May 6, 2026 - 07:48 PM -
0
மறைந்த மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இன்று மாலை விஜய் பட்டினம்பாக்கத்தில் உள்ள தமது இல்லத்தில் இருந்து, மயிலாப்பூரில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்று அவர் அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி விபத்து ஒன்றில் நேற்று (5) உயிரிழந்த நிலையில், அவரது சடலம் மயிலாப்பூரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் சுப்பர் குட் பிளிம்ஸ் தயாரிப்பில் விஜய், பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே உள்ளிட்ட படங்களை நடித்திருந்தார்.
தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி, நடிகர் ஜீவா மற்றும் ரமேஷ் ஆகியோரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
