Header Logo

வணிகம்
Forbes Marshall Lanka இலங்கை தேசிய வலு வினைத்திறன் விருதுகள் 2025 இல் Gold Flame விருதை சுவீகரித்தது

Mar 20, 2026 - 02:41 PM -

0

Forbes Marshall Lanka இலங்கை தேசிய வலு வினைத்திறன் விருதுகள் 2025 இல் Gold Flame விருதை சுவீகரித்தது

இலங்கையில் ஸ்டீம் பொறியியல் மற்றும் வலு சேமிப்பு தீர்வுகளை வழங்குவதில் சந்தை முன்னோடியாகத் திகழும் Forbes Marshall Lanka, இலங்கை தேசிய வலு வினைத்திறன் விருதுகள் 2025 இல் சிறந்த வலு சேவைகள் நிறுவன விருதில், வலு சிக்கன மேம்படுத்தல் பிரிவில் Gold Flame விருதை சுவீகரித்துள்ளது. 

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு 2026 பெப்ரவரி 24 ஆம் திகதி கொழும்பு BMICH இல் நடைபெற்றது. இதனை வலு மற்றும் மின்சக்தி அமைச்சின் கீழ் இயங்கும் நிலைபேறான வலு அதிகாரசபை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரிய கலந்து கொண்டார். நுகர்வை குறைப்பது என்பது மட்டுமன்றி, வலு விரயமாதலை குறைப்பது தேசிய பொருளாதார செயற்பாடுகளில் முன்னுரிமை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். 

Forbes Marshall Lanka இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான முகாமையாளர் லோஷன் பலயன்கொட கருத்துத் தெரிவிக்கையில், “இந்த கௌரவிப்பு எமது அணியினரைப் போன்று, எமது வாடிக்கையாளர்களையும் சேர வேண்டியது. வலு சேமிப்பு என்பது ஒரு தடவை மட்டும் முன்னெடுக்கும் செயற்திட்டமல்ல. இலங்கையின் தொழிற்துறை அதிகளவு அக்கறையுடன் பின்பற்றும் ஒரு ஒழுக்கமாக அமைந்துள்ளது. இந்தப் பயணத்தில் நம்பிக்கையை வென்ற பங்காளராக திகழ்வதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், மேலும் அதிகமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஊக்குவிப்பாக இந்த விருது அமைந்துள்ளது.” என்றார். 

இலங்கையில் அதன் செயற்பாடுகளினூடாக, Forbes Marshall Lanka சுமார் 500 க்கும் அதிகமான walkthrough மீளாய்வுகள், நான்கு முதலீட்டு தர மீளாய்வுகள் மற்றும் 20க்கும் அதிகமான வலு சேமிப்பு செயற்படுத்தல்களை முன்னெடுத்துள்ளதுடன், தனது ஆய்வுகூட வலையமைப்பினூடாக 500 க்கும் அதிகமான பொறியியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் இத்தகைய இடையீடுகளினூடாக, 25,000 மில்லியனுக்கும் அதிகமான யார்ட்கள் விறகு மற்றும் Biomass சேமிப்பிற்கும், சுமார் 10 மில்லியன் லீற்றர் உலையெண்ணெய் சேமிப்பிற்கும் பங்களிப்பு செய்துள்ளன. நிறுவனத்திற்கே உரித்தான “Steam System Scorecard” ஊடாக, 100 புள்ளிகளைக் கொண்ட ஒரு அளவுகோலின் அடிப்படையில் தொழிற்சாலைகளின் செயற்படுத்திறன் மதிப்பீடு செய்யப்படுகின்றது. இத்துறையின் சராசரி மட்டம் 70 சதவீதமாகக் காணப்படும் நிலையில், ஒவ்வொரு வாடிக்கையாளருடனான ஈடுபாட்டையும் அந்த இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு வாய்ப்பாக Forbes Marshall Lanka கருதுகின்றது. 

இந்த விருது, 2018 ஆம் ஆண்டில் நிறுவனம் இதே பிரிவில் பெற்றுக் கொண்ட வெற்றியைத் தொடர்ந்து கிடைத்திருப்பதுடன், தொழிற்துறை வலு வினைத்திறன் தொடர்பில் நிறுவனம் காண்பிக்கும் நீண்ட கால அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. Forbes Marshall International PTE Ltd, Singapore இன் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் துணை நிறுவனமாக Forbes Marshall Lanka Pvt Ltd (FML) திகழ்வதுடன், 1992 ஆம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்டது. 600 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பதுடன், செயன்முறை மற்றும் வலு வினைத்திறன் போன்றவற்றினூடாக உள்நாட்டு தொழிற்துறைக்கு ஆதரவளிக்கின்றது. இதனூடாக, உயர் கட்டமைப்பு தங்குதிறனுடன் அதிகளவு சிக்கனமான தீர்வுகளை எய்துகின்றது. தாய் நிறுவனமான Forbes Marshall, steam பொறியியல் மற்றும் செயன்முறை தன்னியக்கப்படுத்தல் போன்றவற்றில் சர்வதேச முன்னோடியாக திகழ்கிறது. 75 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டு, 19 நாடுகளில் 30 தொழிற்பிரிவுகளில் 8000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குகிறது.

Comments
0

MOST READ

காணொளி
கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

மன்னார் நகர சபை அதிரடி முடிவு!

மன்னார் நகர சபை அதிரடி முடிவு!

இன அழிப்பு செயல்பாடுகளை மகாவலி அதிகார சபை மேற்கொள்கிறது!

இன அழிப்பு செயல்பாடுகளை மகாவலி அதிகார சபை மேற்கொள்கிறது!

இலங்கை அரசின் கருத்து வேடிக்கையாக உள்ளது!

இலங்கை அரசின் கருத்து வேடிக்கையாக உள்ளது!

தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக கடனாளியாக இருக்கிறார்கள்!

தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக கடனாளியாக இருக்கிறார்கள்!

வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!

வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

title