Header Logo
வணிகம்
கொமர்ஷல் வங்கி அருணலு சித்திரம் 2026 மூலம் இளம் திறமையாளர்களைத் தொடர்ந்து ஊக்குவித்துவருகின்றது

Aug 10, 2026 - 11:32 AM

கொமர்ஷல் வங்கி அருணலு சித்திரம் 2026 மூலம் இளம் திறமையாளர்களைத் தொடர்ந்து ஊக்குவித்துவருகின்றது
Mobitel inner

கொமர்ஷல் வங்கியானதுஇ இலங்கையின் பிரத்யேகமான மற்றும் பரந்துபட்ட சிறுவர் கலைப் போட்டிகளில் ஒன்றான அருணலு சித்திரம் 2026 சித்திரப் போட்டியினை மீண்டும் இவ்வருடமும் அறிவித்தள்ளது. இது, சிறுவர்களுக்கு அவர்களின் கற்பனைகளை ஓவியங்களாக மாற்றுவதற்கான ஓர் அரிய சந்தர்ப்பத்தை வழங்குகிறது. 

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் 4 முதல் 16 வயதிற்குட்பட்ட இலங்கைச் சிறுவர்கள் தமது ஓவியத்திறனை வெளிப்படுத்துவதற்கு இப்போட்டியானது ஒரு சிறந்த தளமாக அமைகின்றது. இப்போட்டியில் பங்குபற்றுவதன் மூலம் 4.8 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மொத்தப் பணப்பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வெல்லும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளமுடியும். போட்டிப் பதிவுகளுக்கான இறுதித் திகதி 2026 செப்டம்பர் 15 ஆகும். பங்குபற்றுபவர்களுக்கு மிகவும் இலகுவான பொறிமுறையில் நடத்தப்படும் அருணலு சித்திரம் 2026, முழுமையாக நிகழ்நிலையில் நடைபெறுகின்றது. போட்டியாளர்கள் தமது ஓவியங்களை ஸ்கேன் செய்து, தேவையான விவரங்களுடன் www.arunalusiththam.lk என்ற பிரத்யேக இணையத்தளத்தில் இறுதித் திகதிக்கு முன்னர் பதிவேற்ற முடியும். 

இவ்வருடப் போட்டியானது, சிறுவர்களின் சிந்தனைத் திறனைத் தூண்டும் வகையில் வெவ்வேறு வயதுப் பிரிவினருக்கு ஏற்ப பின்வரும் தலைப்புகளைக் கொண்டுள்ளது; 4 முதல் 7 வயது வரை: சுய விருப்பத் தலைப்பு. 8 முதல் 10 வயது வரை: அழகிய வீட்டுத் தோட்டம். 11 முதல் 13 வயது வரை: சிறுவர் பாதுகாப்பு. 14 முதல் 16 வயது வரை: இடப்பெயர்வு. சமர்ப்பிக்கப்படும் ஓவியங்கள் அனுபவம் வாய்ந்த நடுவர் குழுவினால் மதிப்பீடு செய்யப்படும். வெற்றியாளர்கள் முதலில் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு, பின்னர் தேசிய மட்டப் போட்டிக்கு தகுதி பெறுவர். இப்போட்டியானது கலைத்திறன் மற்றும் தனித்துவத்தைப் பாராட்டுவதுடன், சிறுவர்கள் ஆழமாகச் சிந்தித்துத் தமது கருத்துக்களை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்த ஊக்குவிக்கிறது. 

கடந்த வருடத்தைப் போலவே, இம்முறையும் வெகுமதியான பரிசுகள் வழங்கப்படவுள்ளன. பிரதான வயதுப் பிரிவுகளில் தேசிய மட்டத்தில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் வெற்றியாளர்களுக்கு முறையே ரூ. 100,000, ரூ. 75,000 மற்றும் ரூ. 50,000 பணப் பரிசுகள் வழங்கப்படும். மாகாண மட்டத்தில், ஒன்பது மாகாணங்களிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வெற்றியாளர்களுக்கு முறையே ரூ. 25,000, ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 வீதம் வழங்கப்படும். இந்தப் பிரிவுகளில், நான்காவது முதல் பத்தாவது இடம் வரை பெறுபவர்களுக்குத் திறமைச் சான்றிதழ்களும் வழங்கப்படும். 

முன்பள்ளிப் பிரிவில், தேசிய மட்டத்தில் வெற்றிபெறும் முதல் மூன்று வெற்றியாளர்கள் தலா ரூ. 75,000 வீதமும், மாகாண மட்டத்தில் முதல் மூன்று வெற்றியாளர்கள் தலா ரூ. 15,000 வீதமும் பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக, இந்த விருதுகள் இளம் திறமையாளர்களுடைய முன்னேற்றப் பாதையின்; ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படுத்தப்படும் மிகச்சிறந்த முயற்சியைக் கௌரவிப்பதுடன், வளர்ந்து வரும் திறமைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, அடுத்த தலைமுறை சாதனையாளர்கள் மேலும் பல சாதனைகளைப் படைக்க ஊக்கமளிக்கின்றன. 

சிறுவர்களின் ஆக்கத்திறனை வளர்ப்பதில் பாடசாலைகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகளவான ஓவியங்களைச் சமர்ப்பிக்கும் பாடசாலைக்கு 50,000 ரூபா பணப் பரிசில் வழங்கப்படும். 

சர்வதேச ரீதியிலான பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைச் சிறுவர்களுக்காக ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் தெரிவு செய்யப்படும் சிறந்த ஓவியத்திற்கு 50,000 ரூபா பணப்பரிசில் வழங்கப்படும். 

போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு அனைத்துச் சிறுவர்களுக்கும் வழங்கப்படும் அதேவேளை, கொமர்ஷல் வங்கியின் அருணலு அல்லது இசுறு சிறுவர் சேமிப்புக் கணக்குகளைப் பேணும் வெற்றியாளர்களுக்கு மேலதிக விசேட பரிசில்கள் வழங்கப்படும் எனவும் வங்கி அறிவித்துள்ளது.


MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara