Header Logo

விளையாட்டு
களமிறங்குகிறார் ‘தல’ தோனி!

Apr 7, 2026 - 11:59 AM -

0

களமிறங்குகிறார் ‘தல’ தோனி!

காயத்தில் இருந்து மீண்டும் வரும் தோனி எதிர்வரும் 11 ஆம் திகதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள போட்டியில் விளையாடவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

IPL 2026 தொடரில் சிஎஸ்கே அணியின் துருப்புச்சீட்டாக விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட தல தோனி காயம் அடைந்துள்ளது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எம்.எஸ். தோனி, காயம் காரணமாக முதல் இரண்டு வாரங்களுக்கு விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டது. 'எம்.எஸ். தோனி தற்போது கால் தசைப்பிடிப்பு காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், ஐபிஎல் 2026 இன் முதல் இரண்டு வாரங்களுக்கு அவர் விளையாட வாய்ப்பில்லை. விரைவில் குணமடையுங்கள், தலைவா' என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. 

இந்நிலையில், ருத்ராஜ் தலைமையில் தோனி இன்றி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளமை ரசிகர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

மீண்டும் தோனி எப்பொழுது அணிக்கு திரும்புவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 11 ஆம் திகதி மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளதாக வௌியான செய்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title