Header Logo

செய்திகள்
பொலிஸ் மா அதிபரின் பெயரை பயன்படுத்தி கப்பம் - விசாரணை ஆரம்பம்

May 27, 2026 - 04:45 PM -

0

  பொலிஸ் மா அதிபரின் பெயரை பயன்படுத்தி கப்பம் - விசாரணை ஆரம்பம்

பொலிஸ் மா அதிபரின் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி செயற்பட்டு வரும் சைபர் அச்சுறுத்தல் மற்றும் கப்பம் பெறும் வலையமைப்பொன்று குறித்து பொலிஸ் விசேட அதிரடிப்படை விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது. 

இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பொலிஸார், குறித்த படையணியின் சைபர் பாதுகாப்பு மற்றும் திறந்த மூல புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். 

இதன்போது, பொலிஸ் சைபர் குற்றவியல் ஒருங்கிணைப்பு மையம் மற்றும் பொலிஸ் மா அதிபரின் பெயர் மற்றும் போலி கையெழுத்தைப் பயன்படுத்தி அனுப்பப்பட்ட கப்பம் பெறும் மின்னஞ்சல் வலையமைப்பு குறித்த தகவல்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. 

இவ்வாறான செயற்பாடுகளினால் பொலிஸ் திணைக்களத்தின் கீர்த்திநாமத்திற்கும் பொதுமக்களின் நம்பிக்கைகும் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என அவதானிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறான சந்தேகத்திற்கிடமான, அச்சுறுத்தல்மிக்க அல்லது அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் (Email) தொடர்பாக: 

தேவையற்ற முறையில் அச்சமடையவோ அல்லது பதற்றமடையவோ வேண்டாம் எனவும், 

அந்தச் செய்திகளுக்குப் பதிலளிப்பதையோ அல்லது அவர்கள் கோரும் பணத்தைச் செலுத்துவதையோ தவிர்க்குமாறும், 

அந்த மின்னஞ்சல் செய்திகளில் உள்ள இணைப்புகளுக்குள் (Links) நுழைவதைத் தவிர்க்குமாறும், 

இவ்வாறான குற்றங்கள் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ, இலங்கை பொலிஸின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கோ அல்லது பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கோ அறியத்தருமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக, இந்த மோசடிக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இலங்கை பொலிஸார் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MOST READ

காணொளி
அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

title