Header Logo

வணிகம்
JXG பன்முகத் திறன்கள் மற்றும் தொலைநோக்கு விரிவாக்கத் திட்டங்களுடன் நிதியை புதுப் பரிமாணத்தில் வடிவமைக்கின்றது

Mar 18, 2026 - 02:44 PM -

0

JXG பன்முகத் திறன்கள் மற்றும் தொலைநோக்கு விரிவாக்கத் திட்டங்களுடன் நிதியை புதுப் பரிமாணத்தில் வடிவமைக்கின்றது

தடைகளை உடைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், JXG (ஜனசக்தி குழுமம்) இலங்கையில் நிதித்துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. ஒரு நிதி நிறுவனமாக JXG காப்புறுதி, மூலதனச் சந்தைகள் மற்றும் வங்கி சாரா நிதி ஆகியவற்றை ஒரே சக்திவாய்ந்த அடையாளத்தின் கீழ் ஒன்றிணைத்து, புதுமை நிறைந்த வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறது. 

கூட்டு நிறுவனம் தன்னுடைய முன்னோடியான மற்றும் பல்வகை திறன்களின் மூலம் சந்தையில் தனித்துவமான நிலையை பெற்றுள்ளது. அதன் மூன்று பிரதான தூண்களான ஜனசக்தி லைஃப், First Capital மற்றும் ஜனசக்தி பைனான்ஸ் ஆகியவற்றின் வழியாக JXG வளர்ச்சி, அணுகல் மற்றும் பாதுகாப்பை ஒருங்கிணைத்து, பல்வேறு நிதித் தேவைகளுக்கு உறுதியான மற்றும் சமநிலையான தீர்வுகளை வழங்குகிறது. 

பல தசாப்தங்களாக, வாடிக்கையாளர்கள் தமது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தங்களுக்கு துணை நிற்கும் நிறுவனமாக JXG மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஜனசக்தி லைஃப் மூலம் குடும்பங்கள் பாதுகாப்பையும் மனஅமைதியையும் உறுதி செய்துள்ளன. First Capital ஊடாக முதலீட்டாளர்கள் தங்கள் செல்வத்தை நம்பிக்கையுடன் வளர்த்துள்ளனர். மேலும் ஜனசக்தி பைனான்ஸ் வழியாக தனிநபர்களும் வணிகங்களும் தங்கள் நிதிப் பயணங்களில் நிலைத்த முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். இந்த வலுவான பாரம்பரியத்தை அடித்தளமாகக் கொண்டு, இலங்கையில் செல்வ உருவாக்கத்தின் மையத்தில் அறிவு, புதுமை மற்றும் முன்னோக்குச் சிந்தனையை நிலைநிறுத்தும் தொலைநோக்குப் பார்வையையும் தலைமைத்துவத்தையும் JXG வழங்கி வருகிறது. 

தடைகளை உடைத்து எதிர்காலத்தை உருவாக்குதல் என்ற தொலைநோக்குப் பார்வையில் வேரூன்றிய JXG, செல்வத்தை ஒட்டுமொத்த மாற்றத்தை உருவாக்கும் சக்தியாகப் புதிய பரிமாணத்தில் வடிவமைக்கிறது — அது தனிநபர்களையும் வணிகங்களையும் முன்னேற ஊக்குவிப்பதுடன், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் நேர்மறையாகத் தொட்டுச் செல்கிறது. 

JXGஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் / குழும பிரதம நிறைவேற்று அதிகாரி ரமேஷ் ஷாப்டர் கூறுகையில், “JXG-ஐ தனித்துவப்படுத்துவது எங்கள் ஒருங்கிணைந்த கட்டமைப்பே ஆகும். எங்கள் மூன்று வணிகத் தூண்களையும் ஒரே ஒருங்கிணைந்த சூழலாகச் செயல்படும் வகையில் உருவாக்குவதே எங்கள் மூலோபாயம். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஒரே கூட்டு நிறுவன அமைப்பிற்குள் மூலதனச் சந்தை நிபுணத்துவத்தை அணுகவும், தேவையான நிதியையும் ஆயுள் காப்புறுதித் தீர்வுகள் வழியாக நீண்டகால பாதுகாப்பை பெறவும் முடிகிறது. 2026ஆம் ஆண்டிற்கான எங்கள் மூலோபாயம், இந்த ஒருங்கிணைந்த மாதிரியை இலங்கையின் இல்லங்களுக்காக மேலும் ஆழப்படுத்துவதிலும், அதே அணுகுமுறையை பிராந்திய ரீதியாக விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது,” என்றார். 

செல்வத்தை உருவாக்கவும் வாழ்க்கையை மாற்றவும் நிதியை மறுபரிசீலனை செய்வதே JXGயின் மூலோபாய திசையாகும். வலுவான நிதி சேவைகளை நுண்ணறிவும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைமைத்துவத்துடன் இணைத்து, JXG சந்தையில் வலுவான முன்னேற்ற வேகத்தை உருவாக்கி வருகிறது. நிதி உள்ளடக்கம், புதுமை மற்றும் தாங்கும் திறன் ஆகியவற்றுடனான இலங்கையின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் எதிர்காலத்தை வடிவமைப்பதில் JXG செயற்பட்டு வருகிறது. அதன் ஒருங்கிணைந்த செயல்முறை, நிலைத்தன்மையையும் படைப்பாற்றலையும் ஒருங்கே வழங்கி, வாடிக்கையாளர்களுக்கு நீடித்த பயன்களை உருவாக்குகிறது. 

2026ஆம் ஆண்டளவில், ஒவ்வொரு இலங்கை குடும்பத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நன்கறிந்த மற்றும் புதிய நிதி சேவைகளில் விரிவடைவதை JXG நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கைக்கு அப்பாலும் அதே விழுமியங்களை எடுத்துச் செல்ல JXG உறுதியாக உள்ளது. 

எதிர்காலத்தை நோக்கிய கூட்டு நிறுவனத்தின் அணுகுமுறை, அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்கும் கூட்டாண்மைகள் மூலம் தனது தலைமைத்துவ நிலையை மேலும் வலுப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. நம்பகமான நிறுவனங்களும் தொலைநோக்கு சிந்தனையுடைய தொழில்துறை பங்காளர்களும் இணைந்து, வளர்ச்சியை வேகப்படுத்துவதற்கும் பாரம்பரியத்தை தாங்கி நிற்கும் முன்னணி நிறுவனமாக தனது நற்பெயரை மேலும் உறுதிப்படுத்துவதற்கும் JXG முயல்கிறது. 

JXG தனது ஊழியர்களையும் நிலைத்தன்மைக்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் அடித்தளமாகக் கொண்டுள்ளது. நம்பிக்கை, நோக்கம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் வேரூன்றிய நிறுவன கலாச்சாரத்தை அது உருவாக்கியுள்ளது. ‘Great Place to Work’ மதிப்பீட்டில் பதிவான 97% நேர்மறை மறுமொழி வீதமும் 93% ஒட்டுமொத்த மதிப்பெண்ணும் இதனை தெளிவாக பிரதிபலிக்கின்றன. மாற்றத்தை முன்னெடுத்து செல்லும் முன்னேற்றகரமான மற்றும் உள்ளடக்கமான பணிச்சூழலை உருவாக்கும் நோக்கில், நிறுவனம் ஒவ்வொரு மட்டத்திலும் தனது ஊழியர்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. Apprentice Director Programme மற்றும் Management Trainee Programme போன்ற முயற்சிகள் ஊடாக அடுத்த தலைமுறையை வழிநடத்தக்கூடிய தலைமைத் திறன்களை வளர்த்தெடுக்கிறது. ஒரு நிதி நிறுவனமாக, JXG நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் வலுவான அடித்தளத்தை நிறுவியுள்ளது. இது நிச்சயமற்ற காலங்களிலும் வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் நம்பிக்கையை வழங்குகிறது. பல தசாப்த கால நிபுணத்துவம் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட சேவைத்தொகுப்பின் பலத்துடன் JXG அதன் வணிகங்களிற்கு நிலைத்தன்மையையும் நீண்ட கால மதிப்பையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. 

புதுமைகளால் வரையறுக்கப்பட்ட அதன் பாதையில் JXG தனித்துவமாக திகழ்கிறது. தொடர்ந்து புதிய நிதி தீர்வுகளை முன்னோடியாக அறிமுகப்படுத்தி, வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்து வருகிறது. தொழில்நுட்பத்தைத் தாண்டி, ஒவ்வொரு இலங்கையருக்கும் பொருந்தக்கூடிய, உள்ளடக்கமான மற்றும் அணுகக்கூடிய நிதி சேவைகளை வழங்குவதில் குழுமம் உறுதியாக உள்ளது. எதிர்காலத்தை நோக்கி முன்னேறும் JXG, தடைகளை உடைத்து புதிய வாய்ப்புகளை உருவாக்கி, தனிநபர்களையும் வணிகங்களையும் நம்பிக்கையுடன் செயற்பட வலுச் சேர்க்கிறது. அதன்மூலம் நிதி சேவைகளில் சாத்தியமென கருதப்படுகின்ற எல்லைகளை மறுவரையறை செய்யும் உறுதிப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. 

JXG தொடர்பாக (ஜனசக்தி குழுமம்) 

JXG (ஜனசக்தி குழுமம்) இலங்கையில் காப்புறுதி, நிதியியல் மற்றும் முதலீட்டு வங்கியியல் துறைகளில் பிரசன்னத்தைக் கொண்ட வளர்ந்து வரும் நிதிசார் கூட்டு நிறுவனம் ஆகும். குழுமத்தின் ஒவ்வொரு வணிகமும், அவற்றின் துறைகளில் ஒப்பற்ற முன்னோடியாக திகழ்கின்றது. JXG, ஃபஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் தொண்டு நிறுவனமான ஜனசக்தி அறக்கட்டளை ஆகியவற்றை உள்ளடக்கியது. 

JXGஇன் செயற்பாடுகள் 1990 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிறுவனரும் முன்னாள் தலைவருமான திரு.C.T.A.ஷாப்டர் அவர்களால் இலங்கையின் முதலாவது விசேடத்துவம் வாய்ந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், தொழிற்துறையில் புரட்சியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியிருந்தது. கடந்த தசாப்த காலங்களில், மூலோபாய ஒன்றிணைவுகள் மற்றும் கையகப்படுத்தல்களினூடாக, ஜனசக்தி குழுமம் விரிவாக்கமடைந்துள்ளது. 

வர்த்தக நாமத்தில் காணப்படும் Xஎன்பதனூடாக, வாய்ப்புகள், விரிவாக்கம் மற்றும் சிறந்த வளர்ச்சி ஆகியன வெளிப்படுத்தப்படுகின்றன. இது ஒருங்கிணைந்த நிறுவனமாக ஒன்றிணைந்த வாய்ப்புகளை உணர்த்துகின்றது. “Stronger Together, Stronger Than Ever” எனும் தொனிப்பொருளினூடாக, ஒற்றுமை மற்றும் திரண்ட வலிமை போன்றவற்றுக்கான JXGஇன் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

title