Mar 20, 2026 - 01:13 PM -
0
காலி ராடிசன் ப்ளூ ரிசார்ட் (Radisson Blu Resort Galle) தனது புதிய சமையல் கலை முயற்சியாக யாசு எட் தி பீச் (Yazu at the Beach) எனும் பான்-ஆசிய (Pan-Asian - பல்வேறு ஆசிய நாடுகளின் உணவு வகைகளைக் கொண்ட உணவகம்) உணவகத்தை 2026 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது. இது இந்தியாவின் புகழ்பெற்ற யாசு (Yazu) வர்த்தக நாமத்தின் முதலாவது சர்வதேச விரிவாக்கமாகும். காலியின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள இந்த உணவகம், துடிப்பான கடற்கரை சூழலில் தனித்துவமான சுவைகளை ஒன்றிணைத்து, இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு ஒரு நேர்த்தியான ஆசிய உணவு அனுபவத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட Yazu, ஜப்பானிய, தாய்லாந்து மற்றும் கான்டோனீஸ் (Cantonese) சமையல் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரு பரந்த பலதரப்பட்ட உணவு முறைகளை வழங்குவதை விட, இந்த உணவகத்தின் அடிப்படைத் தத்துவம் சமையல் நுட்பம் மற்றும் நம்பகத்தன்மையை மையமாகக் அடிப்படையாகக் கொண்டது. துல்லியமான கைவினைத்திறனுடன் கூடிய சுஷி (Sushi) மற்றும் நேர்த்தியான டிம் சம் (Dim sum) முதல், வொக்-ஹே (wok-hei) துல்லியம், ரொபாட்டா (robata) பாணி கிரில்லிங் மற்றும் நிதானமாக சமைக்கப்பட்ட சூப் வகைகள் வரை இவை நீடிக்கின்றன. பல ஆண்டுகளாக, மும்பை, கோவா, இந்தூர், சண்டிகர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் தனது கிளைகளை விரிவுபடுத்தியுள்ள Yazu Hospitality, இந்தியாவின் முன்னணி பான்-ஆசிய உணவக வர்த்தக நாமங்களில் ஒன்றாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
இந்த உணவகத்தின் சமையல் கலைக்கு இணையாக அதன் Bar உம் ஒரு உயர்தர அனுபவத்தை வழங்குகிறது. Yazu-வின் கொக்டெய்ல் தத்துவமானது தெளிவு, சமநிலை மற்றும் நவீன நுட்பங்களை மையமாகக் கொண்டது. இது அதன் தனித்துவமான தெளிவுபடுத்தப்பட்ட காக்டெய்ல்கள் (clarified cocktails) மற்றும் ஆசியத் தாக்கங்களைக் கொண்ட புதுமையான பானங்கள் (Asian-inspired infusions) மூலம் சிறப்பிக்கப்படுகிறது. குறிப்பாக, ஹை ஸ்பிரிட்ஸ் ஆஃப் ஏசியா (High Spirits of Asia) எனும் நிகழ்ச்சித்திட்டமானது, வோக்-புகையூட்டப்பட்ட ஸ்பிரிட்ஸ் (wok-smoked spirits), கரிச் சுவை (charcoal accents) மற்றும் தேயிலை சாறுகளை ஆசிய வீதிகளின் உணர்வை நவீன பாணியில் பிரதிபலிக்கிறது. மற்றும் பல அடுக்கு சுவை வடிவங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு கொக்டெய்லும் உணவுகளுக்குப் பொருத்தமான வகையில் மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செழுமையான உணவுகளுக்கு மத்தியில் புத்துணர்ச்சியூட்டும் சிட்ரஸ் சுவை, மென்மையான சுஷியின் சுவையை மேம்படுத்தும் உமாமி- சாக்கே (umami-forward sake) மற்றும் ஒன்றிணைந்து உண்ணும் தருணங்களை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட நறுமணக் கலவைகள் என இவை ஒவ்வொன்றும் தனித்துவமாகத் தயாரிக்கப்படுகின்றன.
இந்த வர்த்தக நாமத்தின் முதலாவது சர்வதேச விரிவாக்கம் குறித்து Yazu ஹோஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரன்பீர் சிங் நாக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “Yazu Hospitality தனது கிளைகளை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தி வரும் வேளையில், இலங்கையின் காலி நகரில் எமது முதலாவது சர்வதேச காலடியை எடுத்து வைப்பது எமக்கு உண்மையிலேயே ஒரு முக்கியமான மைல்கல்லாகும். காலியின் வசீகரம், கலாசார செழுமை மற்றும் அதன் உலகளாவிய ஈர்ப்பு ஆகியவை எமது சர்வதேச அறிமுகத்திற்கு மிகவும் பொருத்தமான இடமாக அதனை மாற்றியுள்ளன. இது வெறும் புதிய கிளை மட்டுமல்ல. இது எல்லைகளைக் கடந்து Yazu மேற்கொள்ளவுள்ள பயணத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.” என்று தெரிவித்தார்.
இந்தக் கூட்டாண்மை குறித்து சினோ லங்கா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் (Sino Lanka Holdings Pvt Ltd) நிறுவனத்தின் தலைவர் Bob Kundanmal கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை எப்போதும் உலகளாவிய சமையல் கலைச் சிறப்புகளை மனதார ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவின் மிகச்சிறந்த பான்-ஆசிய விருந்தோம்பல் வர்த்தக நாமங்களில் ஒன்றான Yazu வை இலங்கைக்கு வரவேற்பது எமக்கு ஒரு குறிப்பிடத்தக்க தருணமாகும். இந்தத் தனித்துவமான உணவகக் கோட்பாட்டிற்கு காலி நகரம் ஒரு மிகச்சிறந்த பின்னணியை வழங்குகிறது. இப்பிராந்தியத்தின் உணவகத் துறையில் Yazu ஒரு புதிய தரத்தை நிலைநாட்டும் என்பதோடு, காலி ராடிசன் ப்ளூ ரிசார்ட்டின் சேவைகளை இது மேலும் மேம்படுத்தும் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என்று தெரிவித்தார்.
Yazu ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குதாரர் அத்துல் சோப்ரா இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “சமையல் கலை சார்ந்த தேடல்களுக்கு இலங்கை ஒரு உற்சாகமான களமாகத் திகழ்கிறது. அதன் செழுமையான உணவுப் பாரம்பரியம், அதிகரித்து வரும் சுற்றுலா ஈர்ப்பு மற்றும் உணவுகளை நுணுக்கமாகத் தேர்ந்தெடுக்கும் நுகர்வோர் பட்டாளம் ஆகியவை, உலகளாவிய சுவைகள் மற்றும் உள்ளூர் தாக்கங்களை ஒருசேரக் கொண்டாடும் புதுமையான உணவகக் கோட்பாடுகளுக்கு பாரிய வாய்ப்புகளை வழங்குகின்றன. Yazu ஹாஸ்பிடாலிட்டியில், இலங்கையின் வளர்ந்து வரும் உணவுத் துறைக்கு பங்களிப்பதற்கான ஒரு வாய்ப்பாக நாங்கள் இதைக் கருதுகிறோம். அந்த வகையில், கலாச்சாரம், வரலாறு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் துடிப்பான சங்கமத்தைக் கொண்டுள்ள காலி நகரம், எமது இந்தப் பயணத்தைத் தொடங்குவதற்கு மிகவும் பொருத்தமான இடமாகும்.” என தெரிவித்தார்.
கடற்கரையோர அமைப்பில் தனித்துவமான ஆசிய சுவைகளைக் கொண்ட யாசு எட் தி பீச் (Yazu at the Beach), 2026 ஆம் ஆண்டில் தெற்கு கடற்கரையின் மிகவும் எதிர்பார்க்கப்படும் உணவகத் திறப்பு விழாக்களில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது. இது உலகத்தரம் வாய்ந்த வாழ்க்கை முறை மற்றும் உணவு அனுபவங்களை வழங்குவதில் காலி Radisson Blu Resort இன் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
