Header Logo

செய்திகள்
ஹஜ், வெசாக் பண்டிகை: சிறைக்கைதிகளுக்கு விசேட பார்வையாளர் சலுகை

May 25, 2026 - 05:35 PM -

0

ஹஜ், வெசாக் பண்டிகை: சிறைக்கைதிகளுக்கு விசேட பார்வையாளர் சலுகை

எதிர்வரும் ஹஜ் பெருநாள் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் உள்ள கைதிகள் தங்களது உறவினர்களைச் சந்திப்பதற்கான விசேட வாய்ப்பொன்றை சிறைச்சாலைகள் திணைக்களம் வழங்கியுள்ளது. 

இதற்கமைய, மே 28 மற்றும் மே 30 ஆகிய இரு தினங்களிலும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த விசேட பார்வையாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளது. 

இத்தினங்களில் கைதிகளைப் பார்ப்பதற்கு வரும் உறவினர்கள், அவர்களுக்கான உணவு மற்றும் இனிப்புப் பண்டங்களைக் கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அவை ஒரு கைதிக்கு மாத்திரம் போதுமான அளவில் வழங்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த நடவடிக்கைகள் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும், சிறைச்சாலை விதிகளுக்கு உட்பட்டும் முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title