Mar 19, 2026 - 01:22 PM -
0
கொமர்ஷல் வங்கியானது வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும், தரமான போக்குவரத்து தீர்வுகளை மேலும் எளிதாக அணுகக்கூடியதாக மாற்றுவதும் என்ற தனது உறுதிப்பாட்டின் அடிப்படையில், ஐடியல் மோட்டார்ஸ் (Ideal Motors (Pvt) Ltd) நிறுவனத்துடன் இணைந்து Mahindra XUV 3XO பயணிகள் வாகனத்தை ஊக்குவிக்கும் வகையில் கூட்டு ஊக்குவிப்பு பிரசாரத்தை மேற்கொள்வதற்காக அந்நிறுவனத்துடன் பங்குடைமையை மேற்கொண்டுள்ளது.
இந்த பங்குடைமையின் கீழ், கொமர்ஷல் வங்கியானது Mahindra XUV 3XO வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு பகுதி நிதி உதவி வழங்கும் வகையில் கவர்ச்சிகரமான லீசிங் வசதிகளை வழங்கும். இதற்கு முன்னுரிமை வட்டி வீதங்கள், ஆவணச் செலவுகளில் சலுகைகள் மற்றும் முதல் ஆண்டுக்கான வருடாந்தக் கட்டணம் விலக்களிக்கப்பட்ட இலவச கடனட்டை ஆகியவை வழங்கப்படும். இந்த வசதிகள் வங்கியின் நாடு முழுவதும் பரந்த கிளை வலையமைப்பின் மூலம் கிடைக்கும்.
Ideal Motors (Pvt) Ltd. நிறுவனம், வங்கியின் நிதி உதவித் திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு நன்மைகளையும் வழங்கும். இதில் வாகனத்திற்கு சிறப்பு விலைக்கழிவு, இலவச பதிவு, உதிரி பாகங்களுக்கு 10மூ விலைக்கழிவு மற்றும் முதல் மூன்று சேவைகளுக்கான இலவச சேவைக் கட்டணம் போன்ற சலுகைகள் அடங்கும்.
இந்த ஊக்குவிப்பு பிரசாரமானது 2027 பெப்ரவரி 28 வரை நடைபெறவுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தமது வருமான நிலைக்கு ஏற்ப கொள்வனவு திட்டத்தை அமைத்து, தவணை செலுத்துதல்களை திட்டமிடுவதற்கான நெகிழ்வுத்தன்மையை பெறுவர். இந்த லீசிங் திட்டங்கள் நியாயமான மாதாந்த தவணைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், நிதி வசதிகள் மற்றும் வாகன உரிமையாளர் சேவைகளில் சிறப்பு வட்டி வீதங்களும் செலவுச் சலுகைகளும் கிடைக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது.
புதுமையான மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட லீசிங் தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாக திகழும் கொமர்ஷல் வங்கியானது மதிப்புமிக்க விற்பனையாளர் நிறுவனங்களுடன் தொடர்ந்து இணைந்து வாடிக்கையாளர்களுக்கு மேலதிக பெறுமதி கொண்ட சேவைகளை வழங்கி வருகிறது. Ideal Motors நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் பங்குடைமையானது புதிய வாகனத்தை சொந்தமாக்க வேண்டும் என்ற வாடிக்கையாளர்களின் கனவுகளை நிறைவேற்ற உதவும் வகையில், வங்கியின் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் கவர்ச்சிகரமான லீசிங் வாய்ப்புகளை வழங்கும் வங்கியின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 272 தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.
