Header Logo
செய்திகள்
ரத்மலானை கொலைக்கு உதவி புரிந்த இருவர் கைது

Aug 14, 2026 - 10:56 AM

ரத்மலானை கொலைக்கு உதவி புரிந்த இருவர் கைது
Mobitel Inner 1278

ரத்மலானை கந்தவல சந்தைக்கு அருகில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகநபர்கள் இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 1ஆம் திகதி கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மலானை கந்தவல சந்தைக்கு அருகில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகக் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். 

விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (13) இந்தக் குற்றத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் ஒரு சந்தேகநபர் ரத்மலானைப் பகுதியில் 22 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

மற்றொரு சந்தேகநபரை அன்றைய தினமே தெஹிவளைப் பகுதியில் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் 41 மற்றும் 48 வயதுடைய தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்தவர்களாவர். 

இந்தச் சந்தேகநபர்கள் குற்றத்திற்காகத் துப்பாக்கிகளைக் கடத்திச் சென்றுள்ளமை, அத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மறைந்திருப்பதற்கு தேவையான வசதிகளைச் செய்து உதவி ஒத்தாசை புரிந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

Mobitel 1278