May 25, 2026 - 07:46 PM -
0
மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள இலங்கை அணியின் போட்டித் தொடருக்கான ஒருநாள், சர்வதேச இருபதுக்கு-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான குழாம்களை இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மூன்று வடிவங்களையும் கொண்ட இந்த போட்டித் தொடரில், முதலாவதாக ஒருநாள் தொடரும், அதனைத் தொடர்ந்து இருபதுக்கு-20 தொடரும், இறுதியாக டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளன.
இப்போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி நாளை (26) மேற்கிந்தியத் தீவுகள் நோக்கி நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 அணிகளின் தலைவராக அனுபவமிக்க வீரர் குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் டெஸ்ட் அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ குழாம்கள் பின்வருமாறு:
டெஸ்ட் குழாம்
டெஸ்ட் அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா செயற்படவுள்ளதுடன், உப தலைவராக கமிந்து மெண்டிஸ் செயற்படுவார்.
பெதும் நிஸ்ஸங்க
லஹிரு உதார
நிஷான் மதுஷ்க
தினேஷ் சந்திமால்
பசிந்து சூரியபண்டார
கமிந்து மெண்டிஸ் - (உப தலைவர்)
சொனால் தினூஷ
குசல் மெண்டிஸ்
தனஞ்சய டி சில்வா - (தலைவர்)
மிலான் ரத்நாயக்க
பிரபாத் ஜெயசூரிய
ரமேஷ் மெண்டிஸ்
அசித்த பெர்னாண்டோ
விஷ்வ பெர்னாண்டோ
லஹிரு குமார
இசித்த விஜேசுந்தர
கசுன் ராஜித
ஒருநாள் குழாம் (ODI)
ஒருநாள் அணியின் தலைமைத்துவம் குசல் மெண்டிஸிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் உப தலைவராக கமிந்து மெண்டிஸ் செயற்படுவார்.
பெதும் நிஸ்ஸங்க
கமில் மிஷார
பவன் ரத்நாயக்க
குசல் மெண்டிஸ் - (தலைவர்)
ஜனித் லியனகே
சரித் அசலங்க
கமிந்து மெண்டிஸ் - (உப தலைவர்)
மிலான் ரத்நாயக்க
வனிந்து ஹசரங்க
துனித் வெல்லாலகே
மஹீஷ் தீக்ஷன
துஷ்மந்த சமீர
டில்ஷான் மதுஷங்க
எஷான் மாலிங்க
அசித்த பெர்னாண்டோ
பிரமோத் மதுஷான்
இருபதுக்கு-20 குழாம் (T20I)
இருபதுக்கு-20 அணிக்கும் குசல் மெண்டிஸ் தலைமை தாங்கவுள்ளதுடன், கமிந்து மெண்டிஸ் உப தலைவராகச் செயற்படுவார்.
பெதும் நிஸ்ஸங்க
கமில் மிஷார
லசித் குரூஸ்புள்ளே
பவன் ரத்நாயக்க
குசல் மெண்டிஸ் - (தலைவர்)
கமிந்து மெண்டிஸ் - (உப தலைவர்)
தசுன் ஷானக்க
மிலான் ரத்நாயக்க
துனித் வெல்லாலகே
வனிந்து ஹசரங்க
மஹீஷ் தீக்ஷன
துஷ்மந்த சமீர
டில்ஷான் மதுஷங்க
எஷான் மாலிங்க
பினுர பெர்னாண்டோ
நுவன் துஷார


