May 24, 2026 - 03:33 PM -
0
கண்டி, ஈ.எல். சேனாநாயக்க வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள 6 மாடிக் கட்டிடமொன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வனர்த்தம் இன்று (24) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இடிந்து விழுந்த கொன்கிரீட் துண்டுகளுக்குள் சிக்கியிருந்த ஒருவர் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மற்றொருவரும் இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் வெளிப்புறமாக நீட்டப்பட்டிருந்த கொன்கிரீட் பகுதியொன்று இடிந்து விழுந்ததே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

