Header Logo

இந்தியா
இந்தியா முழுவதும் தொடர்ந்து 2வது நாளாகவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

May 26, 2026 - 07:01 AM -

0

இந்தியா முழுவதும் தொடர்ந்து 2வது நாளாகவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் (26) உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

நேற்று (25) இந்தியா முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு 2.46 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2.57 ரூபாயும் உயர்த்தப்பட்டது. கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 5வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. 

அதன்படி, இந்தியா முழுவதும் தொடர்ந்து 2வது நாளாக இன்று பெட்ரோல் லிட்டருக்கு 34 சதமூம், டீசல் லிட்டருக்கு 23 சதமும் உயர்த்தப்பட்டுள்ளது. 

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 34 சதம் உயர்த்தப்பட்டு ரூ. 108.01க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் லிட்டருக்கு 23 சதம் உயர்த்தப்பட்டு ரூ. 99.78க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றத்தால் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலர்களை கடந்து வர்த்தகமாகி வருகிறது. இந்த விலை ஏற்றத்தால் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பதாக இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ

காணொளி
மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

title