Aug 12, 2026 - 06:43 PM

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார் மீது இன்று (15) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், பெக்கோ சமன் என்ற நெதுன்கொட நிர்மல பிரசன்ன என்பவரும் அக்குழுவில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


















