Header Logo
SLIC
செய்திகள்
எல்நினோ தாக்கத்தினால் 81 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

Aug 24, 2026 - 06:50 AM

எல்நினோ தாக்கத்தினால் 81 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

குறித்த 7 மாவட்டங்களில் உள்ள 23 பிரதேச செயலகப் பிரிவுகள் வறண்ட காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது. 

அத்துடன், 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 பேர் எல் நினோ நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. 

இந்தத் தாக்கத்தின் காரணமாக 20 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீரை விநியோகிக்கவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைவாக, 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 பேருக்குக் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, அதிகளவிலான குடிநீர் மொனராகலை மாவட்டத்திற்கே விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள 7 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 10,264 குடும்பங்களைச் சேர்ந்த 33,023 பேருக்குக் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 9,547 குடும்பங்களை உள்ளடக்கிய 28,523 பேருக்குக் குடிநீர் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அம்பாறை மாவட்டத்தின் 02 பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள 2,537 குடும்பங்களைச் சேர்ந்த 7,882 பேருக்கும் அதிகளவில் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278