Header Logo

வணிகம்
New Anthoney's Farms அன்ரிபயோட்டிக் பாவனை இல்லாத கோழி இறைச்சி உற்பத்தியில் முன்னோடியாக மூன்றாவது வருடமாகவும் Healthy Living Expo இல் பங்கேற்பு

Mar 25, 2026 - 02:33 PM -

0

New Anthoney's Farms அன்ரிபயோட்டிக் பாவனை இல்லாத கோழி இறைச்சி உற்பத்தியில் முன்னோடியாக மூன்றாவது வருடமாகவும் Healthy Living Expo இல் பங்கேற்பு

இலங்கையின் முன்னோடியான அன்ரிபயோட்டிக், ஹோர்மோன்கள் சேர்க்காத கோழி இறைச்சி உற்பத்தியாளரான New Anthoney's Farms, இம்முறையும் Healthy Living Expo 2026இல் தனது பங்கேற்பை வெளிப்படுத்தியிருந்தது. நாட்டின் முன்னணி ஆரோக்கியம் சார்ந்த கண்காட்சியில் தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக தனது பிரசன்னத்தை வெளிப்படுத்தியிருந்தது. 2026 மார்ச் 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை இந்த கண்காட்சி கொழும்பு BMICH இல் நடைபெற்றதுடன், பொது மக்கள் பலரும் இதை இலவசமாக பார்வையிட்டனர். சர்வதேச சுகாதாரபராமரிப்பு கண்காட்சியான Medicare 2026 இன் அங்கமாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

நோய் வருமுன் காப்போம் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் Healthy Living Expo உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்பாடானது New Anthoney's Farms நிறுவனத்தின் ஸ்தாபக நோக்கத்தின் மையப்பகுதியாகக் காணப்படுகின்றது. சமையலறைக்கு வரும் முன்பு, அதாவது பண்ணையிலேயே எமது உற்பத்திச் செயற்பாடுகள் ஆரம்பமாகிவிடுகின்றன என்பதை இந்த நிறுவனம் நீண்டகாலமாக நம்பி வருகின்றது. நாம் வளர்க்கும் ஒவ்வொரு பறவையையும் பராமரித்தல், அவற்றுக்கான தீவனம் மற்றும் வளர்ப்பு முறைகளில் நிறுவனம் மேற்கொள்ளும் தீர்மானங்கள் இதற்கு சான்றாகும். எந்தவொரு கட்டத்திலும் அன்ரிபயோட்டிக்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதியான தீர்மானத்தின் மூலம், New Anthoney's Farms நிறுவனம் தான் உணவளிக்கும் குடும்பங்களின் நீண்டகால ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகின்றது. 

New Anthoney's Farms காட்சிகூடத்திற்கு வருகை தந்தவர்கள், அந்த நிறுவனத்தின் அடிப்படை விழுமியங்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டனர். தமது உணவு எங்கிருந்து வருகின்றது, அது எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது, அன்ரிபயோட்டிக் அற்ற உணவு தனிநபர் ஆரோக்கியத்திற்கும் தேசிய உணவுப் பாதுகாப்பிற்கும் ஏன் முக்கியமானது மற்றும் அன்றாட வாழ்வில் எவ்வாறு தகவலறிந்த சிறந்த முடிவுகளை எடுக்கலாம் என்பது குறித்து அவர்கள் கேட்டறிந்தனர். இந்தத் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவதை விடவும், ஒரு ஆரோக்கியமான உரையாடலைத் தொடங்குவதையே இந்தக் கூடாரத்தின் வடிவமைப்பு நோக்கமாகக் கொண்டிருந்தது; அந்த உரையாடலை முன்னெடுப்பதில் தசாப்த காலங்களாக அந்த நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. 

New Anthoney's Farms இன் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் சுரவீர கருத்துத் தெரிவிக்கையில், “மிகவும் ஆரோக்கியமான, போஷாக்கான மற்றும் பாதுகாப்பான கோழி இறைச்சியை இலங்கையின் குடும்பங்களுக்கு வழங்குவதில் 40 வருடங்களை நாம் பூர்த்தி செய்துள்ள நிலையில், Healthy Living Expo இல் நாம் மீண்டும் பங்கேற்றுள்ளமையானது, கொண்டாட்டமாகவும், எமது தரத்தை தொடர்ந்தும் உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் எப்போதும் பண்ணையிலிருந்தே ஆரம்பிக்கின்றன என்பதை நாம் எப்போதும் நம்புகின்றோம். ஆரோக்கியமான உணவு என்பது ஒரு ஆடம்பரம் அல்ல, அது ஆரோக்கியமான இலங்கையின் அடித்தளமாகும். நாம் யாருக்காக பண்ணை உற்பத்திகளை மேற்கொள்கின்றோமோ, அந்த மக்களை நேரடியாகச் சந்திக்க இந்த கண்காட்சி எமக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியது. அத்துடன், அவர்கள் உணவருந்தும் போது எடுக்கும் ஒவ்வொரு முடிவும், அவர்கள் எத்தகைய உணவு முறைமையில் வாழ விரும்புகிறார்கள் என்பதற்கான ஒரு அங்கீகாரமாகும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டவும் இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது.”என்றார். 

இந்த ஆண்டின் பங்குபற்றலானது ஒரு விசேட முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. 2026 ஆம் ஆண்டானது New Anthoney's Farms நிறுவனத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது. நான்கு தசாப்த காலங்களாக நேர்மையுடனும், இலங்கை நுகர்வோர் முழுமையாக நம்பக்கூடிய ஒரு விநியோகச் சங்கிலியைக் கட்டியெழுப்பியும் எமது பண்ணை உற்பத்திகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். தலைமுறை தலைமுறையாக நாம் வென்றெடுத்த அந்த நம்பிக்கையானது, இந்த கண்காட்சியின் ஊடாகக் கொண்டாடப்பட்டதுடன் மீளவும் உறுதிப்படுத்தப்பட்டது. இதன்போது, அன்ரிபயோட்டிக் அற்ற பண்ணை முறைமை என்பது எதனைக் குறிக்கின்றது, அதாவது குறைந்தளவிலான நுண்ணுயிர் எதிர்ப்பு அபாயம், தூய்மையான புரதம் மற்றும் குறுக்கு வழிகள் அற்ற உணவு உற்பத்தி ஆகியன குறித்து வருகை தந்தவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடப்பட்டது. 

உணவு கலாசாரப் பின்னணியிலும் இந்தத் தருணமானது மிகவும் முக்கியத்துவமானதாகும். அண்மையில் New Anthoney's Farms நிறுவனம், MasterChef Sri Lanka நிகழ்ச்சியின் உத்தியோகபூர்வ கோழி இறைச்சி பங்காளராக இணைந்தது. இந்த கூட்டாண்மையானது, எமது அன்ரிபயோட்டிக் அற்ற உற்பத்திகளை நாட்டின் மிகச்சிறந்த சமையல் கலைஞர்களின் சமையலறைகளுக்குக் கொண்டு சென்றுள்ளது. MasterChef Sri Lanka உடனான இந்த கைகோர்ப்பு, ஒரு பரந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. தூய்மையான உணவு என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் விருப்பம் மாத்திரமல்ல; அது நாட்டின் உணவு கலாசாரம் தற்போது எதிர்பார்க்கத் தொடங்கியுள்ள ஒரு தரமாகும். போட்டியாளர்கள் எவ்வாறு சமைக்கிறார்கள் என்பதுடன், சமைப்பதற்கு எதனைப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியமானதாகும். 

இந்த உறுதியான நிலைப்பாடானது கல்விசார் துறையிலும் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில், New Anthoney's Farms நிறுவனம் பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இது நிலையான கோழி வளர்ப்பு விஞ்ஞானம் தொடர்பான ஒரு முறையான ஆராய்ச்சி கூட்டாண்மையை உருவாக்கியுள்ளது. இந்த ஒத்துழைப்பானது, அன்ரிபயோட்டிக் அற்ற உற்பத்தி முறைகள் குறித்த நிறுவனத்தின் புரிதலை ஆழப்படுத்துவதுடன், எமது காலத்தின் மிக முக்கியமான பொது சுகாதார சவால்களில் ஒன்றான நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) தொடர்பான சான்றுகள் அடிப்படையிலான பரிந்துரைகளுக்கும் பங்களிக்கும். பொறுப்பான பண்ணை முறைமை என்பது ஒரு சந்தைப்படுத்தல் நோக்கம் மாத்திரமல்ல, அது அறிவியலின் பின்னணியைக் கொண்ட ஓர் அர்ப்பணிப்பு என்பதை இந்த கண்காட்சியின் ஊடாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 

Healthy Living Expo 2026 கண்காட்சியில் நல்வாழ்வு, உடற்தகுதி, போஷாக்கு மற்றும் நோய் தடுப்பு பராமரிப்பு ஆகிய துறைகளைச் சார்ந்த நிபுணர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வர்த்தக நாமங்கள் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைந்தனர். New Anthoney's Farms நிறுவனம் இதில் ஒரு பிரதான வர்த்தக நாமமாக இணைந்தது.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

title