May 26, 2026 - 05:31 PM -
0
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நேற்று (25) விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நான்கு மாவட்டங்களின் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் இந்த அபாய எச்சரிக்கையை விடுக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது நாளை (27) பிற்பகல் 4.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி, அயகம மற்றும் எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள விபரம் பின்வருமாறு:
களுத்துறை மாவட்டம்: மத்துகம மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகள்.
கேகாலை மாவட்டம்: தெரணியகல, யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, ருவான்வெல்ல மற்றும் புலத்கொஹுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகள்.
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு.
இரத்தினபுரி மாவட்டம்: எலபாத, நிவித்திகல, பெல்மதுல்ல, கிரியெல்ல மற்றும் கலவான பிரதேச செயலாளர் பிரிவுகள்.

