Header Logo

செய்திகள்
80 மில்லியன் ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் ஒருவர் கைது

May 26, 2026 - 07:24 PM -

0

80 மில்லியன் ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் ஒருவர் கைது

குஷ் ரக போதைப் பொருளை பெருமளவில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து இலங்கை வந்தடைந்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சந்தேகநபரின் பயணப் பொதியைச் சோதனையிட்ட போது, 19 பெக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த மொத்தம் 8.365 கிலோகிராம் எடையுடைய 'குஷ்' போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் மதிப்பிடப்பட்ட பெறுமதி 80 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்திலுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம்   ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

MOST READ

காணொளி
மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

title