Mar 24, 2026 - 06:01 PM -
0
இலங்கையின் முதல்தர மோட்டார் காப்புறுதி வழங்குனரும், மிகவும் நம்பிக்கையைப் பெற்ற பொதுக் காப்புறுதிதாரருமான ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் (SLICGL) நிறுவனம் நாடளாவிய ரீதியிலான சைக்கிள் சவாரியான லங்கா ரைட் 2026 நிகழ்வில் உத்தியோகபூர்வ காப்புறுதி பங்காளராக இணைந்துகொண்டது. இந்தக் கூட்டாண்மையானது ஆபத்திலிருந்து பாதுகாப்பது மற்றும் தேசிய விளையாட்டின் சிறப்பை மேம்படுத்துவதில் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டுக்கு SLICGL வழங்கும் தலைமைத்துவத்தை மீளவும் உறுதிப்படுத்துவாக அமைந்தது.
லங்கா ரைட் சைக்கிள் சவாரியானது இலங்கை விளையாட்டின் வரலாற்றில் பதிந்ததொரு நிகழ்வாகும். ‘லங்கா சவாரிய’ என முன்னர் அறியப்பட்ட இந்த நிகழ்வு, இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக லேக் ஹவுஸ் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் நாட்டின் மிகவும் நீண்ட மற்றும் தனித்துவமான சைக்கிள் சவாரியாகும்.
இலங்கையின் விஸ்தரிக்கப்பட்ட விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் ஓர் அம்சமாக தேசிய மட்ட சைக்கிள் சவாரியாக முன்னிறுத்துவதை நோக்காகக் கொண்டு அரசாங்கத்தின் அனுமதியுடன், பொலிஸ், லேக் ஹவுஸ், SLICGL உள்ளிட்ட தொடர்புடைய பங்குதாரர்களின் ஆதரவுடன் இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் என்பன இணைந்து இந்தப் போட்டியை மீண்டும் உயிர்ப்பித்துள்ளன. மூன்று நாட்களைக் கொண்ட இந்த சைக்கிள் சவாரி ஜனவரி 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இடம்பெற்றது. கொழும்பிலிருந்து கண்டி ஊடாக அனுராதபுரம் அங்கிருந்து மீண்டும் கொழும்பு என்ற வழித்தடத்தைக் கொண்டதாக கொழும்பு, கம்பஹா, கேகாலை, கண்டி, மாத்தறை, அநுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய ஏழு மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமைந்தது. இந்த சவாரியில் 26 சைக்கிள் பந்தய கழகங்கள், இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் உள்ளடங்கலாக 150ற்கும் அதிகமான சைக்கிள்பந்தய வீரர்கள் இதில் பங்கேற்றனர். இலங்கையின் விளையாட்டு நிறுவனங்களின் வலிமையையும், நாடு முழுவதும் சைக்கிள் பந்தையத்திற்குக் காணப்படும் வரவேற்பையும் இந்த சைக்கிள் சவாரி எடுத்துக்காட்டுகிறது.
காப்புறுதி பங்காளர் என்ற ரீதியில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து சைச்கிள் பந்தயவீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட விபத்துக் காப்புறுதியை SLICGL நிறுவனம் வழங்கியதுடன், வழித்தடத்திற்கான முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்ட பொலிஸ் வாகனங்களுக்கு தற்காலிக மோட்டார் காப்புறுதியை வழங்கியது.
நாடு முழுவதிலுமுள்ள விஸ்தரிக்கப்பட்ட தனது வலையமைப்பின் ஊடாக SLICGL நிறுவனத்தின் அதிகாரிகள் சைக்கிள் சவாரியின் ஆரம்பம் முதல் நிறைவு இடங்கள் வரையில் சைக்கிள் பந்தய வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களுடன் நேரடியாக ஈடுபாடுகளை மேற்கொண்டதுடன், வீதியில் மாத்திரமன்றி வீதிக்கு அப்பாலும் நம்பகமான பாதுகாவலராக நிறுவனத்தின் பங்கினை மீண்டும் வலியுறுத்தினர். ஐம்பதிற்கும் அதிகமான நிறுவனத்தின் பணியாளர்கள், முகவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சைக்கிள் பந்தய வீரர்களை உற்சாகமாக வரவேற்றதுடன், போட்டியின் போது அவர்களை ஊக்கப்படுத்தினர். இதன் ஊடாக உண்மையான கூட்டாண்மை மற்றும் சமூக உணர்வு என்பன வெளிப்படுத்தப்பட்டன.
வாழ்க்கை எதிர்பாராத திருப்பங்களை எடுக்கும் வேளைகளிலும் பாதுகாப்பு இருப்பதை அறிந்து, மக்களுக்கு மிக முக்கியமானவற்றை நம்பிக்கையுடன் தொடர்ந்து சாதிக்க உதவுவதென்பதே SLICGL நிறுவனத்தின் நோக்கம் என்பது இந்த நிகழ்வின் பங்களிப்பின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களைப் பாதுகாப்பதிலும் தேசிய அளவிலான விளையாட்டு நிகழ்வுகளுக்கு ஆதரவளிப்பதன் ஊடாக மக்களுக்கு முழுமையாக வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவது மற்றும் மேலதிக காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதே உண்மையான காப்புறுதியின் நோக்கம் என்பதை SLICGL தெளிவாக வெளிப்படுத்துகிறது.
ஆறு தசாப்தங்களுக்கு மேலான நிபுணத்துவத்தைக் கொண்ட தேசத்தின் ஆதரவைப் பெற்ற காப்புறுதிதாரரான SLICGL நிறுவனம், தொடர்ச்சியாக உயிர்களைப் பாதுகாத்து, சமூகங்களை வலுவூட்டி இலங்கையின் முன்னேற்றத்தில் கணிசமான பங்களிப்பைச் செலுத்தி வருகின்றது. ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனத்தைப் பற்றிய குறிப்பு பொதுக் காப்புறுதியில் ஆறு தசாப்தங்களுக்கு மேலான நிபுணத்துவத்தைக் கொண்ட SLICGL நிறுவனம் அதன் பலமான நிதி நிலைமை மற்றும் வாடிக்கையாளர்களை நோக்காகக் கொண்ட தன்மை என்பவற்றுக்குப் பெயர்பெற்றதாகவும், மிகவும் பெறுமதிவாய்ந்த, நம்பிக்கையைப் பெற்ற பொதுக் காப்புறுதி வர்த்தக நாமமாகவும் திகழ்கின்றது. SLICGL நிறுவனம் நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்பட்ட தனது 142ற்கும் அதிகமான கிளை மற்றும் 69 சேவை நிலையங்களின் ஊடாக மோட்டார், தீ மற்றும் பொறியியல், மருத்துவம், பொது நிறுவன விபத்து மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற பலதரப்பட்ட துறைசார்ந்த காப்புறுதித் தீர்வுகளை வழங்கி வருகின்றது. இலங்கையில் காப்புறுதித் துறையில் மிகவும் உயர்ந்த தரப்படுத்தலை அதாவது A+ Fitch தரப்படுத்தலைக் கொண்ட காப்புறுதி தாரராகவும் SLICGL விளங்குகின்றது. அது மாத்திரமன்றி இனால் மிகவும் பெறுமதிமிக்க பொதுக் காப்புறுதி வர்த்தக நாமமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு Global Brand விருதில் ‘வாடிக்கையாளர் திருப்தியைப் பெற்ற சிறந்த காப்புறுதி நிறுவனம்’ என்ற அங்கீகாரத்தையும் SLICGL நிறுவனம் பெற்றுள்ளது. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்பு மற்றும் வலிமையான பாரம்பரியத்தினால் ஆதரிக்கப்படும் SLICGL நிறுவனம், தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் புதுமைகளுக்குத் தயாராக உள்ளதுடன், இடர் பாதுகாப்பில் நாட்டின் முதல் தேர்வாகவும் விளங்குகின்றது.
