Header Logo

வணிகம்
INSEE Ecocycle, Circularity Summit 2026 மற்றும் Future 360 CEO Forum நிகழ்வுகளை நாடாத்தி நிலைத்தன்மையை முன்னிறுத்துகின்றது

Mar 17, 2026 - 03:39 PM -

0

INSEE Ecocycle, Circularity Summit 2026 மற்றும் Future 360 CEO Forum நிகழ்வுகளை நாடாத்தி நிலைத்தன்மையை முன்னிறுத்துகின்றது

INSEE Ecocycle மார்ச் மாதத்தில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்வுகள், வளங்களை திறனுடன் பயன்படுத்தும் முறைகள், நிலைபேறான தொழில்துறை வளர்ச்சி மற்றும் சுழற்சிப் பொருளாதார முன்னேற்றத்தில் இலங்கையை முன்னணியில் நிலைநிறுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இம் முயற்சிகள், சுழற்சி பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளல், நிலைபேறான உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தை நோக்கிய நாட்டின் பயணத்தில் ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகின்றன. 

தொழில்துறை, கல்வி நிறுவனங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ள Circularity Summit 2026 நிகழ்வானது, 2026 மார்ச் 19 அன்று கொழும்பு, Cinnamon Lifeஇல் நடைபெறவுள்ளது. இம்மாநாடு வளத் திறன் மேம்பாடு மற்றும் சுழற்சிப் பொருளாதார புதுமைகள் தொடர்பான கொள்கை உரையாடல்கள், அறிவுப் பகிர்வு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை முன்னெடுக்கும் முக்கிய தளமாக அமையும். 

பல்வகைத் துறை நிபுணர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் அமர்வுகள், ஆராய்ச்சி முன்னேற்றங்கள், சர்வதேச நிலைத்தன்மை தீர்வுகள், ஆற்றல் மற்றும் வளத் திறன் பயன்பாட்டில் சிறந்த நடைமுறைகள் மற்றும் நிலைபேறான உற்பத்தி முறைமைகள் குறித்த கருப்பொருள்களை முன்னிலைப்படுத்தவுள்ளன. மேலும் இம்மாநாடு, பல துறைகளில் சுழற்சிப் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் கொள்கை முடிவுகளில் தாக்கம் செலுத்தக்கூடிய தலைவர்களையும் ஒன்றிணைக்கவுள்ளது. 

பங்கேற்பாளர்கள் கழிவுகளை குறைக்கும் நடைமுறைகள், பொருட்களின் மீட்புச் செயல்முறைகள் மற்றும் நிலைத்த வழங்கல் சங்கிலி (supply chain) முகாமைத்துவம் தொடர்பான விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபடும் வாய்ப்பைப் பெறுவர். அதேவேளை, சுழற்சிப் பொருளாதார மாதிரிகளை வெற்றிகரமாக செயல்படுத்திய பிற நாடுகளின் அனுபவங்களும் எடுத்துக்காட்டுகளாக காண்பிக்கப்படும். 

அன்று மாலை, Future 360 – CEO Forum நடைபெறவுள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட சிரேஷ்ட நிறுவனத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் கலந்து கொண்டு இலங்கையின் தொழில்துறை எதிர்காலத்தைப் பற்றிய உயர்மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர். CEO நிலை தலைவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட Future 360, நிலைத்த வணிகங்களுக்கான தொலைநோக்குக் கண்ணோட்டங்கள், சுழற்சிப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்வதில் பங்கு மற்றும் புதுமைகளை நிலைத்த தொழில்துறையுடன் ஒருங்கிணைக்கும் முறைகள் குறித்து ஆராயும். 

இவ் அமர்வு, முதலீட்டிற்கு தயாரான, எதிர்காலத்தை நோக்கிய உற்பத்தி மையமாக இலங்கையின் நிலையை மேலும் வலுப்படுத்தும். உலக சந்தைகளில் இலாபத்தையும் போட்டித்தன்மையையும் நிலைநிறுத்திக்கொண்டு நிறுவனங்களுக்குள் நிலைத்தன்மை நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான நடைமுறை அணுகுமுறைகள் குறித்து சிரேஷ்ட நிர்வாகிகள் கலந்துரையாடவுள்ளனர். 

இம் முக்கிய நிகழ்வுகளுக்கு இணையாக, International Conference on Resource Efficiency towards Sustainability (ICRES) என்ற சர்வதேச மாநாடு 2026 மார்ச் 14 அன்று online வழியாக நடைபெற்றது. இதில் பிராந்திய மற்றும் சர்வதேச நிபுணர்கள் சுழற்சிப் பொருளாதார கட்டமைப்புகள், ஒழுங்குமுறை முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்பப் புதுமைகள் குறித்த தங்களது கண்ணோட்டங்களை பகிர்ந்தனர். இக் கல்விக் கூறு, ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மற்றும் கொள்கைவழி அறிவு ஆகியன நடைமுறை செயல்படுத்தல் முயற்சிகளை ஆதரிப்பதை உறுதி செய்கிறது. 

இத் தொடர் நிகழ்வுகள் Circularity Challenge – Season 2 என்ற போட்டியுடன் ஆரம்பிக்கப்பட்டன. சுழற்சிப் பொருளாதாரத்தை வணிகரீதியாக நடைமுறைப்படுத்தக்கூடிய இளைஞர்களின் புத்தாக்கங்களை கண்டறிந்து ஊக்குவிப்பதே இதன் நோக்கம் ஆகும். மாணவர்கள் கொழும்பு, பேராதனை மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட முன்னணிப் பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட பட்டறைகள் ஊடாக வழிகாட்டலையும் தொழில்நுட்ப ஆலோசனையையும் பெற்றனர். 

Circularity Challengeஇன் வெற்றியாளர்கள் Future 360 CEO Forum நிகழ்வில் கௌரவிக்கப்படுவார்கள். இதன் மூலம் இளம் புதுமையாளர்கள் தங்கள் கருத்துகளை சிரேஷ்ட தொழில் தலைவர்களுக்கு முன்வைக்கும் வாய்ப்பை பெறுவதுடன், தொழில்முனைவுத் திறனை ஊக்குவிக்கும் சூழலும் உருவாக்கப்படும். மேலும் இது, இலங்கையின் சுழற்சிப் பொருளாதார சூழலை வலுப்படுத்தவும் உதவும். இப் போட்டி வணிக அளவில் செயல்படுத்தக்கூடிய நடைமுறைத் தீர்வுகளை உருவாக்க மாணவர்களை ஊக்குவிக்கின்றது. 

Ecocycle முன்னெடுத்து வரும் இந் நிகழ்வுகள் அனைத்தும் ஆராய்ச்சி, கொள்கை, தொழில்துறை நடைமுறைகள், இளைஞர் புதுமைகள் மற்றும் நிறுவனத் தலைமை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் விரிவான தளமாக அமைந்துள்ளன. இது நிலைத்த வளர்ச்சியில் பிராந்திய முன்னோடியாக இலங்கையை நிலைநிறுத்துகின்றது. மேலும் இம் முயற்சிகள், தூய்மையான உற்பத்தி முறைமைகளுக்கான மாற்றத்தை ஆதரித்தல், தொழில்துறை உமிழ்வுகளை குறைத்தல் மற்றும் புதுமைகளால் வழிநடத்தும் போட்டித்திறன் கொண்ட உற்பத்தித் துறையை உருவாக்குதல் ஆகியவற்றிற்கான INSEE Ecocycleஇன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகின்றன. 

இம் முயற்சிகள் நாட்டின் நீண்டகால சுற்றுச்சூழல் நிலைத்தன்மை இலக்குகள், சுழற்சிப் பொருளாதார நோக்கங்கள் மற்றும் பொருளாதார முன்னுரிமைகளை வலுப்படுத்துகின்றன. மேலும் இது, எதிர்கால சந்ததியினருக்காக இயற்கை வளங்களை பாதுகாக்கும் அதேவேளை நிலையான வளர்ச்சிக்கான கட்டமைப்பையும் உருவாக்குகிறது.

Comments
0

MOST READ

காணொளி
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

title