Mar 20, 2026 - 01:31 PM -
0
செலிங்கோ லைஃப் நிறுவனமானது தனது 2024 ஆம் ஆண்டு ஆண்டு அறிக்கைக்காக இரண்டு முக்கியமான விருதுகளைப் பெற்றுள்ளது. இது நிறுவனத்தின் தெளிவான, பொறுப்பான மற்றும் நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட நிறுவன அறிக்கை தயாரிப்பில் அதன் முன்னணி நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
பட்டயச் சான்றளிக்கப்பட்ட கணக்காளர் சங்கம் (Association of Chartered Certified Accountants - ACCA) நிலைத்தன்மையுடைய (Sustainability) அறிக்கைகளுக்கான விருதுகள் நிகழ்வில், 'ஏனைய நிதிச்சேவைகள் பிரிவில் செலிங்கோ லைஃப் நிறுவனமானது இரண்டாவது முறையாக வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. உலகின் மிகவும் மதிப்புமிக்க தொழில்முறை கணக்கியல் அமைப்புகளில் ஒன்றான ACCA இந்த விருதுகள் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விருதுகள் உள்ளூர் அளவுகோல்களை அல்லாமல், உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைத்தன்மை மற்றும் அறிக்கை தயாரிப்பு தரநிலைகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுவதால், அவற்றுக்கு வலுவான சர்வதேச நம்பகத்தன்மை உள்ளது.
இந்த அங்கீகாரமானது, இலங்கையின் நிறுவனத் துறையில் நிலைத்தன்மை அறிக்கை தயாரிப்பில் புதிய தரநிலைகளை அமைக்க செலிங்கோ லைஃப் தொடர்ந்து காண்பித்து வரும் உறுதியையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.
இந்நிறுவனமானது அறிக்கை தயாரிப்பில் வெளிப்படுத்திய சிறப்புத் திறமையானது இலங்கை பட்டயக்கணக்காளர்கள் நிறுவனம் (CA Sri Lanka) நடத்திய TAGS விருதுகள் 2025 இலும் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் செலிங்கோ லைஃப் நிறுவனமானது இலங்கையில் வெளியிடப்பட்ட சிறந்த 10 ஒருங்கிணைந்த அறிக்கைகள் பட்டியலில் இடம்பிடித்ததுடன், மொத்த காப்புறுதிக்கட்டுப்பண வருமானம் (Gross Premium) ரூ. 10 பில்லியனை விட அதிகம் கொண்ட காப்புறுதி நிறுவனங்கள் பிரிவில் வெள்ளி விருதையும் பெற்றது. TAGS விருதுகள் ஆண்டறிக்கைகளை Transparency (தெளிவு), Accountability (பொறுப்புணர்வு), Governance (நிர்வாகம்) மற்றும் Sustainability (நிலைத்தன்மை) ஆகிய முக்கியக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்கின்றன. எனவே, இவ்விருதுகள் இலங்கையில் நிறுவன அறிக்கை தயாரிப்பில் சிறந்த தரநிலையை நிர்ணயிக்கும் முக்கிய அளவுகோலாக பரவலாகக் கருதப்படுகின்றன.
இந்த அங்கீகாரங்களின் முக்கியத்துவம் தொடர்பாக செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் சிரேஷ்ட நிறைவேற்றுப்பணிப்பாளரும் பிரதம நிதி அதிகாரியுமான திரு. பாலித ஜயவர்தன அவர்கள் தெரிவிக்கையில், இந்த விருதுகள் நிறுவனத்தின் தெளிவான நிலை, சிறந்த நிர்வாகம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கடைப்பிடிக்கும் ஒழுங்குமுறை மற்றும் உறுதியான அணுகுமுறையை உறுதிப்படுத்துகின்றன என்று தெரிவித்தார். எமது ஒருங்கிணைந்த அறிக்கை தொடர்பான பயணம் வெறும் விதிமுறைகளை பின்பற்றுவதற்காக மட்டுமல்லாது நீண்ட காலத்தில் எவ்வாறு நாம் நிறுவனத்தை பெறுமதியுடையதாக உருவாக்கி அதை பாதுகாக்கிறோம் என்பதை தெளிவாக வெளிப்படுத்துவதற்காகவும் ஆகும். ACCA மற்றும் CA Sri Lanka ஆகிய இரு அமைப்புகளாலும் அங்கீகரிக்கப்படுவது, எங்களின் அறிக்கை தயாரிப்பு தரநிலைகள் மிக உயர்ந்த எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்கின்றன என்பதையும், பொறுப்பான மற்றும் நிலைத்த வர்த்தக நடைமுறைகளுக்கு நாம் மேற்கொள்ளும் ஆழமான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது, என்று அவர் கூறினார்.
காப்புறுதிக்கு அப்பால் வாழ்றானிக்கான ஒரு வாக்குறுதி (‘Beyond Insurance – A Promise for Life’) என பெயரிடப்பட்ட இந்த விருது பெற்ற ஆண்டு அறிக்கையானது, செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் 10வது ஒருங்கிணைந்த ஆண்டு அறிக்கை ஆகும். இது அந்த நிதியாண்டில் நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகளை முழுமையாக விளக்குகிறது. அத்துடன் நிதி மற்றும் நிலைத்தன்மை வெளிப்பாடுகளுக்கான நிலையான வருடாந்த அறிக்கையிடல் சுழற்சிக்கு இணங்க, நிதியாண்டில் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் பற்றிய விரிவான நிலையினை இந்த அறிக்கை வழங்குகிறது. முக்கியமாக பங்குதாரர்களை இலக்காகக் கொண்ட இந்த அறிக்கை, மாறும் செயல்பாட்டுச் சூழலில், நிறுவனத்தின் தொலைநோக்கு எவ்வாறு அதன் உத்தி, பெறுமதி உருவாக்கம் மற்றும் பங்குதாரர்களின் ஈடுபாட்டை வடிவமைக்கிறது என்பதை விளக்குகிறது. தரமான மற்றும் அளவிடக்கூடிய செயல்திறன் முடிவுகளுடன், நிறுவனத்தின் எதிர்கால நோக்கம் மற்றும் நீண்டகால நிலைத்த பெறுமதியை உருவாக்கும் திறன் பற்றியும் இந்த அறிக்கை விளக்குகிறது.
2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து 12 வது ஆண்டாக வேர்ல்ட் ஃபைனான்ஸால் இலங்கையின் சிறந்த ஆயுள் காப்பீட்டாளராக அங்கீகரிக்கப்பட்ட செலிங்கோ லைஃப் காப்புறுதி பெற்றவர்களின் இலக்குகள் மற்றும் கனவுகளை பாதுகாக்கவும், அபாயங்களை குறைக்க உதவும் புத்தாக்கமான காப்புறுதித் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டில், Brand Finance அமைப்பின் மதிப்பீட்டின்படி,செலிங்கோ லைஃப் நிறுவனம் இலங்கையின் மிக உயர்ந்த மதிப்புள்ள காப்புறுதி வர்த்தகநாமமாகவும், 22-வது மிக பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டது. அதே ஆண்டில், தொடர்ந்து 19-வது தடவையாக ஆண்டின் மக்களுக்கான ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் (“People’s Life Insurance Service Provider of the Year”) விருதைப் பெற்றதன் மூலம், மில்லியன் கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரியவர்த்தகநாமம் என்ற தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியது.மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கையின் ஆண்டுக்கான வர்த்தகநாமம்' என்ற விருதினை பெற்றுள்ள இந்த நிறுவனம், இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) மற்றும் முகாமைத்துவ கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனம் (CIMA) ஆகிய அமைப்புகளால் இலங்கையின் மிகவும் பாராட்டப்பட்ட 10 நிறுவனங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
