May 26, 2026 - 12:51 PM -
0
அ.தி.மு.க.வில் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பின் தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் மூவரும் த.வெ.க. இணைந்தனர்.
இதனை தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள், கட்சித் தாவல் புகர் உள்ள எம்.எல்.ஏ.க்களின் இராஜினாமாவை ஏற்கக்கூடாது என வலியுறுத்தினர்.
இதற்கிடையே, இன்று (26) 3 பேர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், அம்பை அ.தி.மு.க. தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தார். ஆனால் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அக்கடிதத்தை பெற மறுத்து விட்டார். இராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதாமல் தட்டச்சு செய்து எடுத்து வந்ததால் அதனை வாங்க சபாநாயகர் மறுத்து விட்டார்.
இதனால் இராஜினாமா கடிதத்தை அளிக்காமல் இசக்கி சுப்பையா திரும்பினார். சற்று நேரத்தில் தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை, சபாநாயகரிடம் இசக்கி சுப்பையா வழங்கினார். இதனால் 2 நாட்களில் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 16 ஆக குறைந்தது
2011, 2021, 2026 தேர்தல்களில் அம்பை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் இசக்கி சுப்பையா என்பது குறிப்பிடத்தக்கது.

