Header Logo

வணிகம்
செலான் வங்கி சர்வதேச Partnership for Carbon Accounting Financials (PCAF)இல் இணைவதன் மூலம் காலநிலை பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது

Mar 18, 2026 - 05:07 PM -

0

செலான் வங்கி சர்வதேச Partnership for Carbon Accounting Financials (PCAF)இல் இணைவதன் மூலம் காலநிலை பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது

ஜூலை 2025 இல், செலான் வங்கி பிஎல்சி கார்பன் கணக்கியல் கூட்டாண்மையில் (PCAF) உத்தியோகபூர்வமாக இணைந்தது. இது நிலைபேறாண்மை மற்றும் வெளிப்படையான காலநிலை அறிக்கையிடலுக்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. இதன் மூலம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்பிற்கு இணங்க நிதியளிக்கப்பட்ட பச்சைவீட்டு வாயு (GHG) வெளியேற்றத்தை அளவிடுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் தகுதியுடைய இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாக செலான் வங்கி உள்ளது. 

PCAF என்பது வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கள் கடன் மற்றும் முதலீட்டு பிரிவுகளுடன் தொடர்புடைய பச்சைவீட்டு வாயு உமிழ்வை அளவிடுவதற்கும் பகிர்ந்து கொள்வதற்குமென தரப்படுத்தப்பட்ட ஒரு அணுகுமுறையை வழங்கும் ஒரு உலகளாவிய முன்முயற்சியாகும். இதில் உறுப்பினராக இணைவதன் மூலம் செலான் வங்கி, காலநிலை பொறுப்புக் கூறல் மற்றும் குறைந்த கார்பன் வெளியீடுகளை அதன் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பதற்கும் பசுமையான பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் மாற்றத்தை ஆதரிப்பதற்கும் அதன் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது. 

இந்த மைல்கல் குறித்து செலான் வங்கியின் நியமிக்கப்படவுள்ள பிரதம நிதி அதிகாரி ஷனுக ஜயரத்ன கூறுகையில், “நிலையான எதிர்காலத்தை வடிவமைப்பதில் நிதி நிறுவனங்கள் வகிக்கும் முக்கிய பங்கை நாங்கள் உணருகிறோம். PCAFஇல் இணைவதன் ஊடாக கார்பன் கணக்கியலில் சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப நம்மை நாமே மதிப்பீடு செய்து கொள்ளவும் இலங்கையின் பரந்த காலநிலை இலக்குகளுடன் ஒத்துப்போகவும் உதவுகிறது. எங்கள் வணிக முடிவுகளில் சுற்றுச்சூழல் பொறுப்பை தழுவும் அதே வேளை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதுமை மற்றும் உறுதியுடன் தொடர்ந்து சேவை செய்யும் பயணத்தில் இது ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது. என்றார். 

செலான் வங்கியின் உறுப்புரிமைக்கான PCAF இன் ஒப்புதல் ஏற்கனவே அதன் சர்வதேச தளங்கள் மூலம் பகிரப்பட்டுள்ளது. இது காலநிலை வெளிப்படைத்தன்மை குறித்த சர்வதேச ஒத்துழைப்புக்கான வங்கியின் உறுதிப்பாட்டை மேலும் எடுத்துக்காட்டுகிறது. இந்த முயற்சி செலான் வங்கியின் காலநிலை இடர் முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்தல், அதன் ESG உத்தியை மேம்படுத்தல் மற்றும் இலங்கையின் உள்ளடக்கம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் துறைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தல் ஆகியவற்றில் துணைபுரியும்.

Comments
0

MOST READ

காணொளி
எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

மஹோற்சவம்

மஹோற்சவம்

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

title