May 24, 2026 - 11:55 AM -
0
திருக்கோவில், வட்டமடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கால்நடைகளுக்குத் தீவனம் வெட்டிக்கொண்டிருந்த போதே குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கானதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 63 வயதுடைய, உனாவக்காடு பகுதியைச் சேர்ந்தவராவார்.
உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.