Header Logo

செய்திகள்
கொழும்பில் அமுலாகவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்

May 7, 2026 - 12:34 AM -

0

கொழும்பில் அமுலாகவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மே 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மே 7 ஆம் திகதி இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வியட்நாம் ஜனாதிபதியின் கொழும்பு நோக்கிய வருகையின் போதும், மே 8 ஆம் திகதி முற்பகல் மற்றும் பிற்பகல் ஜனாதிபதி செயலகம், கொழும்பு பொது நூலகம், பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகிய இடங்களுக்கான உத்தியோகபூர்வ பயணங்களின் போதும் இந்த போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, குறிப்பிடப்பட்ட நேரங்களில் சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படலாம். 

வியட்நாம் ஜனாதிபதியின் வருகைக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் குறித்த வழிகளில் கனரக வாகனங்கள் பயணிக்கத் தடை விதிக்கப்படும். 

ஜனாதிபதியின் வாகனத் தொடரணி கடந்து செல்லும் போது ஏனைய வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும். 

இதேவேளை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title