேளையில், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலமாகவும், இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதில் ஒரு ஊக்கியாக இருக்கும் ' Plasticcycle' என்ற சமூக தொழில்முனைவோர் முயற்சியின் மூலமாகவும், "எதிர்காலத்துக்காக தேசத்தை வலுப்படுத்துதல்" என்ற அதன் சமூகப் பொறுப்புணர்வு தொலைநோக்குப் பார்வைக்கமைய ஜே.கே.எச் இயக்குகிறது.
