Header Logo
பல்சுவை
பூசணி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்!

Aug 10, 2026 - 12:41 PM

பூசணி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்!
Mobitel inner

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளில் ஒன்று பூசணி விதை. இதய ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல கொழுப்புகள், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், வைட்டமின் இ போன்ற சத்துக்களை கொண்டது. பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகளை பார்ப்போம். 

வைட்டமின் இ, பீட்டா கரோட்டீன் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் பூசணி விதையில் அதிகம் உள்ளன. இவை உடலில் ஏற்படும் அழற்சியை குறைத்து, செல்கள் சேதமடைவதை தடுக்க உதவக்கூடும். 

பூசணி விதையில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவிடும், இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவக்கூடும். 

பூசணி விதைகளில் டிரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது உடலில் செரோட்டோனின் உற்பத்திக்கு உதவுவதால், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தக்கூடும். 

வைட்டமின் இ மற்றும் துத்தநாகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவும். குறிப்பாக பருவகால காய்ச்சல் மற்றும் தொற்றுகள் பரவும் காலங்களில் பூசணி விதையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

பூசணி விதையில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கலை தடுக்கவும், குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்கவும் உதவும். போதுமான அளவு தண்ணீர் குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும். 

சில ஆய்வுகளின்படி, பூசணி விதைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவக்கூடும். குறிப்பாக டைப்-2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக பூசணி விதையை அளவோடு சேர்த்துக் கொள்ளலாம்.

MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara