Header Logo

செய்திகள்
ராஜிதவின் வெளிநாட்டுப் பயணத் தடையில் தளர்வு

May 26, 2026 - 02:47 PM -

0

ராஜிதவின் வெளிநாட்டுப் பயணத் தடையில் தளர்வு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக தளர்த்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ராஜித சேனாரத்னவின் சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை, இன்று (26) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டது. 

இதன்போது, தனது கட்சிக்காரர் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டார். 

அதற்காக, தற்போது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக தளர்த்துமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். 

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கவனத்தில் கொண்ட பிரதான நீதவான், சந்தேகநபருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் மாதம் 02 ஆம் திகதி வரை தற்காலிகமாக தளர்த்துமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டார்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

title