Aug 10, 2026 - 12:55 PM

சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் பாணதுற - மோதரவில தொடர்மாடி குடியிருப்பில் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 வயதான இந்த இளைஞனை பாணதுற, ஹொரண பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் இருந்து 810 சட்டவிரோத போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன் 2 வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர் ஒழுங்க மைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவின் அங்கத்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களும் பாணதுற தெற்கு பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.













