Header Logo

வடக்கு
புதிய எக்கோ இயந்திரம் அன்பளிப்பு

May 27, 2026 - 04:28 PM -

0

புதிய எக்கோ இயந்திரம் அன்பளிப்பு

யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவுக்கு புதிய எக்கோ இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 

அவுஸ்ரேலியாவிலுள்ள எமரல் காடியாக் என்ற நிறுவனத்தினால் நன்கொடையாக 16 மில்லியன் ரூபா பெறுமதியான குறித்த இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் யாழ்ப்பாண, போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான இதய நோய் சார்ந்தவர்களுக்கான சிகிச்சையினை வழங்க முடியும் எனவும், குறித்த இயந்திரமானது இருதய சிகிச்சை பிரிவிற்கு மிகவும் அவசியமானதாக காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். 

அத்துடன் இருதயத்தின் செயற்பாடுகள் பற்றி மிக துல்லியமாக அறிந்து கொள்வதற்கு இந்த இயந்திரம் பயன்படும் என குறிப்பிட்ட பணிப்பாளர் குறித்த இயந்திரத்தினை வழங்கிய நிறுவனத்திற்கும் அதனைப் பெற்றுக் கொடுத்த அன்பாலயம் அமைப்பிற்கும் தனது நன்றியினை தெரிவித்தார். அத்தோடு இன் இயந்திரத்தின் ஊடாக ஒரு நாளைக்கு 60 இற்கு மேற்பட்டோர் பயன்பெறுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

--

MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title